My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

குழந்தைக்கு ஜாதகம் பார்க்கலாமா?

சாஸ்திரப்படி ஒரு குழந்தை 12 வயது வரை செய்யும் எந்த தவறுகளும் அந்தக் குழந்தையின் பாவ புண்ணிய கணக்குகளில் சேராது, இதை கதைகள் மூலமாக நாம் முன்னோர்கள் மற்றும் முனிவர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலகட்டம் மழலை காலகட்டம் 4 வயது வரை, அதன்பின் அந்தக் குழந்தைக்கு படிப்படியாக இந்த உலகத்தில் பொதுவான அமைப்புகளையும் எது சரி எது தவறு என்று பசுமரத்து ஆணி போல் கற்றுக் கொள்ளும் காலகட்டம் பள்ளிக்கூட காலகட்டம் 5 லிருந்து 16 வயது வரை, இந்த காலகட்டம் தாய் தந்தையரின் அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் மிக அவசியம். 13 முதல் 18 குழந்தை Teen பருவத்தை அடைய அடைகிறது. இந்தப் பருவத்தில் அந்தக் குழந்தை தாய் தந்தையரின் பேச்சைக் கேட்க வேண்டும் என்றால் அதற்கு முன் கால கட்டமான 5 லிருந்து மற்றும் 16 வரை அவர்கள் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்களோ அதன்படியே அமையும்.

தந்தையோ, தாயோ அல்லது இருவருமே நண்பனாக நடந்து கொண்டால் நிச்சயமாக அவர்களிடம் அந்த குழந்தை எல்லாவற்றையும் சொல்லும் ஒரு அற்புதமான உறவு ஏற்படும். இல்லையென்றால் மறைமுகமாகத்தான் அந்த குழந்தை எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளும் தனது கர்மாவிழிக்கும் காலகட்டமான 21 வயது வரை..

மேலே கூறியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒருவர் குழந்தை பிறந்தவுடன் அல்லது 12 வயதிற்கு முன் ஜாதகத்தை பார்க்கும் பொழுது, குழந்தைக்கு இது சரியில்லை, அது சரியில்லை குழந்தை பிறந்ததால் தான் தந்தைக்கு தொழிலில் சரிவு, தாய்க்கு நலி, என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுவதன் மூலமாக குழந்தையை தாய் தந்தையர் வேறு கண்ணோட்டத்தில் அல்லது குழந்தையால்தான் இதெல்லாம் நடக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்து விடுவார், இதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணம் என்னவென்றால் ஒரு குழந்தையின் ஜாதகத்தில் லக்னம் ராசிக்கு சந்திரனும் சூரியனும் மறைந்திருக்க, 4 மற்றும் 9ம் பாவகங்கள் பாவத்துவமாக இருக்க, லக்ன அவயோக தசை சிறுவயதில் குழந்தைக்கு நடக்க இருக்குமாயின் குழந்தை இடம் இருந்து தாய் தந்தையரை பிரித்து வைக்கும் அமைப்பு இன்றும் நடைமுறையில் இருக்கிறது அல்லது குழந்தையை தவிட்டுக்கு மாற்றுத் தாய்க்கு கொடுத்து விடுவார்கள் பரிகாரம் என்ற பெயரில் (பிரித்து வைத்தால் நடப்பவை நடக்காமல் இருக்குமா? கிரகங்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியுமா? அல்லது ரத்த பந்தம் இல்லாமல் போய்விடுமாம்?)..

வெகு நாட்கள் கழித்து பிறந்த குழந்தையின் மழலையை கேட்காமல் அதனோடு விளையாடாமல் அந்த குழந்தையை பிரிந்து இருந்து என்ன பயன்? அல்லது சதா உன்னால்தான் இதெல்லாம் நடக்கிறது உன் ஜாதகம் சரியில்லை என்று சொல்லி அந்த குழந்தையின் மனதை புண்படுத்துவதால் என்ன பயன்?

ஜனனமும் மரணமும் ஜோதிடர்கள் கையில் இல்லை, அது இறைவனின் கையில் உள்ளது. அதுபோல்தான் குழந்தை பாக்கியமும் இறைவனின் கையில்தான் உள்ளது, இறைவன் அந்த பாக்கியத்தை உங்களுக்கு கொடுக்கிறார் என்றால் அதனுடன் சந்தோஷமாக காலத்தை கழியுங்கள்.

மேலே சொன்னது போல் தான் குழந்தையின் ஜாதகத்தை காட்டி என்ன படிப்பான் என்று கேட்பது, உண்மையிலேயே குழந்தை 9வது தாண்டிய பின் தான் அந்தக் குழந்தை தனக்கு என்ன வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்திற்குள் வரும், அதுவும் தசா புக்திகளை பொறுத்தே இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் இந்த பூவுலகில் தனித்துவமானது, பெற்றோர்களின் எண்ணங்களை குழந்தை மேல் திணிப்பது சரியாகாது, மாற்றி யோசியுங்கள் உங்களின் தாய் தந்தையர் உங்கள் மேல் விஷயங்களை திணிக்கும் பொழுது நீங்கள் எப்படி உணர்வீர்களோ அதே உணர்வு தான் உங்கள் குழந்தைக்கு இருக்கும்.. பாவம் வெளியே சொல்லத் தெரியாது!!

ஒரு குழந்தை என்ன படிக்கும் என்பதை ஜோதிடம் மூலம் அறியலாம் என்ன தொழில் அல்லது வேலை செய்யும் என்பதையும் ஜோதிடம் மூலம் அறியலாம் ஆனால் எல்லா ஜோதிடர்களாலும் அறிய முடியுமா என்பது இங்கே கேள்விக்குறியாகவே இருக்கிறது!!! உதாரணத்திற்கு செவ்வாயின் படிநிலைகளின் படி ஒரு குழந்தை மருத்துவர் ஆகுவதற்கும் அதே குழந்தை Civil Engineer ஆவதற்கும் வேறுபாடுகள் உள்ளது, 10 வயதில் ஜாதகம் பார்த்து இந்தக் குழந்தை Civil Engineer தான் ஆகும் என்று ஜோதிடர் சொன்னால் அந்தக் குழந்தையை பெற்றோர்கள் Civil Engineer ஊக்குவிப்பார் பாவம் குழந்தையின் எண்ணம் மருத்துவராக வேண்டும் என்று இருக்கும் ஆகாமலே சில சமயம் போய்விடும்.. 🤦‍♂️🤦‍♂️.. அதனால் அந்தக் குழந்தை, தன்னிடம் என்ன திறமை உள்ளது, என்ன வேண்டும் என்று கண்டறிவதற்கு அந்தக் குழந்தை சராசரி காலகட்டமான படிப்பில் 9வது வகுப்பை தாண்ட வேண்டும்!!.. இது நூற்றுக்கு 90% சதவீத குழந்தைகளுக்கு பொருந்தும், மீதமுள்ள 10% சிறுவயதிலிருந்தே தனக்கு என்ன வேண்டும் என்பதை தானே நிர்ணயிக்கும் குழந்தைகளாக இருக்கும் ஜாதகமும் தசா புத்தியும் அந்தக் குழந்தைக்கு ஒத்துழைக்கும்..

அதனால் பொதுவாகவே, நான் 12 வயதிற்கு முன் குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது இல்லை…
விதிவிலக்காக, குழந்தையின் உடல்நலம் பாதிப்பு அடையும் பொழுதும் பாலாரிஷ்டம் போல் இருக்கும் பொழுதும் உடல் நலத்திற்காக ஜாதகம் பார்க்கலாம்..

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

#bhavishyamaarg

Leave a Reply