எல்லா விதிகளையும் விதிவிலக்கையும் ஒரே கட்டுரையில் கூற முடியாது ஆகையால் ஒரு பொதுவான அமைப்பை கூறுகிறேன்..
முழு பவரான சனிக்கும் முக்கால் பாவாண செவ்வாய்க்கும் எந்த லக்னமாக இருந்தாலும் விதிவிலக்கு இருந்தால் மட்டுமே நல்லதை தரக்கூடிய கிரகங்களாக அமைகிறார்கள். உதாரணமாக மகர கும்ப லக்னத்திற்கு லக்னத்திலேயே அமரும் லக்னாதிபதி அத்தகைய நற்பலனை தருவதில்லை தன் தசையில், உடல் ஆரோக்கியத்தைத் தவிர, சுபத்துவம் சூட்சம வலு இங்கே விதிவிலக்கு. அதுபோல்தான் செவ்வாயும். இதன் சாராம்சம் என்னவெனில் தன் காரகத்துவங்கள் வழியே இருக்கும் பாவகத்தையும், பார்க்கும் பாவகத்தையும் கெடுக்கக்கூடிய கிரகங்களாக இவர்கள்.
உதாரணத்திற்கு சிம்ம லக்னத்திற்கு சனியை எடுத்துக் கொண்டால்,
சிம்ம லக்னத்திற்கு கடும் எதிரி 6,7ம் பாவகத்திற்குரிய சனி, 6ம் வீட்டு, கடன், நோய், எதிரி போன்ற அனைத்தையும் கொடுக்க கடமைப்பட்ட சனியே திருமணத்தையும் கொடுக்க கடமைப்பட்டவர். ஆக சனி சிம்ம லக்னத்திற்கு எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டை கெடுத்து தன்னுடைய 6, 7ம் வீட்டு ஆதிபத்தியத்தை தன் காரகத்துவ வழியே இருக்கும் வீட்டின் வழியே தருவார். அதனால் சனி பகவான் சிம்ம லக்னத்தை சேர்ந்த ஒரு ஜாதகருக்கு அதிக பணத்தையும் நன்மைகளையும் தர வேண்டும் என்றால் இங்கே மிகவும் உன்னித்து கவனிக்க கூடிய ஒரு சில அமைப்புகள்..
- லக்னத்தின் வலு, லக்னாதிபதியின் வலு, விரையாதிபதி ஆனாலும் சந்திரனின் வலு.
- சனி பகவானுக்கு வீடு கொடுத்தவனின் நிலை
- சனி பகவானுக்கு சாரம் கொடுத்தவனின் நிலை மற்றும் எங்கு இருக்கிறார்
- திருக் பல அமைப்பில் சனியின் சுபத்துவம் மற்றும் பாவத்துவம்
- சனி பகவான் எந்த பாவகத்தோடு நேரடி தொடர்பில் இருக்கிறார்
- 8ம் அதிபதி ஆகிய குருவின் நிலை மற்றும் பாதகாதிபதியின் நிலை
- தன மற்றும் லாப அதிபதியின் நிலை
- நவாம்சத்தில் சனிபகவானின் நிலை மற்றும் மற்ற கிரகங்களின் நிலை
- சனி நீச்சமாகி குரு சுக்கிர தொடர்புடன் சுபத்துவமாக இருக்கிறாரா, அல்லது சூட்சம வலு பெற்று அதாவது கேதுடன் இணைந்து அல்லது நேரடி வலுவிழந்து இருக்கிறாரா, உச்சமாகி கேதுடன் சேர்ந்து இருக்கிறாரா?
சரி ஏன் இவ்வளவு நீண்ட லிஸ்டை கொடுக்கிறேன் என்று எல்லோருக்கும் ஒரு வியப்பு இருக்கவே செய்யும். அதிலும் ஒரு சிலர் ஏளனம் கூட செய்யலாம், அதாவது இதற்கு சனி பகவான் தராமலே இருக்கலாம் என்று!!! ஆனால் இங்கே ஜோதிடம் என்பது ஒன்று அல்லது இரண்டு கிரகத்தை மட்டும் வைத்து பலன் சொல்ல கூடிய சாதாரண சாஸ்திரம் இல்லை.
சனி பகவான் தசை நடத்தும் பொழுது தசாநாதன் ஆகிய சனி பகவானுக்கு உறுதுணையாக புக்திநாதர்கள் செயல்பட வேண்டும். அதற்காகத்தான் இத்தனை பெரிய நீண்ட லிஸ்ட். சனி தசையில் ஒவ்வொரு புக்திகளும் சனி பகவானுக்கு கட்டுப்பட்டு நல்ல அல்லது தீய பலனை செய்ய கடமைப்பட்டவர்கள். அதனால் அவர்களும் ஒரு நல்ல நிலையில், நல்ல இடத்தில் இருக்கும்பொழுது மட்டுமே சனி பகவானும் பலன் தர முடியும் என்பது இங்கே உள்ள அர்த்தம். அதாவது இதை வேறு கோணத்தில் சிந்தித்தால் சனி பகவான் மட்டும் நன்றாக இருந்து பிரயோஜனம் இல்லை புக்திநாதர்களும் நன்றாக இருக்க வேண்டும். சனி பகவான் கொடுப்பதை புக்திநாதர் எடுத்து செயல்படுத்த வேண்டும் மற்றும் லக்னாதிபதி மற்றும் மனோகாரகன் தாங்கி பிடிக்க வேண்டும் அதற்காகவே.
சனி பகவான் மட்டும் நன்றாக அல்லது நல்ல இடத்தில், நல்ல சாரத்தில் இருந்து, புக்திநாதர்கள் மற்றும் அவர்களுக்கு சாரம் கொடுத்த அனைத்து கிரகங்களும் 6, 8ம் பாவகங்களோடு அல்லது சஸ்டாஷ்டக அமைப்பில் பாவத்துவமாக இருக்கும் பொழுது சனி தசை நன்றாக இருக்காது.
இதற்கு மாறாக,
சனி பகவான் கோணத்தில் அமர்ந்தாலுமே நல்ல சாரம் பெற்று சாரநாதன் நல்ல வீட்டில் அமர்ந்து, லக்னம் லக்னாதிபதி மற்றும் சந்திரன் நன்றாக இருக்க பெற்று, புக்திநாதர்களும் சஷ்டாஷ்டகமாக அல்லது 6,8ம் இடங்களோடு சம்பந்தம் படாத இருக்கும் நிலையில் சனி திசை நன்றாகவே இருக்கும் சிம்ம லக்னத்திற்கு..
எல்லா கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருக்க முடியாது, அதனால் படிநிலைகளின் படி சனிபகவானின் நண்பர்களான புதன், சுக்கிரன் மற்றும் ராகுவும் நல்ல அமைப்பிலிருந்து, ராஜ யோகாதிபதியான செவ்வாய் நல்ல அமைப்பிலிருந்து, லக்னாதிபதியும் சனி பகவான் கொடுப்பதை தாங்கிப் பிடிக்கும் நிலைமையில் இருக்கும் பொழுது, நிச்சயமாக சனி தசை ஒரு மிகப்பெரிய யோக தசையாக இருக்கும். இதன் அடிப்படையில் தான் மிகப்பெரிய தொழிலதிபர்கள், பிரபலங்கள், ஒரு அதிகாரத்தில் இருக்கக்கூடியவர் மற்றும் ஏழ்மை நிலையில் இருந்து ஒரு உன்னத நிலைக்கு வரக்கூடிய ஜாதகங்கள் இருக்கும்.. கிரகங்களின் படிநிலைகள் குறைய குறைய சனி தசையில் பலன்களும் குறையும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஜாதகங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பார்த்தால் இந்த அமைப்பு புரியும்..
இது போல் தான் மற்ற லக்னங்களுக்கும் சனி செவ்வாய் அமைப்பு!!
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
#bhavishyamaarg

Leave a Reply