6-ஆம் பாவகம்.
லக்னத்திலிருந்து கணக்கிடும்போது ஆறாம் இடமாக வருவது 6-ஆம் பாவகம் அல்லது ஆதிபத்தியம், ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதியை விட 6-ஆம் வீடு அல்லது 6-ஆம் அதிபதி வலுத்து இருக்கக்கூடாது. பொதுவாக ஜோதிடத்தில் ஒரு வீடு/ஆதிபத்தியம் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவோமே ஆனால் அது ஆறாம் வீடுதான். ஜோதிடத்தில் 3, 6, 8, 12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்கள் என்று கூறப்படுகிறது இதில் 3, 6, 10, 11 ஆகிய இடங்கள் உபஜெய ஸ்தானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த ஆறாமிடம் மறைவு ஸ்தானம் என்று ஒரு சில இடங்களில் விதிவிலக்கு வரும் மற்றும் உபஜெய ஸ்தானம் என்று ஒரு சில இடங்களில் விதிவிலக்கு வரும். வேத ஜோதிடத்தில் 6-ஆம் வீடும் 8-ஆம் வீடும் நற்பயன்களை வெகு சுலபத்தில் தந்துவிடாது. தசா புக்தி கணக்கிடும் போதும் தசா நடத்தும் கிரகத்திற்கு 6-ஆம் இடத்தில் அல்லது 8-ஆம் இடத்தில் இருக்கும் புக்திகள் நற்பயன்களை தருவதில்லை.ஆறாம் அதிபதி லக்னாதிபதிக்கு நட்பு வீடாக வரும்பொழுது அந்த வீட்டின் அசுப காரகத்துவங்கள் குறைவாகவே இருக்கும், எதிர்மறையாக லக்னாதிபதிக்கு 6-ஆம் அதிபதி பகையாக வரும்பொழுது அசுப காரகத்துவங்கள் மேலோங்கி இருக்கும். உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு புதன் 6-ஆம் அதிபதியாக வருவார் அவர் லக்ன அவையோகர் என வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஏனென்றால் மேஷ லக்னத்திற்கு புதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தால் தவிர நற்பலனை செய்வது இல்லை.

6-ஆம் பாவகத்தில் காரகத்துவங்களை கீழே பார்ப்போம்
-
- கடன், நோய், எதிரி
- வம்பு, வழக்கு, அசிங்கம்
- ஒருவர் கீழ் வேலை செய்தல்
- வியாதி, தடை, யுத்தம்
- தாய் மாமன், கபம், அவதூறு
- எதிரியின் மகிழ்ச்சி
- மனக்கவலை, வேதனை, பலராலும் வெறுக்கப் படுதல்
- சுயமரியாதை காப்பாற்றுதல்
- கண்டம், விபத்து
- சிறை தண்டனை
- கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷன் ஏறுதல்
- வயிற்றுப்புண், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
குரு: ஜோதிடத்தில் குரு முதன்மை சுபகிரகம் குரு. குரு இருக்கும் வீட்டையும் சுபத்துவ படுத்துவார் தன்னுடைய 5 7 9-ஆம் பார்வையால் பார்க்கும் வீட்டையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவ படுத்துவார். குரு 6-ஆம் இடத்தில் இருக்கும் பொழுது ஆறாம் வீட்டை சுபத்துவம் படுத்துவார் அதன்படி நல்ல வேலை கிடைக்கும் தன்னுடைய விசேஷ பார்வையால் 10-ஆம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் பார்ப்பார் அதன்படி, பத்திரிக்கை, சொல்லிக்கொடுக்கும் தொழில், பேசிப் பிழைக்கும் தொழில் போன்றவற்றை குரு தருவார். துலா லக்னமாகி ஆறாமிடத்தில் குரு ஆட்சி பெற்று இருக்கும்பொழுது அவர் லக்ன அவயோக என்பதால் கடன் நோய் போன்றவற்றை சுக்கிரனின் வலுவை பொறுத்து தருவார். பொதுவாக ஆறாம் இடம் சுத்தமாக இருந்தாலே ஆறாம் வீட்டில் சுப ஆதிபத்திய விஷயங்கள் மட்டுமே நடக்கும். ஆறாம் வீட்டை செவ்வாய் சனி ராகு போன்ற முக்கூட்டு கிரகங்களின் தாக்குதல் இருக்கும் பொழுது மட்டுமே கடன் நோய் எதிரி வம்பு வழக்கு அசிங்கம் போன்ற அனைத்து சுப காரியங்களும் நடக்கும்..
சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன், வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் 6-ஆம் இடத்தில் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் 6-ஆம் இடத்தில் நின்றால் மற்றொரு பலன்
-
- வளர்பிறை சந்திரன்: தசமி தாண்டிய வளர்பிறை சந்திரன் ஆறாமிடத்தில் இருக்கும் பொழுது குருவிற்கு சொன்னதுபோல் ஆறாம் இடத்து சுப விஷயங்கள் மட்டுமே நடக்கும் அதுவுமின்றி சந்திர அதி யோகத்தின் பலனாக 11, 12, மற்றும் லக்னம் சுபத்துவம் படுத்தப்பட்டு நல்ல தசாபுக்தி நடக்கும் ஆயின் ஜாதகருக்கு யோகம் ஆகும்
- தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் 5ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்றால் அம்மாவாசை சந்திரன் இன்னொரு சனிக்கு நிகரானவர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது தசமி திதி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் ஏறக்குறைய சனியைப் போல 70% இருப்பார் ஆக 6ஆம் இடத்தின் அசுப காரகத்துவங்கள் ஆன கடன் நோய் எதிரி வம்பு வழக்கு போன்றவற்றை தரும் நிலையில் தான் இருப்பார். இந்த தேய்பிறை சந்திரனுக்கு சனி தொடர்புகள் வரும்பொழுது ஜாதகருக்கு கடன் மட்டும் நோயை தருவார், செவ்வாயின் தொடர்பு பெரும்பொழுது கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் சென்று பிரச்சனைகள் தீரும். பொதுவாக ஒளி கிரகங்கள் ஆறாமிடத்தில் மறைவது நல்லது அல்ல
சூரியன்: ஜோதிடத்தில் சூரியன் ஒரு அரை பாவகிரகம் என்பதால் சூரியன் 6-ஆம் இடத்தில் இருப்பது ஒரு விசேஷமான விஷயம், ஆறாமிடத்து அசுப விஷயங்களை கெடுத்து சுப விஷயங்களை வளர்ப்பார். ஜோதிட விதி விதிவிலக்குகள் சென்று கொண்டிருக்கும் இவ்வாறு இருக்கையில் ஒரு சில நேரங்களில் சூரியன் ஆறில் இருப்பது நல்லது மற்றொரு ஜாதகத்தில் சூரியன் 6ல் இருப்பது கெடுதல். உதாரணத்திற்கு மீன லக்னத்திற்கு சூரியன் ஆட்சி பெற்று ஆறாம் இடத்தில் லக்னாதிபதியுடன் நட்பு நிலைமையில் இருப்பது உத்தமம், அதே நேரத்தில் சிம்ம லக்னத்திற்கு சூரியன் ( லக்னாதிபதி) 6ல் மகர ராசியில் சனியின் வீட்டில் இருப்பது நன்மையை தராது
புதன்: தனித்திருக்கும் புதன் ஜோதிடத்தில் ஒரு சுப கிரகம், அத்தகைய புதன் 6ஆம் இடத்தில் இருக்கும் பொழுது தாய்மாமன் வழியே பிரச்சனைகள் அல்லது தாய்மாமனுக்கு பிரச்சனை போன்றவை இருக்கும், மேஷ லக்னமாக லக்ன அவயோக புதன் ஆறாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்றால் அவர் நல்ல பலன்களைத் தரமாட்டார், சனியுடன் சேர்ந்து இருக்கும் பொழுது ருத்ரதாண்டவம் ஆடுவார். கடன் நோய் எதிரி போன்ற அனைத்தையும் கொடுத்து கணவன் மனைவியிடையே பிரச்சனைகளை தூண்டி சிரித்து வைப்பார். இந்த பலன் ஒவ்வொரு லக்னத்திற்கும் மாறும் மற்றும் புதனின் சுபத்துவம் கொண்டு மற்றவை இருக்கும்.
சுக்கிரன்: ஜோதிடத்தில் குருவுக்கு அடுத்த சுப கிரகம் சுக்கிரன், ஆறாம் இடத்திற்கு சுக்கிரனும் விதிவிலக்கு இல்லை தனுசு லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெறுவார் அவரே லக்ன அவயோகி ஆவார் இந்த நிலையில் சுக்கிர திசை நடக்கும் பொழுது அவர் வம்பு வழக்கு அசிங்கம் நோய் போன்ற அனைத்தையும் தருவதற்கு தயங்கமாட்டார். சுக்கிரனின் சுபத்துவம் ஒன்றே இங்கு விதிவிலக்கு. செவ்வாய் சனி போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு பெரும்பொழுது அவர் பெண்கள் மூலம் பிரச்சனைகளை தந்து போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் போன்றவற்றில் ஏற வைப்பார். இயற்கையிலேயே சுக்கிரன் சுப கிரகம் என்பதால் ஆறாம் இடம் ஓரளவுக்கு சுபத்துவ படுத்தப்பட்டு நல்ல வேலை இருக்கும். கன்னி லக்னத்திற்கு 6-ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரனால் அரசாங்க வேலை கூட கிடைக்கும்
செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கால் பாவ கிரகம், இருக்கும் வீட்டை கெடுத்துதான் தன்னுடைய காரகத்துவங்களை மற்றும் பலன்களை செய்வார். பெரும்பாலும் செவ்வாய் மற்றும் சனி தனித்து 6-ஆம் இடத்தில் இருப்பது ஆறாம் வீட்டில் காரகத்துவங்களை அவர்கள் கெடுத்து பலன் செய்வதாகும் அப்படி இருக்க ஆறாம் வீட்டில் அசுப காரகத்துவங்கள் ஆன கடன் நோய் எதிரி போன்ற அனைத்தையும் கெடுத்து அவர் பலனை செய்வார். ஆறாமிடத்தில் செவ்வாய் சுபத்துவபட்டு இருக்கும் பொழுது ஜாதகர் கடன் வாங்கி திரும்பத் தராமல் இருக்கும் நிலை ஏற்படும், அல்லது திரும்பி தர வேண்டிய அவசியம் ஏற்படாது. இதுவே செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருக்கும் நிலையில் ஆறாமிடம் பருவமடைந்து அத்தனை அசுப காரகத்துவங்கள் மேலோங்கி நிற்கும், குரு சுக்கிரன் தொடர்பு மற்றும் பார்வை ஒன்றே இதற்கு விதிவிலக்கு.
சனி: ஜோதிடத்தில் ஒரு கிரகம் முழுக்க பாவகிரகம் என்றால் அந்த கிரகம் சனிதான், சனி பகவான் எந்த வீட்டில் இருந்தாலும் இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவங்களை கெடுத்தான் பலனை தருவார் ஆகையால் சனி பகவான் 6-ஆம் வீட்டில் இருக்கும்பொழுது மேலே செவ்வாய்க்கு சொன்ன அனைத்தும் சனிக்கு பொருந்தும் கூடுதலாக சனி ஒரு முழு பாவ கிரகம் என்பதால் சனியின் சுபத்துவம் நன்றாக கணக்கிட வேண்டும், மூன்றாம் பார்வை எட்டாம் இடத்தில் விழும் என்பதால் ஆயுள் குறை இருக்கும், மற்றும் ஏழாம் பார்வை பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் விரயங்கள் மூலம் கடன்கள் உண்டாகும், பத்தாம் பார்வை மூன்றாமிடத்தில் விழுவதால் ஜாதகருக்கு தைரியம் குறைந்தே காணப்படும். எந்த ஒரு காரியத்திலும் மற்றும் முயற்சியில் தடை இருக்கும்
ராகு: மேஷம், ரிஷபம் கடகம் கன்னி, மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் ராகு நற்பலனை செய்வார், ராகு கேதுக்கள் 6 12 அச்சுகளில் இருப்பது ஒரு நல்ல பலனை தரும், பொதுவாக ராகு நல்ல இடத்தில் இருந்தால் கேது நல்ல இடத்தில் இருக்க மாட்டார். ராம் இடத்தில் இருக்கும் ராகு ஒரு பாவ கிரகம் என்பதால் ஆறாம் வீட்டு அசுப காரகத்துவங்களை கெடுத்து நன்மை செய்வார் ஆனால் அந்த ராகுவிற்கு சனி செவ்வாய் தொடர்புகள் இருக்கக் கூடாது இது ஒரு முக்கிய விதி, அப்படி சனி செவ்வாய் தொடர்புகள் பெற்றுவிட்டால் அந்த ராகு கொடூர தாண்டவம் ஆடுவார். ஆறாம் வீடு தனுசு மீனம் ஆகி குரு உச்சம் பெற்றால் அந்த ராகு நல்லதையே செய்வார் ஏனென்றால் பொது விதியாக வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் போன்றவை ஆனால் அமோகமான பலனைச் செய்வார்.
கேது:பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர், கேது ஆறில் இருப்பது அவ்வளவு சிறப்பு அல்ல ஏனென்றால் கேது எதையும் வளர்க்கும் தன்மை உடையவர். ஆறாமிடத்தில் அசுப காரகத்துவங்களை செவ்வாய் சனி தொடர்பு பெற்ற கேது தயங்காமல் செய்வார். கடன், நோய், எதிரி போன்ற அனைத்தையும் தருவார். கன்னி, விருச்சிகம், கும்பம் ஆறாம் இடமாய் பெற்ற மேஷம், மிதுனம், கன்னி லக்னம் கேது ஆறாமிடத்தில் இருப்பதால் சற்று தீமைகள் குறைந்தே காணப்படும்.
இது 6-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a Reply