கோபுரத்தில் இருக்கும் ஒருவரை கீழே இறக்கவும், கீழே இருக்கும் ஒருவரை கோபுரத்திற்கு கொண்டு செல்லவும் கேதுவின் மறுமுனை நாயகனாக ராகு திகழ்கிறார்.. ராகு சுபத்துவமாக இறந்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் கொடுப்பார் என்றால் கேது சுபத்துவமாக இருந்தால் நியாயமாகத்தான் கொடுப்பார்.. அதாவது நீ உழைத்து உன் உழைப்புக்கேற்ற பேரையும் புகழையும் பெற்றுக் கொள் என்பதே!!
எனது YouTube சேனலில் “கேதுவின் சூட்சமங்கள்” காணொளிகளில் சொல்லாத சிலவற்றை இங்கு பார்ப்போம்..
ஒளி தத்துவப்படி, ராகு உடன் சேரும் கிரகங்கள் ஒளியை இழக்கும் என்றால் கேதுடன் சேரும் கிரகங்கள் தனது சுய ஒளியை இழப்பதில்லை ஆனால் மாற்றி கொள்ளுகிறது. உதாரணத்திற்கு கேது பிரஸ்ட கிரகணத்தின் போது நிலவின் நிறம் செந்நிறமாக மாறி இருக்கும்.
இந்த மாற்றம் கேது மூலம் ஏற்படுவதால் கேது மாற்றத்தை குறிக்கும் ஒரு கிரகமாக இருக்கிறது.
ஒருவர் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறார் மற்றும் எத்தகைய நிலையில் இருக்கிறார் என்பதை பொறுத்து மாற்றங்கள் இங்கு அமையும்.
எவருடனும் சேராத கேது, யார் பார்வையிலும் இல்லாத கேது, கன்னி விருச்சிகம் மற்றும் கும்பத்தில் இருக்கும் பொழுது முழு ஞானத்தை தனது தசையில் முழுமையாக தருவார்..
குருவுடன் சேர்ந்து வேறு எவர் பார்வையும் தொடர்பும் இல்லாத கேது தன் தசையில் கேளயோகம் தருவார்.
சுக்கிரனுடன் சேர்ந்து வேறு எவர் பார்வையும் தொடர்பும் இல்லாத கேது தன் தசையில் முறையான காமத்தையும், போதும் என்ற மனதையும் கொடுப்பார்.
புதனுடன் சேரும் கேது, தன் தசையில் ஜோதிடம், அறிவியல் அல்லது விஞ்ஞானம் பற்றிய புரிதலை கொடுப்பார்.
செவ்வாயுடன் சேரும் கேது சனி பார்வை பெறாமல் இருப்பது நல்லது. இந்த இணைவு செவ்வாயின் மேஷ விருச்சிக வீட்டில் இருக்கும் பொழுது கேது தசையில் ஆதிபத்திய பாதிப்புகள் சற்று இருந்தாலும் பெரிய அளவில் கெடுக்காது, ஆனால் மாறாக செவ்வாயுடன் கேது இணைந்து மகர கும்பத்தில் இருக்கும் பொழுது கேது தன் தசையில் ஆதிபத்திய மற்றும் காரக கெடுதலை தந்தே தீருவார்..
மேலே குறிப்பிட்டதை போல் தான் சனி உடன் சேரும் கேது மகர கும்பத்தில் இருக்கும் பொழுது அவ்வளவு பாதிப்பு இல்லை என்றாலும் மேஷ விருச்சிக வீட்டில் செவ்வாய் பார்வையில் இருக்கும் பொழுது ஆதிபத்திய காரக கெடுதல்களை தந்தே தீருவார்..
சூரிய சந்திரர்கள் உடன் சேரும் கேது கிரகண அமைப்பை ஏற்படுத்துவார் என்பதால் கேது தசையில், சூரிய சந்திரர்கள் எந்த ஆதிபத்தியத்திற்கு சொந்தக்காரர்கள் அந்த ஆதிபத்திய காரக நன்மைகள் இருக்கும், சனி செவ்வாய் பார்வைகள் அல்லது தொடர்பை பெறாத பொழுது..
கேது தசை என்றதுமே பயந்து விட தேவையில்லை, மாற்றத்தை எப்படி கொடுப்பார்? உடல் ரீதியான மாற்றமா? மனரீதியான மாற்றமா? ஞானத்தை கொடுக்கப் போகிறாரா? அனுபவத்தை கொடுக்கப் போகிறாரா? அனுபவபூர்வமான ஞானத்தை பிறருக்கு எடுத்துரைக்க உங்களுக்கு கொடுக்கப் போகிறாரா?
மாற்றத்தை கொடுக்கும் கேது திடீரென்று ஒருபொழுதும் மாற்றத்தை கொடுக்க மாட்டார். தனது தசை அல்லது புத்தி தொடங்கியவுடன் ஒரு குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலம் தெளிவு பெற வைத்து நிரந்தர மாற்றத்தை தருவார். இந்த மாற்றம் நல்லதா அல்லது கெட்டதா என்பதற்கு கேது இருக்கும் பாவகம், கேதுவை பார்க்கும் கிரகம், கேதுடன் இணையும் கிரகம் என்று பல கோணத்தில் இதை ஆய்வு செய்த பிறகு இந்த மாற்றத்தை உறுதி செய்ய முடியும். ராகுவைப் போல் கேது இல்லை. ராகு கெட்டால் சோலியை முடித்து விடுவார், கேது கெட்டால் ஏன்டா பிறந்தோம் என்பதை போல் என்ன வைத்து பிறருக்கு கேது திசை முடிவில் உபதேசம் செய்ய வைப்பார் என்பது ஜோதிட சூட்சமம்…
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
#bhavishyamaarg

Leave a Reply