My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம்: 8-ஆம் பாவகம்

8-ஆம் பாவகம்.

லக்னத்திலிருந்து கணக்கிடும்போது 8-ஆம் இடமாக வருவது 8-ஆம் பாவகம் அல்லது ஆதிபத்தியம்,வேத ஜோதிடத்தில் 6 மற்றும் 8-ஆம் பாவகம் ஒரு பாபத்துவம் வாய்ந்த பாவமாக கூறப்படுகிறது,  அசுப காரகத்துவங்கள் அதிகம் அடங்கியிருக்கும் 6,8ம் பாவங்களில்  நல்ல தத்துவங்களும் அடங்கியுள்ளது. எந்த ஒரு ஜாதகத்திலும் 8-ஆம் பாவகம் பாபத்துவம் அடைந்து இருக்க கூடாது மற்றும் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது.  8-ஆம் பாவகம் ஒரு மறைவு ஸ்தானம் என்று சொன்னாலும் கூட எட்டாம் பாவத்தில் சுக்கிரன் மற்றும் லக்னாதிபதி மறைவதே பெரிதாக கருதப்படுகிறது.  இது ஏனென்றால் சுக்கிரனுக்கு 3  மற்றும் 8-ஆம் பாவகம் முழு மறைவு ஸ்தானம்.   அதேபோல எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதி மறைய கூடாது. மறைவு ஸ்தானங்கள் ஆக 6 8 12ஆம் இடம் இதை வைத்துத்தான் எதிர்பாராத பண வரவு, பங்குச்சந்தை  மற்றும் விபரீத ராஜ யோகத்தை கணிக்கப்படுகிறது. ஒரு மனிதனுடைய ஆயுளையும் இந்த பாவத்தின் மூலமாகத்தான் கணிக்கப்படுகிறது.

constellation, constellation map, star sign-3301760.jpg

8-ஆம் பாவகத்தில் காரகத்துவங்களை கீழே பார்ப்போம்

    • பங்குச் சந்தை,  எதிரியின் படம்,  ஆயுள்
    • தோல்வி
    • வம்பு,  வழக்கு,  அசிங்கம்,  கடன்,  நோய் மற்றும் எதிரி
    • இடைவிடாத தொந்தரவால் வருத்தம்
    • கணவன் அல்லது மனைவியால் உண்டாகும் துன்பங்கள்
    • அடுத்தவரின் அறியாமையை பயன்படுத்தி பணம் சம்பாதித்தல்
    • மரணத்தால் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு பணம்
    • பிரதேச வாதம் எனப்படும் வெளிநாட்டு யோகம்
    • தூர இடங்களில் இருத்தல்
    • நஷ்டம்
    • அரசாங்க  தண்டனையை பற்றிய பயம்

குரு: குருபகவான் ஒரு முதன்மை சுபக்கிரகம் அப்படிப்பட்ட சுபகிரகம் எட்டாம் இடத்தில் மறைய கூடாது மறைந்தால் அவர் உயிர் காரகத்துவங்களை தாமதித்து தருவார்,  மற்றும் குரு இருக்கும் வீட்டை சுபத்துவ படுத்துவார் என்பதின் விதியின்கீழ் எட்டாமிடம் அதிக சுபத்துவம் அடைந்து எட்டாம் இடத்தில் சுப காரகத்துவங்கள் மேலோங்கி நிற்கும் குருவின் விசேஷ ஐந்தாம் பார்வை மூலம் 12-ஆம் இடத்தைப் பார்ப்பார் என்பதால் 8 12-ஆம் இடம் சுபத்துவம் அடைந்து பிரதேசவாதம் என்னும் வெளிநாட்டு வாழ்க்கை கிடைக்கும். குருவின் சமசப்தம ஏழாம் பார்வை லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் விழுவதால் இரண்டாம் வீடு சுபத்துவ பட்டு இரண்டாம் வீட்டின் காரகத்துவங்கள் ஆன தனம் குடும்பம் வாக்கு   ஜாதகருக்கு பரிபூரணமாகக் கிடைக்கும்,  குருவின் 9ம் பார்வை நான்காம் வீட்டில் விழும் என்பதால்,  தாய், வீடு, வாகனம், சொகுசு போன்ற அனைத்து  இன்பங்களும் ஜாதகருக்கு கிடைக்கும்.

சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன்,  வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் 8-ஆம்  இடத்தில் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் 8-ஆம்  இடத்தில் நின்றால் மற்றொரு பலன். பொதுவாக எட்டாம்  இடத்தில் ஒளி கிரகங்கள் வரையக் கூடாது.

    • வளர்பிறை சந்திரன்: தசமி தாண்டிய வளர்பிறை சந்திரன்  8-ஆம் இருக்கும் பொழுது எட்டாமிடம் சுபத்துவம் படுத்தி இரண்டாமிடத்தில் சந்திரனின் முழு பார்வை விழுவதால் தனம் குடும்பம் வாக்கு போன்ற அனைத்து இரண்டாமிடத்தில் சுப காரகத்துவங்களை ஜாதகருக்கு மேலோங்கியிருக்கும்,  ஜாதகர் உருவாக்கு சுத்தமான  மனிதராக இருப்பார்.  சமுதாயத்தில் ஒரு நல்ல பெயரை பெற்றிருப்பார்
    • தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் 5ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்றால் அம்மாவாசை சந்திரன் இன்னொரு சனிக்கு நிகரானவர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது தசமி திதி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் ஏறக்குறைய சனியைப் போல 70% இருப்பார் ஆக 8ஆம் இடத்தின் அசுப காரகத்துவங்கள் ஆன வம்பு வழக்கு அசிங்கம் இன்ற அனைத்து அசுப  காரகத்துவங்களை சந்திரன் குறைவின்றி தருவார்,  மனோபயம்,  ஆயுள் பற்றிய பயம்,  சில சமயங்களில் மற்ற கிரகங்களின் நிலையை பொறுத்து அரசாங்க  தண்டனை கூட அமையும்

சூரியன்: ஜோதிடத்தில் சூரியன் ஒரு  அரை பாவகிரகம் என்பதால் சூரியன் 8-ஆம் இடத்தில் இருப்பது நல்லது அல்ல,  ஒரு ஜாதகத்தின் லக்னாதிபதி கருத்து லக்னத்தை சூரியனுக்கு ஒப்பிட்டு சொல்வார்கள் அத்தகைய சூரியன் எட்டாமிடத்தில் மறைவது  நல்ல பலனைத் தருவதில்லை,  கலப்பு பலனே அமையும் தன்னம்பிக்கை  குறைந்த ஒருத்தர் ஆக ஜாதகர் இருப்பார்.  அதிகாரம் மற்றும் ஆளுமை திறன் குறைந்தே காணப்படும்.  சூரியன் இரண்டாம் இடத்தோடு தொடர்பு கொள்வார் என்பதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி தீரும்.

புதன்: தனித்திருக்கும் புதன் ஜோதிடத்தில் ஒரு சுப கிரகம், அத்தகைய புதன் 8ஆம் இடத்தில் இருக்கும் பொழுது பெரும்பாலும்  எட்டாமிடம் சுபத்துவ படுத்தப்பட்டு 12-ஆம் இடமும் சுத்தமாக இருக்கும் பொழுது பரதேச வாசம் என்னும் வெளிநாட்டு பயணம் கிடைக்கும்,  தனித்த புதன் குருவுக்கு 33%   சுபர் என்பதால்  புதன் இரண்டாமிடத்தை தனது ஏழாம் பார்வையால் பார்க்கும் பொழுது ஜாதகர் வாக்கு சாதுரியம் அதிகம் பெற்றவராக இருப்பார்  மற்றும் சொல்லிக்கொடுக்கும் தொழில் என்று சொல்லப்படும் ஆசிரியர் தொழிலுக்கு கூட 2 10-ஆம் இடங்களோடு புதன் சம்பந்தப்பட வேண்டும்..

சுக்கிரன்: ஜோதிடத்தில் குருவுக்கு அடுத்த சுப கிரகம் சுக்கிரன்,  சுக்கிரனுக்கு எட்டாம் இடம் முழு மறைவு ஸ்தானம்,  எட்டாம் இடத்தில் சுக்கிரன் இருக்கப் பெற்ற  ஜாதகருக்கு தாமத திருமணம்  நடைபெறும் ஆனால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும் ஏனென்றால் சுக்கிரன் இரண்டாம் இடத்தோடு தொடர்பு கொள்வார்.  இவ்விடத்தில் சுக்கிரனுக்கு சனி செவ்வாய் ராகு தொடர்பு பெற்றால்  காமம் கிடைக்காது அல்லது மறுக்கப்படும்,  ஒருவரின் வாழ்க்கைக்கு சுக்கிரன் எத்தகைய நிலையிலும் பங்கம் அடைந்து இருக்கக் கூடாது.  ஏனென்றால் சுக்கிரன் மட்டுமே நாம் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வைப்பார்  இதற்கு மற்றொரு பெயர் சொகுசு வாழ்க்கை எனவே சுக்கிரன் எட்டாம் இடத்தில் மறைவது நல்லதல்ல.

செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கால் பாவ கிரகம், இருக்கும் வீட்டை கெடுத்துதான் தன்னுடைய   காரகத்துவங்களை  மற்றும்  பலன்களை  செய்வார். செவ்வாய் எட்டாமிடத்தில் தனித்திருப்பது ஒரு விதத்தில் நல்லது மற்றொரு விதத்தில் நல்லது அல்ல,  செவ்வாய் இருக்கும் வீட்டை கெடுத்து பலன் செய்வார் என்பதால் வம்பு வழக்கு அசிங்கம் அவமானம் போன்ற எந்த எட்டாமிடத்து அசுப காரகத்துவங்கள் இருக்காது  அதுபோல் நல்ல காரகத்துவங்கள்  இருக்காது.  ஆனால் எட்டாம் இடத்தில் செவ்வாய்க்கு குரு பார்வையோ அல்லது சுக்ர பார்வையோடும் கிடைக்கும் பொழுது எதிர்பாராத பண வரவு,  எதிரியின் பலம்,  ஷேர் மார்க்கெட் போன்ற அனைத்து காரகத்துவம் ஜாதகருக்கு கிடைக்கும்.  ஒருகாலும் செவ்வாய்க்கு எட்டாம் இடத்தில் சனி ராகு தொடர்பு இருக்கக்கூடாது,  அப்படி இருந்தால் விபத்து  ஏதாவது ஒரு சமயத்தில் நிச்சயமாக நிகழும்,    பாபத்துவம் அடைந்த செவ்வாய் எட்டாம் வீட்டில் அனைத்து அசைவ கார தத்துவங்களையும் இனிதே செய்வார். லக்னத்திற்கோ ராசிக்கோ எட்டில் செவ்வாய் இருக்கும்போது தாமத திருமணம் நடைபெறும்.

சனி: ஜோதிடத்தில் ஒரு கிரகம் முழுக்க பாவகிரகம் என்றால்  அந்த கிரகம் சனிதான்,  சனி பகவான் எந்த வீட்டில் இருந்தாலும் இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவங்களை கெடுத்தான் பலனை தருவார் ஆகையால் சனி பகவான் 8-ஆம் வீட்டில் இருக்கும்பொழுது மேலே செவ்வாய்க்கு சொன்ன அனைத்தும் சனிக்கு பொருந்தும் கூடுதலாக சனி  இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்வார் என்பதால் குடும்பம் தனம் வாக்கு கெடும்  ஆனால் ஆயுள் அதிகரிக்கும்,   சுபத்துவம்  இல்லாத சனி  எட்டாமிடத்தில் இருந்து தசை நடத்தும் பொழுது ஒரு மனிதர் எல்லா வசதிகளையும் இழந்து விடுவார் சில  ஜாதகங்களில். சனியின் மூன்றாம் பார்வை பத்தாம் இடத்தில் விழும் என்பதால் தொழிலில் பிரச்சினை உண்டாகும்  மற்றும் பத்தாம் பார்வை நாலாம் வீட்டில் விழும் என்பதால் தாய் வீடு வாகனம் கல்வி போன்ற அனைத்திலும் தடங்கல்கள் இருக்கும்.

ராகு: மேஷம், ரிஷபம்  கடகம்  கன்னி,  மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் ராகு நற்பலனை செய்வார், எட்டாம் இடத்தில் ராகு இருப்பது அவ்வளவு சிறப்பு அல்ல,  எட்டாம் இடத்து ராகு மரண பயத்தை கொடுப்பார்  மற்றும் மனோபலம்  குறைத்து காணப்படும்,  எந்த நிலையிலும்  எட்டாம் இடத்தில் இருக்கும் ராகுவிற்கு சனி செவ்வாய் தொடர்புகள் இருக்கக் கூடாது.  சனி செவ்வாய் தொடர்புகள் இல்லாமல் குரு சுக்கிர பார்வை பெற்று சுபத்துவம் மேலோங்கி இருக்கும்  எட்டாம் இடத்து ராகு  நல்ல பலனை தருவார்,  விபரீத ராஜயோகம்,  ஷேர் மார்க்கெட் எதிரியின் பலம் பினாமி பணம் போன்ற அனைத்து விஷயங்களும் தருவார். எட்டாம் இடத்து ராகு அன்னிய மத ஈடுபாட்டை கொடுப்பார்.

கேது: பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர்,  கேது எட்டாம் இடத்தில் இருக்கும் பொழுது தன் மதத்தை வளர்ப்பார்,  அதிக தெய்வபக்தி தன் மதத்தின் மேல் ஈடுபாடு அதிகரித்து காணப்படும்,  ராகுவிற்கு சொன்னதுபோல் கேதுவிற்கும் சனி செவ்வாய் தொடர்புகள் இருக்கக் கூடாது இருந்தால்  கேது கெட்ட பலனையே செய்வார் மற்றும் வீடு கொடுத்தவன் ஆட்சியோ உச்சமோ பெற்று சுபத்துவம் அடைந்து இருக்கும் பொழுது கேது தசை நல்ல யோகங்களைக் கொடுக்கும்.

 

இது 8-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a Reply