My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம்: 5-ஆம் பாவகம்

5-ஆம் பாவகம்.

 

லக்னத்திலிருந்து கணக்கிடும்போது ஐந்தாம் இடமாக வருவது 5-ஆம் பாவகம் அல்லது ஆதிபத்தியம்.  ஒருவருடைய ஜாதகத்தில் 1, 5, 9ஆம் பாவகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 5-ஆம் பாவகத்தில் உள்ள நட்சத்திரங்கள் 1,9-ஆம்  பாவத்திற்கு ஒருவருக்கொருவர் நட்பு நட்சத்திரங்களாக  அமையும். இந்த 5ஆம் பாவகம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிக்கிறது. அதாவது சென்ற பிறவியில் நீங்கள் என்ன செய்தீர்கள் அதற்கேற்றவாறு இந்த ஐந்தாம் பாவகம் உங்களுக்கு இந்தப் பிறவியில் பிரதிபலிக்கும். ஐந்தாம் பாவகம் உங்களின்  மனதையும் குறிக்கிறது.  எந்த ஒரு ஜாதகத்திலும்  ஐந்தாம் அதிபதி லக்னத்திலிருந்து கணக்கிடும் பொழுது மறைவு ஸ்தானத்தில் இருப்பது நல்லதல்ல மற்றும் பாவத் பாவம் விதிப்படி ஐந்தாம் வீட்டிற்கு 6, 8, 12-ஆம் இடத்தில் ஐந்தாம் அதிபதி மறைவதும் நல்லதல்ல. ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் குரு அல்லது சுக்கிரன் அல்லது பவுர்ணமி  சந்திரனால் பார்க்கப்பட்டு அதிக சுபத்துவம் அடைந்தால் அந்த ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்,  மற்றும் ஐந்தாம் அதிபதி தசை வரும்போது சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்

 

constellation, constellation map, star sign-3301770.jpg

ஐந்தாம் பாவகத்தில் காரகத்துவங்களை கீழே பார்ப்போம்.

    • குழந்தைகளை குறிக்கும்
    • தந்தையின் புண்ணிய காரியங்கள்
    • புத்தி கூர்மை
    • விவேகம்
    • எத்தகைய  கொடை தன்மை உடையவர்
    • திருஷ்டி
    • நன்னடத்தை
    • மனைவி வழி சொத்துக்கள்
    • ஞான திருஷ்டி
    • மந்திரங்களை பிரயோகித்தல்
    • மிருதங்கம் போன்ற வாத்தியங்களை  இசைக்கும் தன்மை
    • தெய்வ பக்தி,  அதிர்ஷ்டம்
    • மனசாட்சி உள்ளவராய் இருத்தல்
    • எதிலும் நற்செயல்
    • சூதாட்டம்
    • செயல்திறன்
    • உங்களது மனம் எப்படி செயல்படும் என்பதை இந்த ஸ்தானம் குறிக்கும்

குரு: ஜோதிடத்தில் குரு முதன்மை சுபகிரகம் குரு.  குரு இருக்கும் வீட்டையும் சுபத்துவ படுத்துவார் தன்னுடைய 5 7 9-ஆம் பார்வையால் பார்க்கும் வீட்டையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவ படுத்துவார்.  குரு ஐந்தாம் பாவகத்தில் இருக்கும்பொழுது ஜாதகருக்கு நல்ல குழந்தை மற்றும் அதிர்ஷ்டங்கள் மேலோங்கி இருக்கும்.  ஐந்தாம் பாவகத்தில் குரு தன்னுடைய 5-ஆம் பார்வையால் ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால்   பெரும்  கோணம் என்று சொல்லப்படும்  9-ஆம் இடமும் அதாவது பாக்கிய ஸ்தானமும் சுபத்துவம் அடையும் மற்றும் குருவின்  7-ஆம் பார்வை லாப ஸ்தானம் என சொல்லப்படும்  11-ஆம் இடத்தில்  பார்ப்பதால் அதிக லாபங்களை அனுபவிக்க   முடியும்,  மற்றும் தன்னுடைய விசேஷ  9-ஆம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதால் லக்னமும் புனிதம் அடையும். பிற்காலத்தில் உங்களின் குழந்தைகள் உங்களை காப்பாற்றும் வாய்ப்பு இந்த 5ஆம் பாவகம்   சுபத்துவதில்தான் இருக்கிறது.  ஐந்தாம் பாவகத்தில் குரு அமர்ந்து  சனி செவ்வாய் ராகு ஆகியோரின் முக்கூட்டு தாக்குதல் இருக்கும் பொழுது குரு பகவான் காரகோ பாவ நாஸ்தி என்ற அமைப்புக்கு தள்ளப்படுவார் அதாவது அந்த ஐந்தாம் பாவகத்தில் உயிர்  காரகத்துவம் ஆன குழந்தைகளை பிரிப்பார் அல்லது இல்லாமல் செய்வார்.  ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா இல்லையா என்பதை இந்த பாவகம் சுட்டிக்காட்டும்.

சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன்,  வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் 5-ஆம்  இடத்தில் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் 5-ஆம்  இடத்தில் நின்றால் மற்றொரு பலன். ஐந்தாம் இடத்தில்  வளர்பிறை சந்திரன் இருப்பது மிகவும் விசேஷம்

    • வளர்பிறை சந்திரன்: தசமி தாண்டிய வளர்பிறை சந்திரன் ஐந்தாம் இடத்தில் இருக்கப் பெற்ற ஜாதகம் ஒரு உயர்தர ஜாதகம் ஏனென்றால் 10,11,12 இடங்கள்   சந்திர அதியோகம் வரும்
    • தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் 5ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்றால் அம்மாவாசை சந்திரன் இன்னொரு சனிக்கு நிகரானவர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது தசமி திதி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் ஏறக்குறைய சனியைப் போல 70% இருப்பார் ஆக 5ஆம்   இடத்தின் மூலம் கிடைக்கும் அதிர்ஷ்டம்,  மற்றும் குழந்தைகள் அனைத்திலும் பாதிப்புகள்  இருக்கும்.  சந்திரன் மனோகாரகன் என்பதால் உங்களின் மனம் நல்வழிகளில் செல்லாது மனசாட்சி குறைவாகவே இருக்கும் சூதாட்டம் கேம்பிங் போன்ற அனைத்திலும் ஈடுபடச் செய்யும் ராகுவின் சம்பந்தம் பெரும் பொழுது

சூரியன்:  ஜோதிடத்தில் சூரியன் ஒரு  அரை பாவகிரகம் என்பதால் ஒரு பாவ கிரகம்  கோணத்திற்கு அதிபதி ஆவது அவ்வளவு சிறப்பு அல்ல.  அதேசமயம் ஐந்தாம் வீடு  சிம்மம் விடாய்   அமைந்து சூரியன் அங்கேயே இருக்க பெறுவோர்  அரசியல்/அரசாங்க பணியில் இருக்கும் பாக்கியத்தை பெறுவார்கள். பிள்ளைகளிடம்  அல்லது பிள்ளைகள் மூலம் மனக் கசப்புகள் உண்டாகும்  ஏனென்றால் சூரியன் ஒரு அரை பாவகிரகம்,  இருக்கும் வீட்டை கெடுத்தான் தன் பலனைச் செய்வார்.

புதன்: தனித்திருக்கும் புதன் ஜோதிடத்தில் ஒரு சுப கிரகம், அத்தகைய புதன் 5ஆம் இடத்தில் இருக்கும் பொழுது உங்களின் ஞானம் அதிகரிக்கும்,  ஐந்தாமிடம் மிதுனம் அல்லது கன்னி  வீடாக இருக்கும் பொழுது  புதன் காரகத்துவங்கள் அனைத்தும் இனிதே பெற்று நல்வாழ்க்கை அமையும்,  புக்தி வழிநடத்தும் ஜாதகரால் இருப்பீர்கள்,  உங்களின் செயல் திறன் புத்தியை சார்ந்தே இருக்கும் அதாவது புத்தியை வைத்து எதையும் சாதிப்பீர்கள், தாய் மாமன் உதவிக்கு வருவார்.

சுக்கிரன்: ஜோதிடத்தில் குருவுக்கு அடுத்த சுப கிரகம் சுக்கிரன்,  அத்தகைய சுக்கிரன் 5ஆம் இடத்தில் இருக்கும் பொழுது பெண்களை மதித்தவர் ஆய் இருப்பீர்கள்,  பெண்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  சகல சௌகரியங்களையும் சொகுசு களையும் அனுபவித்த சிறந்தவராய் இருப்பீர்கள் ஏனென்றால் இயற்கைச் சுபர் திரிகோணத்தில் அமர்வது நல்லது,  மகர லக்னம் ஐந்தில் சுக்கிரன்,  அல்லது மிதுன லக்னம் ஐந்தில் சுக்கிரன் இருக்கப் பெற்றவர்கள் மற்றும் தசா புத்தி மூலம் சுக்கிர தசை நடக்க வேண்டும் கொடுத்து வைத்தவர்கள்.

செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கால் பாவ கிரகம், இருக்கும் வீட்டை கெடுத்துதான் தன்னுடைய   காரகத்துவங்களை  மற்றும்  பலன்களை  செய்வார். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் இருக்கும்  வீட்டின் உயிர் காரகத்துவம் ஆன பிள்ளைகளை கெடுத்து தனது காரகத்துவங்களை கொடுப்பார்,  இது என்னவென்றால் தாமத குழந்தை பாக்கியம் குழந்தைகள் மூலம் மனக்கசப்புகள் அந்திம காலத்தில் குழந்தைகள் உதவாமல் இருத்தல் போன்றவை செவ்வாய் செய்வார் ஏனென்றால் திரிகோணத்தில்  பாவர்கள் அதிபதி ஆவது சிறப்பு அல்ல. செவ்வாய் தன்னுடைய நான்காம் பார்வை மூலம் எட்டாம் இடத்தை பார்ப்பார் இது விபத்து மற்றும் ஆயுள்  பாதிப்புகளை குறிக்கும்,  மற்றும் ஏழாம் பார்வையால் 11-ஆம் இடத்தைப் பார்த்தார் இது லாபங்களை தராது மற்றும் எட்டாம் பார்வையால் 12-ஆம் இடத்தைப் பார்ப்பார் இது விரயங்களை தரும்

சனி: ஜோதிடத்தில் ஒரு கிரகம் முழுக்க பாவகிரகம் என்றால்  அந்த கிரகம் சனிதான்,  சனி பகவான் எந்த வீட்டில் இருந்தாலும் இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவங்களை கெடுத்தான் பலனை தருவார் ஆகையால் சனி பகவான் 5-ஆம் வீட்டில் இருக்கும்பொழுது இருக்கும் வீட்டை கெடுத்துதான் பலன் செய்வார்,  சனி பகவான் 5-ஆம் இடத்தில் இருப்பது நன்மை தராது. இது தாமத புத்திர பாக்கியம் தாமத திருமணம் மற்றும் தனம் குடும்பம் ஆகியவற்றில்   சிக்கல்களையும் மற்றும் குழப்பங்களை  தருவார்.  ஏனென்றால் சனியன் 3,7 10ஆம் பார்வை 7ம், 11ம் இடம் மற்றும் 12ம் இடத்தை பாதிக்கும். குழந்தை தகப்பன் இடையே விரோதத்தை வளர்க்கும்,  பிள்ளைகள் இருந்தும் இல்லாமல் இருப்பது,  பிள்ளைகள் இல்லாமலே இருப்பது  போன்றவற்றை சனியுடன் சேர்ந்த  பாவ கிரகங்கள்  கொடுக்கும். திரிகோணத்தில்  பாவர்கள் அதிபதி ஆவது சிறப்பு அல்ல.

ராகு: மேஷம், ரிஷபம்  கடகம்  கன்னி,  மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் ராகு நற்பலனை செய்வார், ராகு  5-ஆம் அதிபதியாக இருக்கும்பொழுது அவர் 1, 4, 7, 10 ஆகிய கேந்திராதிபதிகளுடன் இணைந்து இருப்பது யோகத்தை தரும்.  கேந்திரத்தில் இருக்கும் பொழுது  கோண அதிபதிகளுடன் இணைந்து இருப்பது நன்மையைத் தரும்.  வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் போன்றவை ஆனால் அமோகமான பலனைச் செய்வார். ஐந்தில் இருக்கும் ராகு யாருடைய பார்வை வாங்கியிருக்கிறார் என்பதை கணிக்க வேண்டும் செவ்வாய் சனி போன்ற அவருடைய  பார்வையோ இணைவோம் பெற்றிருந்தால் ராகு 5ஆம் இடத்தில் கொடூர தாண்டவம் ஆடுவார்,  அதிர்ஷ்டங்களை கெடுப்பார் பிள்ளைகள் இருந்தும் இல்லாமல் வைப்பார்,   சூதாட்டம் மூலம் பணத்தை இழக்க வைத்தார்,  மனம்  குறுக்கு வழிகளை தேடும்.

கேது:பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர்,  கேதுவும் நிழல் கிரகம் தான் ஆனால் ராகுவைப் போல் ஆழ்ந்த இருள் கிரகம் இல்லை  ஆகையால்  கேது எத்தகைய சுபத்துவமாக  5-ஆம் வீட்டில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து  தெய்வீக வழிபாடு அமையும்,  சாஸ்திர சம்பிரதாயங்கள்  உங்களின் மனதை ஈடுபடுவார்.  கேதுவும் கன்னி, விருச்சிகம், கும்பம் இந்த மூன்று வீடுகளில் இருக்கும் பொழுது நன்மைகளை செய்வார் மற்றும் வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் போன்றவை ஆனால் அமோகமான பலனைச் செய்வார் மற்றும் கேதுவிற்கு குரு சுக்கிர பார்வை கிடைக்கும் பொழுது மிகப்பெரிய சொகுசு வாழ்க்கையை கொடுப்பார். 

 

இது 5-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a Reply