My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

எது சந்திர கேந்திரம்?

எது சந்திர கேந்திரம்?

ஜோதிடத்தில் கேந்திரம் மற்றும் கோணம் என்று 2 இட வகைகள் உள்ளது இதில் கேந்திரம் எனப்படுவது 1, 4, 7, 10 மற்றும் கோணம் எனப்படுவது 1, 5, 9. என் குருநாதர் ஜோதிடக்கலை அரசு  திரு.ஆதித்ய குருஜி அவர்களின் பாதகாதிபதி தத்துவம் கேந்திர கோணத்தை வைத்துதான்.  ஒளி கிரகமான சந்திரன் தான் இருக்கும் இடத்திற்கு 4, 7, 10 ஆகிய இடங்களில் இருக்கும் கிரகங்களை தனது ஒளியால் சுபத்துவம் படுத்துகிறது இதுவே சந்திர கேந்திரத்தின் சிறப்புத்தன்மை 


என் குருநாதர் ஜோதிடக்கலை அரசு  திரு.ஆதித்ய குருஜி அவர்கள் சொல்வது போல ஜோதிடம்  எண்களுக்குள்ளோ கட்டங்களுக்குள்ளோ இல்லை ஏனென்றால் ஜோதிடம் ஒரு மாபெரும் விஞ்ஞானம் ஒளி கலப்பினால்  கிரகங்களுக்கு ஏற்படும் மாற்றமே கிரகங்களின் காரகத்துவம் ஆகும்  இதுதான் எனது புரிதல்.


ஜோதிடத்தில் ஒரு கிரகத்தின்  பாகை மற்றும் கலை மிகவும் முக்கியம் ஏனென்றால் இதை வைத்துதான் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு எந்த அளவு நெருங்கி இருக்கிறது அதாவது ஒளி கலப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு அந்தந்த கிரகங்களின்  நல்ல மற்றும் கெட்ட காரகத்துவங்கள் அமைகிறது. 


இதை ஒரு உதாரணத்தை வைத்து பார்ப்போம். வளர்பிறை சந்திரன் சிம்மத்தில், கும்பத்தில் செவ்வாய், மற்றும் ரிஷபத்தில் சூரியன் புதன். சந்திரன் செவ்வாய் நேருக்கு நேர் பார்க்க சந்திரன் மூலம் செவ்வாய் சுபத்துவம் அடைகிறார் மற்றும் 3 கிரகங்களுக்கும் சந்திரனின் ஒளி கிடைக்கிறது. இதுவே சந்திர கேந்திரம் எனப்படுவது. பொதுவாக சந்திரன் நமது அருகில் இருக்கும் துணை கிரகம் என்பதால் ஜோதிடத்தில் சந்திரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு, சந்திரன் எத்தகைய ஒளி தன்மையுடன் இருக்கிறார் என்பதைப் பொருத்து சந்திரனுக்கு நேரே  6, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் கிரகங்கள் சுபத்துவம் அடையும்.  பவுர்ணமிக்கு முன் இரண்டு நாள் முதல் பவுர்ணமி முடிந்த பின் இரண்டு நாள் வரை சந்திரன் தனக்கு நேரில்  6, 7, 8 இடங்களில் இருக்கும் சுப மற்றும் பாவ கிரகங்களை சுபத்துவம் படுத்துகிறார். ஆனால் சிறு கேந்திரம் எனப்படும் 4-ம் இடத்திற்கும், பெரும் கேத்திரம் எனப்படும் 10-ம் இடத்திற்கும் சந்திரனின் 50% ஒளி சில குறிப்பிட்ட டிகிரி வரையில் மட்டுமே இருக்கும்.


இங்கு காட்டப்பட்டுள்ள ஜாதகத்தில் புதன் (1’) மற்றும் சூரியன் (28’)  ரிஷபத்தில், சந்திரன் (29’15’)  சிம்மத்தில், மற்றும் செவ்வாய் (1’) கும்பத்தில் இருக்கிறார்கள் என்று உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம் மேலோட்டமாக பார்த்தால் சந்திரனுக்கு செவ்வாய் புதன் சூரியன் அனைவரும் கேந்திரத்தில் இருப்பது போல் தோன்றும் ஆனால்  புதன் முழுமையாக சந்திர கேந்திரத்தில் இல்லை, ஏனென்றால் சந்திரனுக்கும் புதனுக்கும் ஏறக்குறைய 118 டிகிரிக்கு மேல்  இடைவெளி இருக்கிறது. பொதுவாக கேந்திரம் என்று நம் கணக்கிடும்போது 90 டிகிரிகள் இடைவெளி இருக்கவேண்டும் இது சமசப்தம கேந்திரம். 90’  டிகிரிக்கு முன்பின் 5 அல்லது 10 டிகிரி எடுத்துக்கொள்ளலாம் அதாவது 80 முதல் 100 வரை. 80’ டிகிரிக்கு முன் மற்றும் 100 டிகிரிக்கு பின் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருக்கும் கிரகம், சந்திரனின் முழு கேந்திர ஒளியை அடைய முடியாது. அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தின்படி சந்திர கேந்திரத்தில் புதன் இருக்க ஜாதகர் புத்திசாலி என்று எடுத்துக் கொண்டோமேயானால் இங்கு நாம் எதிர்பார்த்த புத்திசாலித்தனம் இருக்காது, மற்றும் செவ்வாய் இங்கு ஓரளவு சுபத்துவ படுவார் ஏனென்றால் சந்திரனின் நேர் பார்வைக்கும் கேந்திர ஒளிக்கும் வித்தியாசம் இருக்கிறது.



இதுவும் சந்திர கேந்திரம் தான், இதில் சந்தேகம் என்றால் உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று அண்ணார்ந்து பாருங்கள் அங்கே கட்டம் இல்லை எண்கள் இல்லை, கிரகங்கள் மட்டுமே உள்ளது. இது போன்ற நிலையில் தான் பலன்கள் மாறுகின்றன அல்லது பலன்கள் வேறுபடுகின்றன. கட்டத்தை வைத்து பார்த்தால் இது சந்திர கேந்திரம் இல்லை ஆனால் டிகிரியை வைத்து பார்த்தால் இது சந்திர கேந்திரம்.


இதுவே என்னுடைய புரிதல் சந்திர கேந்திரத்தை பற்றி..

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2433481302961543 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply