My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

Rahu/Ketu Transit 2022-2023

/*! elementor – v3.6.1 – 23-03-2022 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

Preface

ராகு-கேது பெயர்ச்சி – April 12th 2022, குரு பெயர்ச்சி – April 14th 2022. வரவிருக்கும் குரு பெயர்ச்சி மற்றும் சனியன் அதிசார பெயர்ச்சி இவை கணக்கில் வைத்துக்கொண்டு ராகு கேது பெயர்ச்சி 2022-23 பிரடிக்சன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

The below Rahu/Ketu transit 2022-23 predictions are made considering the Guru transit and quick power shift of Shani for the year 2022-23.

ராகு கேது 2022-23 பெயர்ச்சி பொதுப்பலன்கள்

Rahu/Ketu Transit 2022-23

மேஷம்

ராசியில் ராகு, 7ல் கேது மற்றும் 12ல் குரு. உடம்பு மற்றும் மன ரீதியான பாதிப்புகளை (பயம்) ராகு பகவான் தருவார். விஷப்பூச்சிகள் அல்லது ஜந்துக்கள் கடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலரின் தாயார் உடல்நலம் பாதிப்படையும். தெய்வ வழிபாடு அதிகமாகும், பெண்களின் மூலம் சகாயம்  இருக்கும், வீடு, வாகனம், ஆடம்பரம் போன்றவற்றிற்கு  கடன் வாங்கி சுபச்செலவுகள் உண்டு, பிள்ளைகளிடம் வாக்குவாதம், பிள்ளைகளால் மனக்கவலை.ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் மற்றும் பணவரவு இருக்கும்.

Aries

Physical and mental illness will be there, Beware of getting near to bees, wasp, hornets and snakes they really like to sting you this time. Chances are that the mother’s health will be affected. Help will come through women. Through loans, buying a new house, motorcycle and luxury things will happen. Kids at home will have problems. Some of you may get unexpected money gains

ரிஷபம்

ராசிக்கு 12ல் ராகு, 6ல் கேது மற்றும் 11ல் குரு. நீண்டநாள் பிரச்சனைகள் விலகும்,  மனம் ஓரளவுக்கு நிம்மதி அடையும், முயற்சிகள் கைகூடும், தடைப்பட்ட அதிர்ஷ்டம் திரும்ப கிடைக்கும் பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும். புது வீடு  வாகனம் ஆடம்பரம்  போன்றவற்றை சிறிது காலம் ஒத்தி வையுங்கள் வீண் விரயங்களை கொடுத்துவிடும். ஒரு சிலருக்கு அடிவயிற்றில் பிரச்சினைகள் வந்து விலகும். செய்து கொண்டிருக்கும் தொழில் அல்லது வேலையை மாற்ற வேண்டாம்..

Taurus

Things that have been troubling you so far are moving away from you. Mentally you are getting ready to challenge anything. Kids at home will be happy, New opportunities will be successful, you will be lucky this time. Not a favourable time for  building/buying a new house or motorcycle. Some of you may have problems with your lower stomach. Job change is not favourable at this time.

மிதுனம்

ராசிக்கு 11ல் ராகு, 5ல் கேது மற்றும் 10ல் குரு. இதுவரை இருந்த அனைத்து பிரச்சனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் காலம், சொல்லப்போனால் இன்னும் உங்களுக்கு அஷ்டமச் சனி இருக்கிறது.   எதிர்பார்த்த வேலை மாற்றம்  கிடைக்கும்,  தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். புது வீடு வாகனம் போன்ற அனைத்து முயற்சிகளும் கைகூடும். பிள்ளைகளிடம் ஒரு புது மாற்றம் வரும்,  பிள்ளைகளிடம் தெய்வபக்தி கூடும். பெருமூச்சு விடுங்கள் இனி எல்லாம் நல்லதே…

Gemini

The problems that you have been facing so far will slowly ease now, expected job change will happen. There would be a difference of opinion with your father. A favorable time for building/buying a new house or motorcycle, a good change will happen for your kids, your kids will be spiritually inclined. A sigh of relief from all problems will start from October 2022.

கடகம்

ராசிக்கு 10ல் ராகு, 4ல் கேது மற்றும் 9ல் குரு.  எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம்.  தொழில் மற்றும் வேலை போன்றவற்றில் தொந்தரவுகள் இருக்கும். புது முயற்சிகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். வீண்வம்பு மற்றும் கஷ்டங்கள் இன்னும் இரண்டரை வருடங்கள் உண்டு.  2023 ஏப்ரல் வரை நீங்கள் எதையும் தாங்கும் சக்தி இருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சி பெரும்பாலானவர்களுக்கு கஷ்டங்களை மட்டுமே தரும் ஏனென்றால் ஏப்ரல் 2023 இல் இருந்து அஷ்டமச்சனி ஆரம்பிக்க உள்ளது.

Cancer

Starting this July 2022 be careful in all aspects. Do not venture into new stuffs, Take every step with caution, do not try to change the job as it will create after effects for you. Stop back answering, murmuring and spreading rumors, it will backfire for you this time. Until 2023 you may seem to be in-charge of the situation but the platform that you create now will give you problems after April 2023. Devote or get spiritually inclined.

சிம்மம்

ராசிக்கு 9ல் ராகு, 3ல் கேது மற்றும் 8ல் குரு. வெளிநாட்டு பிரயாணம் கைகூடும்,  எதிர்பாராத அதிர்ஷ்டம் இருக்கும். இதுவரை இருந்த வீட்டுப் பிரச்சினை மற்றும் வேலை பிரச்சனை நீங்கும், தாயின் உடல்நலம் மேன்மையடையும், குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஏழாம் இடத்தில் சனி கெட்ட எண்ணங்களை மனதில் விதைக்கும். வீடு, வாகனம், பள்ளி படிப்பு போன்றவற்றில் சகாயங்கள் இருக்கும்.  கையில் புழங்கும் பணத்தை சேமிக்க ஆரம்பியுங்கள்.

Leo

Sudden trip is highly likely to happen, you will be  lucky in the lottery or in the stock market investments, take care of your mother’s health. Most of your house related issues will solve and for some of you there are chances that bad thoughts might get infused. Start saving your money.

கன்னி

ராசிக்கு 8ல் ராகு, 2ல் கேது மற்றும் 7ல் குரு. எட்டாம் இடத்து ராகு ஒருசிலருக்கு திடீர் பண வரவை கொடுக்கும், இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு போவீர்கள்.  ஒரு சிலருக்கு மன பயம் உண்டாகும்.  வரும் ஜூலை மாதம் முதல்  உங்களின் உடல்நிலை நன்றாக இருக்கும்.  வேலையில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து அகலும்.  எதையும் தாங்கும் சக்தி உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது  உஷாராக இருக்கவும். தந்தையின் உடல் நலம் சீராகும் மற்றும் தந்தையிடம் இருந்த கருத்துவேறுபாடு  அகலும்.

Virgo

Stock market gains will be very good, Sudden money inflow will be there. Save it. Change of place is likely to happen for you. Unexplainable fear would be there inside the heart. Starting July your health issues will slowly go away. Beware when you are travelling in a vehicle. Difference of opinion with father may arise. Take care of your father’s health.

துலாம்

ராசியில் கேது, 7ல் ராகு மற்றும் 6ல் குரு. தெய்வ வழிபாடு அதிகரிக்கும் புண்ணிய க்ஷேத்திரங்கள் போவதற்கு எண்ணங்கள் அதிகரிக்கும் . உங்கள் பெண் மேலதிகாரி உங்களை புரிந்து கொள்ளும் நிலை உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகள் கடன் மூலம் கைகூடும், வேலையில் நிம்மதி உண்டாகும்,  கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எந்த டாக்குமெண்ட் ஆனாலும் படித்து பார்த்து கையெழுத்து போடுங்கள். இதுவரை இருந்த மனபயம் நீங்கும்.

Libra

All of sudden you will be spiritually inclined, you will start visiting temples. Your immediate boss (women) or skip level boss (women) will understand you and will help you. House alterations, interior refurbishing will be favourable through loans. Business partners do not sign a document without fully reading it or understanding it. The fear which was haunting you so far will vanish away

விருச்சிகம்

ராசிக்கு 6ல் ராகு, 12ல் கேது மற்றும் 5ல் குரு. இது உங்களுக்கு ஒரு பொற்காலம்,  அதிர்ஷ்டங்கள் கைகூடும், தந்தையின் ஆரோக்யம் சீராகும் தந்தையிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.  ஒரு புது புத்துணர்ச்சி மனதில் உண்டாகும். உடம்பு பிரச்சனைகள் காணாமல் போகும், ஒரு சிலருக்கு தாய் வழி உறவுகள் மூலம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு மற்றும் குணம் சீராகும். ஒரு சிலருக்கு தந்தைவழி சொத்துக்கள்  கிடைக்கும்.

Scorpio

This is a beautiful period for you, all things are favourable. Whatever you were expecting will happen for good. Father’s health will improve, difference of opinion with father will vanish. Your health issues will fade away. Your father’s old (longing to sell) properties will be sold now, bringing money inflow and gain for you.


தனுசு

ராசிக்கு 5ல் ராகு, 11ல் கேது மற்றும் 4ல் குரு. ஐந்தாம் இடத்தில் ராகு அதிர்ஷ்டங்களை தடை செய்வார்,  தந்தை மேஷ ராசி என்றால் உடல் நலம் பாதிக்கும், எதிர்பாராத திடீர் பிரயாணங்கள் உண்டாகும்,  தொழில் மற்றும்  வேலையில் நிம்மதி கிடைக்கும்.  வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் கைகூடும். தைரியம் சற்று  குறைந்து இருக்கும், ஜூலை மாதம் பிற்பகுதி பின் வீட்டில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். பிள்ளைகள் சார்ந்த கவலைகள் உண்டாகும்.  வீண் விரயங்கள் விரையங்கள் மற்றும்  தூக்கமின்மை இருக்கும். ராசிநாதன் குரு வலுப்பெறுவதால் எதையும் உங்களால் சமாளிக்க முடியும்

Sagittarius

you may get unlucky in the stock market or lottery. Luck is not going to favour you for 1 year. For some of you, a sudden inflow of money would be there, Save it. Finally some sigh of relief or your job may be comfortable for you now. After July most of your so-called problems will melt and go away. Though some of you may have some sleeplessness and insomnia.. Things will be alright.

மகரம்

ராசிக்கு 4ல் ராகு, 10ல் கேது மற்றும் 3ல் குரு. ஏழரைச்சனியின் பிடியில் இருக்கும் நீங்கள் ஜென்மச்சனி விலகி பெருமூச்சு விடும் காலம் இது.  இதுவரை திருவோணம் மற்றும் அவிட்டம் நட்சத்திர மகர ராசி நேயர்கள் பட்ட கஷ்டம் மற்றும் இழந்தது  கொஞ்ச நஞ்சமல்ல. எல்லா கஷ்டங்களையும் சந்தித்த நீங்கள் 2ல் இருக்கும் சனி பாத சனி யாக இருக்கும் பொழுது உங்கள் கஷ்டங்கள் குறையும். வீடு வாகனம் முயற்சிகள் இன்னும் ஒரு வருடத்திற்கு வேண்டாம்.

Capricorn

Last 1 year has been a terrible period for you, a big relief is forecasted. However still 3 more years to go until you feel everything is turning your way. Coming years will not be like before so be happy, the trouble periods are gone! Marriage proposals will work out. Be patient for 1 more year before purchasing a house or any new things.

கும்பம்

ராசிக்கு 3ல் ராகு, 9ல் கேது மற்றும் 2ல் குரு. ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கின்றது. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் உஷார்,  ராசிக்கு 3ல் ராகு இருப்பதாலும் மற்றும் 2ல் குரு இருப்பதாலும் பணவரவு அதிகமாகும் தயவு செய்து பணத்தை சேர்த்து வையுங்கள்,  வீண்செலவு செய்யாதீர்கள்.  சனி ஜென்மத்தில் வரும்பொழுது வாய் விட்டு அழும் நிலைமை வரக்கூடும், தொழிலில் பிரச்சனை வேலையில் பிரச்சனை உண்டாகும். சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒரு சிலருக்கு திருமணம் கைகூடும், எதிர்பாராத பணவரவு இருக்கும். இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் நல்ல நண்பர்களை மற்றும் மனிதர்களை அறிந்து கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.

Aquarius

I am trying to give some nice words, but unfortunately this is going to be a very tough phase for you. The next 2.5 years are going to be very tough. Problems are inevitable. Low confidence will creep inside you, Health will deteriorate, father’s/Mother’s health will deteriorate, money inflow will not be sufficient. Do not try to start a new venture in your life now. This phase will let you understand the depth of friendships, relations and the people next to you. Some of you may feel nothing bad happened and good money inflow, start saving it cos its going to become bad.

மீனம்

ராசியில் குரு, 2ல் ராகு, 8ல் கேது: ராசிநாதன் குரு ராசியிலேயே இருப்பதால் எதையும் சாதித்துவிடும் காலகட்டம் இது, ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரும்,  திடீர் பிரயாணம் உண்டாகும். வீண் விரயங்கள் இருக்கும், உடல்நலம் ஒருசிலருக்கு பாதிக்கும், கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் ஆனால்  2ல் உள்ள ராகு குடும்பத்தில் சந்தேக விதையை விதைப்பார். 71/2 சனி ஆரம்பிக்கும் காலகட்டம் என்பதால் எதிலும் ஜாக்கிரதையாக இருங்கள்.

Pisces

This is a very good time for you, you will optimise and adjust anything that comes in your life. Health will deteriorate for some, family issues may come and go. Some of you may become skeptical all of a sudden for nothing. Save everything you have now, next 71/2 years is going to teach you what life is.

Leave a Reply