10-ஆம் பாவகம்.
லக்னத்திலிருந்து கணக்கிடும்போது 10-ஆம் இடமாக வருவது 10-ஆம் பாவகம் அல்லது ஆதிபத்தியம்,வேத ஜோதிடத்தில் 1,4, 7 மற்றும் 10-ஆம் பாவகம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது ஜாதகத்திற்கு நான்கு தூண்கள் போன்றது. ஜோதிடத்தில் இந்த பாவத்தை கேந்திரம் என சொல்லப்படுகிறது அதிலும் 10-ஆம் பாவகம் பெரும் கேந்திரம் என்று சொல்லப்படுகிறது, இது கர்ம ஸ்தானம் என்றும் சொல்வது உண்டு, வேத ஜோதிடப்படி 10-ஆம் பாவத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஒரு விதி அதனால்தான் 9-ஆம் இடத்தை விட பத்தாம் இடம் ஒரு படி மேல், தர்மா அதிபதியாகிய 9-ஆம் அதிபதியும் கர்ம அதிபதியாகிய 10-ஆம் அதிபதியும் சேர்ந்து இருப்பதுதான் தர்மகர்மாதிபதி யோகம். இந்த ஒரு பாவகத்தில் தான் எல்லா கிரகங்களும் இருக்கலாம் இதில் உள்ள சூட்சமம் சுபத்துவம் மற்றும் பாபத்துவம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை பொறுத்துதான். பத்தாம் வீடு நீங்கள் செய்யும் தொழிலை குறிக்கும் 10-ஆம் வீட்டின் காரக அதிபதி சூரியன் ஏனென்றால் சூரியன் பத்தாம் வீட்டில் தான் திக்பலம் அடைவார், ஆறாம் இடம் ஒருவர் கீழ் வேலை பார்ப்பதை குறிக்கும் பொழுது பத்தாமிடம் ஒருவருக்கு எவ்வாறு நீங்கள் வேலை கொடுத்து பிழைப்பீர்கள் என்பதை குறிக்கிறது. இது ஜீவன ஸ்தானம் என்றும் சொல்லப் படுகிறது அதனால் தான் பத்தாம் இடத்தில் எந்த கிரகம் தொடர்பு கொள்கிறது என்பதை பொருத்து அந்த கிரகத்தின் காரக அமைப்புகளோடு வேலை அமையும், உதாரணத்திற்கு பத்தாம் இடத்தோடு செவ்வாய் தொடர்புகொண்டு சுபத்துவம் ஆகி இருக்கும் நிலையில் ஒருவர் மருத்துவம் அல்லது மருத்துவம் சார்ந்த தொழில் இருப்பார்.

10-ஆம் பாவகத்தில் காரகத்துவங்களை கீழே பார்ப்போம்
-
- வியாபாரம் மற்றும் மனிதம்
- அரசாங்க உத்தியோகம்
- வேலை
- மறைத்து வைக்கப்பட்ட புதையல்
- புனித பிரயாணங்கள்
- மந்திர சக்தி
- சுயமரியாதை
- தொழில் அம்சங்கள்
- உயர்ந்த அந்தஸ்து
- அரசன்
குரு: குருபகவான் அத்தோடு தொடர்பு கொள்ளும்போது பேசிப் பிழைக்கும் துறை அதாவது ஆசிரியர், சனி தொடர்பு பெற்று இருக்கும்பொழுது வக்கீல் போன்ற அமைப்புகளை கொடுப்பார். இருக்கும் வீட்டை சுத்தப்படுத்தி தன்னுடைய 5-ஆம் பார்வையால் இரண்டாம் வீட்டை பார்ப்பார் மற்றும் ஏழாம் பார்வையால் 4ஆம் வீட்டை பார்ப்பார் மற்றும் 9-ஆம் பார்வையால் 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வாக்கு சுத்தம், நல்ல குடும்பம் சொகுசு வீடு மற்றும் வாகனங்கள் கிடைக்கப்பெறுவர். அத்தோடு 10ஆம் இடத்தில் குரு இருந்து தொழில் செய்பவர் ஆயின் அவர் நகை கடை மஞ்சள் நிற தொழில் இவை அனைத்தையும் குரு ஆறாம் இடத்தோடு சம்பந்தப்படுவதால் கடன் பெற்று சுபத்துவம் ஆக தொழிலை விருத்தி செய்யும் நிலைக்கு கொண்டுவருவார். சுபத்துவ சனி மற்றும் அதிக சுபத்துவ குரு 2 10-ஆம் இடங்களோடு சம்பந்தப்படும்போது ஒருவர் நீதித்துறையில் இருப்பார். உபய லக்னங்களுக்கு குரு பத்தாம் இடத்து சம்பந்தம் படுவது கேந்திராதிபத்திய தோஷத்தை தரக் கூடிய நிலையில் இருக்கிறார் என்பதை கணிப்பது மிகவும் அவசியம்
சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன், வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் 10-ஆம் இடத்தில் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் 10-ஆம் இடத்தில் நின்றால் மற்றொரு பலன்.
-
- வளர்பிறை சந்திரன்: தசமி தாண்டிய வளர்பிறை சந்திரன் 10-ஆம் இருக்கும் அற்புதமான பலன்களை தருவார் தன்னுடைய ஏழாம் பார்வை மூலம் நான்காம் இடத்தை பார்த்து நல்லதாய் வீடு வாகனம் சொகுசு போன்ற அனைத்தையும் இனிதே தருவார், வெள்ளை சம்பந்தப்பட்ட தொழில்கள் அதாவது பால் தொழில்கள், திரவிய சம்பந்தப்பட்ட தொழில்கள் அமையும்.
- தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் 5ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்றால் அம்மாவாசை சந்திரன் இன்னொரு சனிக்கு நிகரானவர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது தசமி திதி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் ஏறக்குறைய சனியைப் போல 70% இருப்பார் ஆக 10ஆம் இடத்தில் இருக்கவே கூடாது 10-ஆம் இடத்தை கெடுப்பார் தாயைக் கெடுப்பார், ஆறாம் இடம் வலுப்பெற்றால் ஒருவர் கீழ் வேலை செய்து பிழைப்பார்கள் இல்லையென்றால் வேலையும் இல்லை தொழிலும் இல்லை என்ற நிலையில் இருப்பீர்கள், இரண்டாமிடம் வலுப்பெற்றால் குடும்பம் அமைந்து மனைவி மூலம் தீவனம் கிடைக்கும்.
சூரியன்: பத்தாம் இடத்தில் சூரியன் திக் பலம் பெறுவார், சிம்மம் சுபத்துவம் ஆகி, பத்தாம் இடத்தில் சூரியன் உச்சம்பெற்று சுபத்துவம் ஆக இருக்கும் கடக ராசிக்காரர்கள் பெரும்பாலும் அரசாங்க பணியில் ஓர் அரசாங்க உத்தியோகத்திலும் அல்லது அரசாங்கம் சார்ந்த துறையில் இருப்பார்கள், அல்லது ஆளுமை திறன் அதிகம் கொண்டு அரசாங்கத்துடன் தொழில் செய்வார்கள்.
புதன்: பத்தாம் இடத்தில் புதன் சம்பந்தப்படும்போது ஒருவர் தன் அறிவை பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் தொழிலில் இருப்பார்கள் அதாவது ஆசிரியர் போன்ற தொழில், புதன் பத்திலும் மற்றும் ஆறாமிடம் சுபத்துவம் ஆக இருக்கப்பெற்றவர் ஆடிட்டர், கணக்கு, பிரான்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிவர். இருந்தாலும் உபய லக்னங்களுக்கு புதன் பத்தாம் இடத்து சம்பந்தம் படுவது கேந்திராதிபத்திய தோஷத்தை தரக் கூடிய நிலையில் இருக்கிறார் என்பதை கணிப்பது மிகவும் அவசியம், கன்னி லக்னத்திற்கு மிதுன ராசி பத்தாம் இடமாக அது புதன் அதிக சுவையுடன் அமர்வது தவறு தொழிலைக் எடுப்பார் அல்லது தொழிலை இருக்காது. அதுபோல்தான் மீன, மிதுன மற்றும் தனுசு லக்னங்களுக்கும்.
சுக்கிரன்: குரு மற்றும் புதனுக்கு சொன்னதுபோலவே சுக்கிரனுக்கும் பத்தாம் இடத்தில் இருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுக்கும் நிலை வரும் இது சிம்மம் மற்றும் மகர லக்னங்களுக்கு மட்டும். பத்தாமிட தோடு அப்புறம் தொடர்பு கொள்ளும்பொழுது 4ஆம் வீட்டை பார்ப்பார் என்பதால் வீடு சொகுசு வாகனங்கள் போன்ற அனைத்தும் சிறப்பாக இருக்கும், கேந்திராதிபத்திய தோஷம் தராத நிலையில் சுக்கிரனின் காரகத்துவங்கள் ஆன ஹோட்டல், லாட்ஜில், சொகுசு ஆபரணங்கள், டிராவல்ஸ் போன்ற தொழிலை தருவார்
செவ்வாய்: பத்தாமிடத்து ஓடு சுபத்துவம் பெற்ற செவ்வாய் தொடர்பு கொள்வது ஒரு உயர்ந்த ஜாதகம். பத்தாம் இடத்தில் செவ்வாய் திக்பலம் அடைவார் இது பாவ கிரகங்களுக்கு எனது குருநாதர் “ ஜோதிடக்கலை அரசு திரு.ஆதித்யகுருஜி” சொல்வதுபோல் சூட்சம வழி ஆகும், செவ்வாயின் முன்கோபம். யோசனை அற்ற செயல் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு உயர்ந்த தொழிலாளர் டாக்டர் தொழில் அமைய பெறுவார். சுபத்துவம் படிநிலை பொருத்து ரியல் எஸ்டேட், இன்ஜினியரிங் போன்ற தொழிலில் இருப்பார் அல்லது தொழிலை செய்ய வைப்பார். பத்தாம் இடத்தில் செவ்வாய்க்கு சனி ராகு தொடர்புகள் ஒருக்காலும் இருக்கக்கூடாது அப்படி இருக்கப் பெற்றால் அந்த செவ்வாய் வீரம் என்ற பெயரில் அரசாங்கத்திற்கு விரோதமான செயல்களை செய்ய வைப்பார் ஏனென்றால் செவ்வாய் நான்காம் பார்வை லக்னத்தில் விழும் என்பதால்.
சனி: பத்தாமிட தோடு சனி தொடர்பு கொள்வது சிறப்பு அல்ல சனியின் சுபத்துவம் பொருத்தே நன்மைகள் அமையும், ஒருவேளை சனி ஆட்சியோ அல்லது உற்சவம் பத்தாம் இடத்தில் ஆகி அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு பெற்று இருந்தால் ஒருவனை திருட்டு தொழிலில் கூட ஈடுபடுத்தும் இதற்கு விதிவிலக்கு சுபத்துவம் மட்டுமே. குறைந்தபட்ச சுபத்துவம் இருந்து பத்தாமிடத்தில் சனி தொடர்பு கொள்ளும்பொழுது ஒருவர் பழைய பொருட்களை விற்கும் தொழில், ஏற்கனவே ஒருவர் உபயோகப்படுத்திய பொருட்களை விற்கும் தொழில், ஆட்டோமொபைல் மெக்கானிக் போன்ற தொழில் அமையும்.
ராகு: ராகு மற்றும் கேதுவை முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறோம், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் பத்தாம் வீடாக அமைந்ததாகும் ராகு ஓரளவுக்கு இயல்பு பலன்களை செய்வார், இருக்கும் வீட்டின் அதிபதி போலவும் தன்னை பார்க்கும் ரகத்தை போலவும் அவர் செயல்படுவார் என்பதால் வீட்டின் அதிபதி யார் என்பதைப் பொருத்தே ராகு மற்றும் கேதுவின் பலன் அமையும், ராகு கேதுக்களுக்கு வீடு கொடுத்தவர் உச்சம் அல்லது ஆட்சி ஆகும் பொழுது இந்த பலன் அபாரமாக இருக்கும் இவை அனைத்தும் ராகு தசையில் மட்டுமே ஆகும். கேந்திர கோணத்தில் இருக்கும் ராகு இருக்கும் இடத்தை கெடுத்து பலன் செய்வார் என்பதால் சனி அல்லது செவ்வாய் தொடர்பு பெறக்கூடாது ஏனென்றால் அவர் பத்தாமிடத்தில் தொழிலை சரித்து கெடுப்பார்.
கேது: கன்னி விருச்சிகம் மற்றும் கும்பம் பத்தாம் வீடாக அமையப்பெற்ற கேது தன் இயல்பை செய்தார், ராகுவிற்கு சொன்னதுபோல கேதுவிற்கும் வீடு கொடுத்தவன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் கேது தசை அபாரமான பலன்களை தருவார். கேதுவிற்கு குரு சுக்கிர தொடர்புகள் பெறும்பொழுது அபாரமான பலனைச் செய்வார்.
இது 10-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a Reply