ஜாதகப்படி நாக தோஷம் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு மிகுந்த கருத்து வேறுபாடுகள் உள்ளன நான் இதில் என்னுடைய புரிதலை சொல்கிறேன்..
உதாரணத்திற்கு மேஷம் லக்னத்தை எடுத்துக்கொள்வோம் ராகு அல்லது கேது லக்னத்திற்கு 1, 2, 7, 8 ஆகிய இடங்களில் இருந்தால் நாக தோஷம் உண்டு என்று கருத்து உள்ளது அதாவது ராகுவோ அல்லது கேதுவோ ஒருவருடைய லக்னத்திற்கு 1,2, 7, 8 ஆகிய இடங்களில் இருப்பது. இந்தக் கருத்தை நாம் சற்று விவரித்து பார்ப்போம்.
பொது விதி
“இருக்கும் வீட்டின் அதிபதி போலவும், தன்னை பார்க்கும் கிரகத்தின் பலனையும் மற்றும் வீடு கொடுத்தவன் நிலையையும் பொருத்துதான் ராகு கேதுக்கள் தங்கள் பலனை செய்வார்கள்”
ராகுவிற்கு உகந்த ராசிகள் மேஷம் முதல் கன்னி வரை. கேதுவுக்கு உகந்த ராசிகள் கன்னி முதல் மீனம் வரை. இதில் கன்னி ராசி மட்டும் ராகு-கேது இருவருக்கும் உகந்த ராசி அதாவது இவர்கள் கண்ணில் இருந்தால் தன் இயல்பை செய்வார்கள், இதிலும் ராகு கேதுக்கள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் இந்த ஐந்து இடங்கள் இவர்களுக்கு பிடித்தமானது, அதாவது தன் இயல்பை செய்யக்கூடிய இடங்கள். ஒருவருடைய லக்னத்திற்கு இந்த ஐந்து வீடுகளில் ஏதாவது 1 நட்பு வீடுகளாக இருந்து அந்த வீடுகளில் ராகு அல்லது கேது அமர்ந்து தசை நடத்தும் பொழுது வீடு கொடுத்தவன் உச்சமானால் ராகு கேதுக்கள் மிகுந்த நன்மைகளை செய்வார்கள் என்பது ஒரு விதி. ஜோதிடத்தில் எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உள்ளது ஆகையால் நான் மேலே சொன்ன கருத்தை ஒரு ஜாதகத்தில் பொருத்திப் பார்க்கும் பொழுது விதிவிளக்கையும் கருத்தில் அல்லது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
ஒரு இடத்தில் ராகு இருக்கும்பொழுது 7-ல் கேது இருப்பார் ஏனென்றால் ராகு கேது தங்களுக்கிடையே 180 டிகிரியில் இருப்பார்கள், இந்நிலையில் ராகு கேதுக்களுக்கு வீடு கொடுத்த கிரகங்களின் இருப்பிடத்தை கொண்டும் லக்னாதிபதியின் நிலையை கொண்டும் ராகு கேது தன் தசையில் வேலையை செய்வார். ராகு கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் நீச்சம் அல்லது பகை வீட்டிலோ அல்லது பங்கம் பெற்றாலோ அல்லது மறைவு பெற்றாலோ ராகு கேது தனது தசையில் அல்லது புக்திகளில் இருக்கும் வீட்டின் ஆதிபத்திய காரகத்துவங்களை கொண்டு உங்களை கெடுப்பார் என்பது தோஷம். அதுபோல் ஏழாம் வீடு எப்பொழுதுமே எதிர் அணி ராசி வீடுகளாக அமையும் பெரும்பாலும் பகை வீடுகள்தான் அமையும் உதாரணத்திற்கு மகர லக்னத்திற்கு 7ஆம் வீடு கடகம், சனியின் ஜென்ம விரோதியான சந்திரன், தனுசு லக்னத்திற்கு ஏழாம் வீடு மிதுனம் அதாவது குருவின் விரோதியான புதன்.
மற்றும் இந்த வீடு ராகு-கேதுவிற்கு எவ்விதமான வீடுகள் அதாவது மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மற்றும் மகரம் வீடுகளை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு வீதியில் ஜோதிடத்தை முழுவதும் சொல்ல முடியாது ஆகையால் எல்லாவிதமான கிரகங்களின் நிலையையும் வைத்துக்கொண்டுதான் ஒரு கிரகத்தின் செயல்பாடை சொல்லமுடியும்
ஏன் ராகு-கேதுக்கள் 1,2,7,8 இடங்களில் இருந்தால் தோஷம்?
நான் மேலே சொன்னது போல ஜோதிடத்தில் எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு இருக்கிறது பொதுவாக ஒரு செயலுக்கு ஒரு கிரகம் காரணம் ஆகாது குறைந்தபட்சம் மூன்று கிரகங்கள் ஒரு செயலை குறிப்பிடுகிறது அதாவது வீட்டில் நின்ற கிரகம், வீடு கொடுத்த கிரகம் மற்றும் காரகத்துவ கிரகம்.
1-ஆம் இடம் அதாவது லக்னம் உங்களை குறிக்கிறது, மேலே சொன்ன பொது விதியை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் லக்னாதிபதியின் நிலையை பொருத்து ராகு கேதுக்கள் லக்னாதிபதி மற்றும் 7-ஆம் அதிபதி போலவே அவர்கள் செயல்படுவார்கள்
2-ஆம் இடம் குடும்ப ஸ்தானம் எனப்படுவது, தனம், குடும்பம், வாக்கு ஆகிய முதல் மூன்று ஆதிபத்திய காரகத்துவம். இந்த 2ஆம் இடத்தில் அமரும் ராகு அல்லது கேதுவோ மேலே சொன்ன விதிப்படி ஒரு நல்ல அமைப்பில் இல்லாவிடில் இந்த மூன்று உயிர் காரகத்துவங்களை அவர்கள் எடுப்பார்கள் அதாவது தனம் கெடும் குடும்பம் அமையாது அல்லது கெடும் வாக்கில் சுத்தம் இருக்காது.
7-ஆம் இடம் களத்திர ஸ்தானம் எனப்படுவது, கணவன்/மனைவி, பங்குதாரர்கள் மற்றும் நண்பர்கள் ஆகிய முதல் மூன்று ஆதிபத்திய காரகத்துவம். இவ்விடத்தில் உள்ள ராகு கேதுக்கள் வீடு கொடுத்தவரின் நிலையைப் பொறுத்து இந்த உயிர் காரகத்துவங்களை வளர்க்கும் அல்லது கெடுக்கும். பெரும்பாலும் இதுவே திருமணம் தாமதமாவதற்கு ம் திருமணம் ஆனபின் முறிவு அல்லது பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகிறது..
8-ஆம் இடம் ஆயுள் ஸ்தானம் எனப்படுவது, ஆயுளை குறிக்கிறது. கெட்ட காரகத்துவங்கள் அசிங்கம், அவமானம், கடன், நோய், எதிரி போன்றவை நல்ல காரகத்துவங்கள் ஆயுள், பிரதேசவாதம் அதாவது வெளிநாடு, எதிர்பாராத அதிர்ஷ்டம் போன்றவை ஆகையால் இவ்விடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமரும்பொழுது இந்த காரகத்துவங்களை அவர்கள் மேலே சொன்ன “பொது விதியின்” படி பெருகுவார்கள், ராகு கேதுக்கள் ஒரு மோசமான நிலையில் இருந்தால் ஆயுள் குற்றம் கூட உண்டாகும்..
தோஷத்திற்கு பரிகாரம் உண்டா? தோஷம் முற்றிலும் அகலுமா?
பொதுவாக ராகு கேது பரிகார ஸ்தலங்கள் காளஹஸ்தி என்று சொல்வார்கள் ஆனால் ராகுவிற்கு உகந்த பரிகார ஸ்தலம் திருநாகேஸ்வரம் மற்றும் கேதுவிற்கு உகந்த பரிகாரஸ்தலம் கீழப்பெரும்பள்ளம் என்ற இடத்தில் உள்ளது. ஐயா திரு மு. மாதேஸ்வரன் தான் அனுபவத்தில் கண்டறிந்து சொல்வதுபோல், ராகு கேதுக்களுக்கு சீர்காழி கடைவீதியில் உள்ள நாகேஸ்வரமுடையார் ( பாம்புகோவில்) திருக்கோவில் ராகு கேது இருவரும் உள்ளனர் அங்கும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பரிகாரங்கள் செய்து தருகிறார்கள்.
பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் முழுவதும் விலகி விடாது மாறாக தோஷங்கள் குறைபடும் இது என்னவென்றால் ராகு-கேதுக்கள் அந்த வீட்டின் கெட்ட காரகத்துவங்களை குறைத்துக் கொள்வார்கள், உதாரணத்திற்கு திருமணம் நடக்கும் பிரச்சனைகள் குறையும் போன்றவை
நன்றி..
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2433481302961543 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Leave a Reply