பாதகாதிபதி பற்றி எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கிறது பயம் தீர என் புரிதலை இங்கு பதிவு செய்கிறேன்.
என் மானசீக குரு “ஜோதிடக்கலை அரசு திரு.ஆதித்ய குருஜி” அவர்களின் “பாதகாதிபதி பற்றிய ரகசியங்களை” படிப்பது பாதகாதிபதி பற்றிய புரிதலை ஆழ உணர்ந்து கொள்ளுங்கள்
பாதகாதிபதி என்பவர் யார்?
சர லக்னங்கள் ஆகிய மேஷம் கடகம் துலாம் மகரம் – 11ஆம் இடத்து அதிபதி பாதகாதிபதி ஆவார். அதாவது,
சர லக்னங்கள்:
மேஷம் – சனி பாதகாதிபதி
கடகம் – சுக்கிரன் பாதகாதிபதி
துலாம் – சூரியன் பாதகாதிபதி
மகரம் – செவ்வாய் பாதகாதிபதி
ஸ்திர லக்னங்கள் ஆகிய ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் – 9-ஆம் இடத்து அதிபதி பாதகாதிபதி ஆவார். அதாவது,
ஸ்திர லக்னங்கள்:
ரிஷபம் – சனி பாதகாதிபதி
சிம்மம் – செவ்வாய் பாதகாதிபதி
விருச்சிகம் – சந்திரன் பாதகாதிபதி
கும்பம் – சுக்கிரன் பாதகாதிபதி
உபய லக்னங்கள் ஆகிய மீனம் மிதுனம் கன்னி தனுசு – 7-ஆம் இடத்து அதிபதி பாதகாதிபதி ஆவார். அதாவது,
உபய லக்னங்கள்:
மீனம் – புதன் பாதகாதிபதி
மிதுனம் – குரு பாதகாதிபதி
கன்னி – குரு பாதகாதிபதி
கும்பம் – புதன் பாதகாதிபதி
முக்கிய குறிப்பு: உபய லக்னத்திற்கு மட்டும் கேந்திராதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி என்ற மூன்று தன்மைகளையும் குரு மற்றும் புதன் பெறுகிறார்கள் ஏழாமிடத்தில், ஆகவே மீனம் மிதுனம் கன்னி தனுசு ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு புதன் குரு ஏழாம் இடத்தில் இருக்கப் பெற்றவர்களுக்கு ஜாதகத்தை கணிக்கும் பொழுது நன்றாக வெளிப்படும் மிக அவசியம்

பெரும்பாலும் எல்லோருக்கும் ஒரு குழப்பம் பாதகாதிபதி தசை பாதகத்தை செய்யுமா செய்யாதா என்று ஒரு பயம்!
முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் பாதகம் என்றால் என்ன?
தடுக்கி விழுவது பாதகமில்லை, ஒரு ஆக்சிடன்ட் ஆவது பாதகமில்லை, ஏற்கனவே இருக்கும் உங்களின் கஷ்டங்கள் அதிக பட்டால் அது பாதகமில்லை அப்படியிருக்க பாதகம் என்றால் என்ன? ஒரு பாதகம் என்பது உங்களின் எதிரி கூட உங்களுக்காக வருத்தப்படுவது தான் பாதகம் உதாரணத்திற்கு ஆக்சிடென்ட் ஆகலாம் ஆக்சிடென்ட் ஆனதற்கு பிறகு உங்களால் எந்திரிக்கவே முடியாது என்று சொன்னால் அது பாதகம், நன்றாக நடந்து கொண்டிருந்த நீங்கள் ஆக்சிடென்ட் ஆனதற்கு பிறகு சப்போர்ட் இல்லாமல் நடக்க முடியாது என்று ஆனால் அது பாதகம், உங்களுக்கு நற்பெயர் இருக்க அந்தப் பெயர் கெடும்படி ஒன்று நடந்து திரும்ப நற்பெயர் எடுக்க முடியாது என்று ஆனால் அது பாதகம், இதுபோல் ஐயையோ இதுபோல் இவருக்கு நடந்து விட்டதே என்று உங்கள் உறவினர்கள், உங்கள் எதிரிகள் உங்களைப் பற்றி நினைக்கும் பொழுது சொல்வதுதான் பாதகம் என்பது..
சரி பாதகாதிபதி எப்போது பாதகம் செய்வார்? பாதகாதிபதி தான் வீட்டில் அமர்ந்து மிகுந்த சுபத்துவம் பெற்று இருக்கும்பொழுது மட்டும்தான் பாதகம் நடக்கும், பாதகாதிபதி தன் வீட்டில் இல்லாமல் வேறு எந்த வீட்டில் இருந்தாலும் பாதகம் செய்யாது மற்றும் வேறு ஏதாவது ஒரு கிரகம் பாதகாதிபதி வீட்டில் இருந்தால் பாதகம் செய்யாது,
முதலில் பாகத்திற்கும் கஷ்டத்திற்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம் பாதகாதிபதி தசை கஷ்டங்களை தருகிறது என்றால் பாதகாதிபதி தசையில் எந்த புக்திகள் கஷ்டங்களை கொடுக்கின்றது என்று அறிந்துகொண்டு அந்த கிரகம் எந்த நிலையில் எப்படி இருக்கிறது என்று புரிந்துகொண்டு சுபத்துவம் மற்றும் பாபதத்துவம் பொருத்திப் பாருங்கள்..
இந்த பதிவு உங்களுக்கு பாதகாதி பற்றிய புரிதலை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.. நன்றி.

Leave a Reply