9-ஆம் பாவகம்.
லக்னத்திலிருந்து கணக்கிடும்போது 9-ஆம் இடமாக வருவது 9-ஆம் பாவகம் அல்லது ஆதிபத்தியம்,வேத ஜோதிடத்தில் 1,5 மற்றும் 9-ஆம் பாவகம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது ஜாதகத்திற்கு ஒருமுக அலி போன்றது. ஜோதிடத்தில் இந்த பாவத்தை பெருங்குணம் என்று சொல்லப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாமிடம் சுபத்துவம் ஆக இருக்கும்போது அந்த ஜாதகர் அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்க பெறுகிறார் ஆகையால் இந்த பாவத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்றும் பெயர் உண்டு. இந்த அவற்றின் உயிர் காரகத்துவம் தந்தையை குறிக்கிறது, மற்றும் தந்தைவழி மூதாதையர்களையும் குறிக்கிறது. ஒன்பதாமிடத்தில் சுப கிரகங்கள் மட்டுமே அமர்ந்திருப்பது ஒரு உயர்தர ஜாதகம் ஒன்பதாம் இடத்து அதிபதி ஒன்பதாம் வீட்டுக்கு மறைவது நல்லது அல்ல இது அந்த ஜாதகருக்கு எந்தவித பாக்கியங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதுபோல் ஒன்பதாம் பாவத்தில் சனி செவ்வாய் ராகு போன்ற பாப கிரகங்கள் இருப்பதும் நல்லதல்ல

9-ஆம் பாவகத்தில் காரகத்துவங்களை கீழே பார்ப்போம்
-
- தர்மம், புண்ணிய, தீர்த்த யாத்திரை
- குரு மற்றும் பெரியோர்களுக்கு மரியாதை செய்தல்
- மனத்தெளிவு
- தெய்வீக ஆராதனை
- அதிர்ஷ்டம்
- விவேகம், வீரம்
- தந்தை வழி சொத்து
- மகன் மற்றும் மகள்
- அஷ்ட ஐஸ்வர்யங்கள்
குரு: குருபகவான் ஒரு முதன்மை சுபக்கிரகம் அப்படிப்பட்ட சுபகிரகம் ஒன்பதாம் இடத்தில் இருக்கப்பெற்றவர் கொடுத்து வைத்த ஜாதகம். ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்ற ஒரு வாக்கியம் உள்ளது இதில் உள்ள உள் கருத்து என்னவென்றால் குரு இருக்கும் வீட்டையும் சுபத்துவ படுத்தி தனது 5ம் பார்வையால் லக்னத்தையும் பார்ப்பார் மற்றும் ஏழாம் பார்வையால் தைரியம் வீரியம் முயற்சி என சொல்லப்படும் மூன்றாம் இடத்தையும் பார்ப்பார் மற்றும் 9-ஆம் பார்வையால் ஐந்தாம் இடத்தை தொடர்புகொள்வார் அதனால் தான். வேத ஜோதிடத்தில் 5ஆம் அதிபதியும் 9ஆம் அதிபதியும் தொடர்பு கொள்வது ஒரு உன்னதமான விஷயம், அதாவது ஐந்தாம் அதிபதி ஒன்பதாம் இடத்தோடு தொடர்பு கொள்வதும் ஒன்பதாம் அதிபதி 5ஆம் இடத்து தொடர்பு கொள்வதும். திரிகோணங்களில் இடையே தொடர்பு கொள்வது உத்தமம். சுருக்கமாக சொன்னால் ஒன்பதாம் இடத்தில் குரு இருக்கப் பெற்றவர் சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர் ஆவார் 1, 5, 9 ஆகிய தசாபுக்திகள் வரும்பொழுது
சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன், வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் 9-ஆம் இடத்தில் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் 9-ஆம் இடத்தில் நின்றால் மற்றொரு பலன்.
-
- வளர்பிறை சந்திரன்: தசமி தாண்டிய வளர்பிறை சந்திரன் 9-ஆம் இருக்கும் பொழுது 2 3 4 ஆகிய இடங்களை தன் யோகத்தால் சுபத்துவ படுத்துவார் இதன் மூலம் தனம் குடும்பம் வாக்கு, தைரியம், நற்புகழ், வீரியம், தாய் வீடு வாகனம் கல்வி போன்ற அனைத்திலும் நற்பலன்களை அனுபவிக்க பிறந்தவராக இருப்பார்.
- தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் 5ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்றால் அம்மாவாசை சந்திரன் இன்னொரு சனிக்கு நிகரானவர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது தசமி திதி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் ஏறக்குறைய சனியைப் போல 70% இருப்பார் ஆக 9ஆம் இடத்தில் இருப்பது ஒரு நல்ல இடம் அல்ல ஏனென்றால் அந்த சந்திரன் இருக்கும் பாவகத்தை கெடுத்து பாக்கியங்கள் அனுபவிக்க இயலாத நிலையை தந்துவிடுவார்.
சூரியன்: சூரியன் ஒன்பதாமிடத்தில் பாபத்துவம் அடைந்து இருப்பது நல்லதல்ல ஏனென்றால் ஒன்பதாமிடத்தில் பாபத்துவம் பெற்ற சூரியன் காரகோ பாவ நாஸ்தி என்ற அமைப்பை கொடுத்துவிடுவார். இது தந்தைக்கு ஆகாது, ஒருவேளை சனியின் தொடர்பு பெற்றிருந்தாலோ அல்லது செவ்வாயின் தொடர்பு பெற்றிருந்தாலோ சனி திசை சூரிய புத்தி போன்ற தசா புத்திகளில் தந்தையை பிரியக் கூடும், அல்லது தந்தையே இல்லாமலும் ஆகிவிடும். இதற்குரிய விதிவிலக்கு என்னவென்றால் சூரியன் குரு, சுக்கிரன் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது சந்திராதி யோகத்தில் இருந்தால் இந்த காரகோ பாவ நாஸ்தி செயல்படாது.
புதன்: தனித்திருக்கும் புதன் ஜோதிடத்தில் ஒரு சுப கிரகம், அத்தகைய புதன் 9ஆம் இடத்தில் இருப்பதும் சுபத்துவம் தான் பெரியவர்களை மதித்தல், புத்திக்கூர்மை மூலம் சகல பாக்கியங்களையும் அனுபவித்தல். மற்றும் ஒன்பதாம் இடத்து புதன் முயற்சி ஸ்தானமான 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தைரியம் வீரியம் முயற்சி புகழ் கலை, எழுத்து, பத்திரிகை போன்ற சகல விஷயங்களிலும் வெற்றியை கொடுக்கும். பொதுவாகவே ஒன்பதாம் இடத்தோடு சுபர் தொடர்பு கொள்வது வாக்கியங்களை அதிகரிக்கும்.
சுக்கிரன்: ஜோதிடத்தில் குருவுக்கு அடுத்த சுப கிரகம் சுக்கிரன், சுக்கிரன் ஒன்பதாம் இடத்தோடு தொடர்பு கொள்ளும்போது பெண்களை மதிக்கும் நபராக இருப்பார், பெண்கள் மூலம் அனுகூலம் மற்றும் பெண்களால் நன்மை கிடைக்கப்பெறுவர். ஜாதகரை தன்னை சுற்றி இருக்கும் பெண்களை அதாவது தாய் மனைவி சகோதரி நண்பர்கள் போன்ற அனைவரையும் அனுசரணையுடன் கூடிய கருணையுடன் நடந்து கொள்வார். சுக்கிரன் மூன்றாம் இடத்தை தொடர்பு கொள்வதால் மூன்றாம் இடத்திற்கு சொந்தமான சுக்கிரனின் காரகத்துவங்கள் மேலோங்கியிருக்கும் வீரியம் கலை இயல் இசை நாடகம் போன்ற அனைத்திலும் ஜாதகர் தேர்ச்சி பெற்று இருப்பார்
செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கால் பாவ கிரகம், இருக்கும் வீட்டை கெடுத்துதான் தன்னுடைய காரகத்துவங்களை மற்றும் பலன்களை செய்வார். செவ்வாய் உண்மைதான் இடத்தில் இருப்பது நல்ல பல நல்ல ஒன்பதாம் இடத்து பாக்கியங்களை கெடுத்து பலன் செய்வார், அதாவது பெரியோர்களை அவமதித்தல் மற்றும் தந்தையிடம் கருத்து வேறுபாடு, சில சமயங்களில் தெய்வ நம்பிக்கை இன்மை போன்றவை இருக்கும். நாலாம் பார்வையால் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரயங்கள் இருக்கும், மற்றும் ஏழு மற்றும் எட்டாம் பார்வையால் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பார்ப்பதால் அசட்டு தைரியம், வீரியம் லோங்கியிருக்கும், செவ்வாய் காரகத்துவம் பூமி வீடு கிடைக்கப்பெறுவர். செவ்வாய் எத்தகைய பாவத்துடன் இருக்கிறார் என்பதை பொறுத்து மேலே சொன்ன பலன் மாறும்.
சனி: ஜோதிடத்தில் ஒரு கிரகம் முழுக்க பாவகிரகம் என்றால் அந்த கிரகம் சனிதான், சனி பகவான் எந்த வீட்டில் இருந்தாலும் இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவங்களை கெடுத்தான் பலனை தருவார் ஆகையால் சனி பகவான் 9-ஆம் வீட்டில் இருக்கவே கூடாது, இது தந்தைக்கு ஆகாது, தந்தையின் மேல் விரோதம் கருத்து வேறுபாடு, அதிஷ்டம் இன்மை பெரியோர்களை அவமதித்தல் போன்ற அனைத்து சுப காரகத்துவங்கள் மேலோங்கி நிற்கும். ஒன்பதாம் இடத்தில் இருக்கும் சனி மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் மூன்றாமிடம் பாபத்துவம் அடையும். 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் லாபத்தில் தடை இருக்கும், பத்தாம் பார்வையால் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஆறாம் வீடு பாபத்துவம் அடைந்து கடன் நோய் எதிரி போன்றவற்றை லக்னாதிபதியின் நிலையை பொருத்து கொடுப்பார்.
ராகு: மேஷம், ரிஷபம் கடகம் கன்னி, மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் ராகு நற்பலனை செய்வார், ஒன்பதாமிடத்தில் இடத்தில் ராகு இருப்பது அவ்வளவு சிறப்பு அல்ல, 9-ஆம் இடத்து ராகு அந்நிய மத ஈடுபாட்டை கொடுக்க செய்வார், ஒருவேளை ராகுவை குரு பார்த்தால் இந்த பலன் மாறும், ஒன்பதாம் அதிபதி ஆட்சியோ உச்சமோ ஆகி ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால் குரு பார்த்த ராகு நன்மையே செய்யும்.
கேது: பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர், கேது ஒன்பதாம் இடத்தில் இருக்கும் பொழுது கேது தெய்வ வழிபாடு மற்றும் டிரைவர் சிந்தனையை அதிகரித்துக் கொடுப்பார், தன் மத வழிபாட்டிலும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் ஈடுபட வைப்பார். ஆனால் கேதுவை சனி செவ்வாய் தொடர்பு கொண்டிருந்தால் இந்த பலன் மாறும் ஒன்பதாம் இடமும் பாபத்துவம் அடைந்து கேது கெடுதலை அதிகரித்து செய்வார்.
இது 9-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a Reply