முன்னுரை
ஜோதிடத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒரு முக்கியமான விதி என்னவென்றால் பாவகம்/ ஆதிபத்தியம் எப்போது செயல்படும் காரகத்துவம் எப்போது செயல்படும்?
பாவகம்/ஆதிபத்தியம் என்பது ஒரு கிரகம் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டின் சுப மற்றும் அசுப தன்மைகள் இது கிரகத்தின் தசா காலத்திலோ அல்லது புக்தி காலத்திலோ செயல்படுவது
கிரக காரகத்துவம் என்பது அந்தக் கிரகத்தின் தன்மைகள் அதாவது சுப மற்றும் அசுப தன்மைகள்/குணங்கள், இது அந்த ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் பிரதிபலிக்க கூடியதாகும்.
2-ஆம் பாவகம்
லக்னத்திலிருந்து கணக்கிடும்போது இரண்டாவதாக வருவது இரண்டாம் பாவகம், இந்த இரண்டாம் பாவகம் அல்லது ஆதிபத்தியத்தின் பொதுவான விசேஷங்கள் கீழ் வருபவை
-
- தனம் சேரும் விதம்
- வாக்கு அல்ல பேச்சு எவ்வாறு இருக்கும்
- குடும்பம்
- பெருந்தன்மை
- தீர்மானம் செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல்
- நாக்கு மற்றும் கண்
- சௌகரியங்களை அனுபவித்தல்
- தர்ம சிந்தனை
- பணிவு
- தன்னை சார்ந்து இருப்போர்
- போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தல்
- இத்தகைய செல்வாக்கான வாழ்க்கை
- பேசி பிழைக்கும் தொழில்
- திட சிந்தனை
மேலே கொடுக்கப்பட்டது இரண்டாம் அதிபதி விசேஷங்கள் இனி பொதுவாக இரண்டாம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்ப்போம், ஒவ்வொரு பாகவதத்திலும் கிரகங்களின் காரகத்துவங்கள் உள்ளே அடங்கி இருக்கின்றன ஆகையால் எந்த கிரகங்கள் இரண்டாம் பாவகத்தில் நின்றால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.
“ஜோதிடத்தில் ஒரு விதியை மட்டும் வைத்து பலன் சொல்ல முடியாது ஆகையால் இரண்டாம் வீட்டை வேறு எந்த கிரகங்களும் பார்க்கவில்லை என்று எடுத்துக்கொண்டும் மற்றும் வேறு எந்த கிரகங்களும் இரண்டாம் வீட்டில் இல்லை என்று வைத்துக்கொண்டும் நாம் கீழே பொது பலனை சொல்வோம்“

குரு: ஜோதிடத்தில் குரு முதன்மை சுபகிரகம் குருவுக்கு உகந்த வீடு இரண்டாம் வீடு ஏனென்றால் இருக்கும் வீட்டையும் சுபத்துவ படுத்துவார் தன்னுடைய 5 7 9-ஆம் பார்வையில் இருக்கும் வீட்டையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவ படுத்துவார். குரு காரகத்துவங்கள் ஆன தனம், நல்ல குடும்பம், நல்ல சிந்தனை, கொடைத்தன்மை, பெருந்தன்மை, பணிவு, தர்மசிந்தனை இவை அனைத்தும் இரண்டாம் வீட்டில் புதைந்து இருக்கிறது ஆகையால் குரு இரண்டாம் வீட்டில் இருக்கும்பொழுது அல்லது இரண்டாம் வீட்டைப் பார்க்கும் பொழுது இந்த மூன்று காரகத்துவங்கள் முதன்மைப்படுத்தி எடுத்துக் கொடுப்பார் அதன்படி ஒரு நல்ல குடும்பம் அமையும் உங்களின் வாக்கு சுத்தமாக இருக்கும் நல்ல தனம் பெருகும்.
சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன், வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் என்றால் மற்றொரு பலன்.
வளர்பிறை சந்திரன்: பொதுவாக வளர்பிறைச் சந்திரன் எதையும் வளர்க்கும் தன்மை உடையவர் ஆகையால் தனம், குடும்பம், வாக்கு எல்லாவற்றிலும் நல்ல தன்மை இருக்கும். வளர்பிறை தன்மையைப் பொறுத்து உங்கள் சிந்தனையில் மாற்றங்கள் இருக்கும்.
தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுது கொடுத்த வாக்கை காப்பாற்றும் தன்மை சிறிது குறைவாக இருக்கும், தர்ம சிந்தனை மனம் செல்லா, பொறுமையற்ற தன்மை இருக்கும், உங்களின் செல்வாக்கு சிறிது குறைவாகவே இருக்கும்.
சூரியன்: ஜோதிடத்தில் சூரியனை முதன்மை கிரகமாக குறிப்பிடப்படுகிறது அத்தகைய சூரியன் இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுது தன்னம்பிக்கை மேலோங்கி இருக்கும் குடும்பத்தில் ஆளுமைத்திறன் மேலும் நிற்கும், நாக்கு மற்றும் கண் சார்ந்த பிரச்சனைகள் வரும், தனம் சேரும், உங்கள் பேச்சு மற்றோருக்கு நம்பிக்கை கொடுக்குமாறு இருக்கும்.
புதன்: தனித்திருக்கும் புதன் ஜோதிடத்தில் ஒரு சுப கிரகம், அத்தகைய போது இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுது உங்களின் வாக்கு சுத்தமாக இருக்கும் சிந்தனை அறிவு சார்ந்து தீர்க்கமாக இருக்கும், குடும்பம் நன்கு அமையும், சுபக்கிரகங்கள் இரண்டாம் வீட்டில் இருக்கும்பொழுது தங்களுடைய விசேஷ பார்வையாக எட்டாம் வீட்டை பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், பண வரவும் இருக்கும்.
சுக்கிரன்: ஜோதிடத்தில் குருவுக்கு அடுத்த சுப கிரகம் சுக்கிரன், அத்தகைய சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுது செல்வாக்கான குடும்பம், தன்னைச் சார்ந்து இருப்பவர்களை சௌகரியமாக வைத்துக் கொள்ளும் எண்ணம், வாக்கில் சுத்தம், குடும்பத்தில் பெண்களை மதிக்கும் தன்மை, பணவரவு போன்ற அனைத்து சுப விஷயங்களையும் சுக்கிரன் இனிதே தருவார்.
செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கால் பாவ கிரகம், எல்லா பாவங்களும் இருக்கும் வீட்டை கெடுத்து தான் தன்னுடைய தார தத்துவங்களையும் பலன்களையும் செய்வார்கள், அதாவது உயிர் காரகத்துவங்கள் எடுத்து ஜடை காரகத்துவங்களை கொடுப்பார் ஆகையால் இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருக்கப் பெற்றவர்களுக்கு திருமணம் தாமதமாக தான் நடக்கும், குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும் செவ்வாய் எத்தகைய சுபத்துவம் ஆக இருக்கிறார் என்பதன் தன்மையைப் பொறுத்து வாக்கில் சுத்தம் மற்றும் திட சிந்தனை இருக்கும்.
சனி: ஜோதிடத்தில் ஒரு கிரகம் முழுக்க பாவகிரகம் என்றால் அந்த கிரகம் சனிதான், சனி பகவான் எந்த வீட்டில் இருந்தாலும் இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவங்களை கெடுத்தான் பலனை தருவார் ஆகையால் சனி பகவான் இரண்டாம் வீட்டில் இருக்கும்பொழுது தாமதமான திருமணம் அமையும், வாக்கில் சுத்தம் இருக்காது, பொய் பேசுவார்கள், குடும்பத்தில் பிரச்சினைகள் மேலோங்கி இருக்கும், சிந்தனையில் ஒரு குள்ளநரித்தனம் இருக்கும், ஒரு சிலருக்கு தர்ம சிந்தனைகள் அதிகமாக இருக்கும். சனி பகவான் எத்தகைய சுபத்துவம் ஆக இருக்கிறார் என்பதைப் பொருத்து இந்த குணாதிசயங்கள் வெளியே தெரியும்
ராகு: ஜோதிடத்தில் கணிக்க சிக்கலான கிரகங்கள் ராகு-கேது, இவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதி போலவும் பார்க்கும் கிரகங்கள் மற்றும் சேர்ந்து இருக்கும் கிரகங்களின் தன்மையையும் பிரதிபலிக்கும் கிரகங்கள். ராகு ஒரு இருள் கிரகம் ஆகையால் ராகு 2ஆம் வீட்டில் இருக்கும்பொழுது தாமத திருமணம் ஆகும், மற்றும் இரண்டாம் வீட்டின் அதிபதி குரு, சந்திரன், சூரியன், சுக்கிரன், செவ்வாய், சனி, புதன் இவர்கள் ஆக இருந்தால் மேலே சொன்ன பலன்களை எடுத்துக் கொள்ளுங்கள், ராகு சுபத்துவமாக இருக்கும் பொழுது மட்டும் தான் அவர் நல்லதை செய்வார் இல்லை என்றால் மேலே சொன்ன கிரகங்களின் அசுப பலன்கள் தான் நடக்கும். ராகு வீடு கொடுத்த கிரகம் ஆட்சி மற்றும் உச்சமாக இருக்கும் பொழுது ராகு மிகுந்த நன்மைகளைச் செய்வார்.
கேது: பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர், கேதுவும் நிழல் கிரகம் தான் ஆனால் ராகுவைப் போல் ஆழ்ந்த இருள் கிரகம் இல்லை ஆகையால் கேது எத்தகைய சுபத்துவமாக இரண்டாம் வீட்டில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து திருமணம் சீக்கிரம் அல்லது தாமதம் ஆகும், அதிக சுபத்துவமாக இருக்கும் பொழுது பணவரவு அதிகமாக இருக்கும், தர்ம சிந்தனைகள் அதிகமாக இருக்கும். இரண்டாம் வீட்டின் அதிபதி குரு, சந்திரன், சூரியன், சுக்கிரன், செவ்வாய், சனி, புதன் இவர்கள் ஆக இருந்தால் மேலே சொன்ன பலன்களை எடுத்துக் கொள்ளுங்கள். கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் ஆட்சி மற்றும் உச்சமாக இருக்கும் பொழுது கேது மிகுந்த நன்மைகளைச் செய்வார்.
இது இரண்டாம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a Reply