My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

சுய ஜாதகமும், கோச்சாரமும்

ஒருவர் பிறக்கும் பொழுது அன்றைய அந்த நொடி கோச்சாரம் சுய ஜாதகமாக மாறுகிறது, அந்த நொடியில் இருந்து சுய ஜாதகமும் கோச்சாரமும் இணைந்து அந்த ஜாதகருக்கு செயல்பட ஆரம்பிக்கிறது இதுவே ஜோதிடம் என்கிற மகா விஞ்ஞானம் ஆகும். இதில் சுய ஜாதகம் எத்தனை சதவீதம் செயல்படும் கோச்சாரம் எத்தனை சதவீதம் செயல்படும் என்பது இன்றும் சர்ச்சைக்கு மற்றும் ஆராய்ச்சிக்கும் உட்பட்டதாகவே இருக்கிறது.

கோச்சாரத்தை வைத்து மட்டுமே பார்க்கும் ஆருட ஜோதிட முறையும் உள்ளது. சுய ஜாதகத்தை மட்டுமே வைத்து பார்க்கும் முறையும் உள்ளது. ஆனால் ஒரு மனிதருக்கு சுய ஜாதகமும் கோச்சாரமும் இணைந்து எல்லா நொடியிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பார்க்கும் பொழுது புரியும்.

சமீப காலமாக முகநூலில் பதிவிடும் ஜாதகங்களானது “இந்த ஜாதகர் ஏன் இறந்தார்?”, “இந்த குழந்தை ஏன் இறந்தது?”, “இந்தப் பலன் இந்த ஜாதகருக்கு இப்பொழுது ஏன் நடந்தது” என்று கேள்வியுடனே கேட்கப்படுகிறது.

லக்னமும் வலுத்து லக்னாதிபதியும் வலுத்து இருக்கும் குழந்தைக்கும் அல்லது ஒரு ஜாதகருக்கும் மரணம் ஏற்பட்டதற்கு காரணம் என்ன (அதாவது அற்ப ஆயுள் இல்லாத ஜாதகம்) என்பதை ஆராயும் பொழுது கோச்சாரம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு கோச்சாரம் மிக மோசமாக இருந்தது (நானும் இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு இருந்தேன் என்னுடைய YouTube சேனலில்) எல்லோருக்கும் தெரியும் இதில் எத்தனை ஜாதகர்கள் பாதிப்பினை அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமே முகநூலில் பதிவிடும் அதிர்ச்சியான பதிவுகள் மற்றும் ஜாதகங்கள்.

எப்படி மற்றும் ஏன் மரணம் சம்பவித்தது, அல்லது ஏன் இந்த நிகழ்வு நடந்தது என்பதற்கான பதில் சுய ஜாதகத்தில் பார்க்க முடியாது ஆனால் கோச்சாரத்தை இணைத்தால் பலன் துல்லியமாக வெளிவரும். அதனால் கோச்சாரத்தை முன்வைத்து சுய ஜாதக தசா புக்தியை பின் வைப்பதா? அல்லது சுய ஜாதக தசா புத்தியை முன்வைத்து கோச்சாரத்தை பின் வைப்பதா? என்பதற்கான விடை ஒரு சமயம் இதுவாகவும் ஒரு சமயம் அதுவாகவும் அமைகிறது. அதாவது நீங்கள் பார்த்த ஜாதகத்திற்கு சுய ஜாதக தசாபுத்தி அமையலாம், மற்றொருவர் பார்த்த ஜாதகத்திற்கு கோச்சாரம் அமையலாம்.. கடந்த கால கோச்சாரத்தை சற்று உள்வாங்கி பார்த்தால் மகர லக்னத்திற்கு கடந்த ஏப்ரல் 2023 மாதம் 6,8ம் அதிபதிகள் மற்றும் விரையாதிபதியாகிய குருவும், ராகுவால் பிடிக்கப்பட்டு சனியின் பார்வை வாங்கி இருந்த காலம் சுய ஜாதகத்தில் நல்ல தசா புக்திகள் நடந்திருந்தாலும் நல்ல பலனை தந்திருக்காது, இன்னும் சொல்லப் போனால் அதிகமான மகர, ரிஷப, மேஷ, விருச்சிக, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வயதிற்கு ஏற்றவாறு பாதிக்கப்பட்டு இருந்தார்கள், ஒரு சிலர் இறந்தும் போனார்கள், (சமீபத்திய உதாரணம் நேற்றைய முகநூலில் பதிவிட்ட மகர லக்னத்தில் 2022 ஆண்டு பிறந்த ஒரு குழந்தை எடுத்துக்காட்டு).

இதை வேறொரு கோணத்தில் சிந்தித்தால் ஒருவர் சுய மரணம் கொள்ளும் பொழுது அற்பாயுள் பெரும்பாலும் அங்கே தெரிவது இல்லை, அதாவது ராகு மட்டும் சந்திரன், 5ம் அதிபதி, 6ம் அதிபதி, 8ம் அதிபதி போன்றவர்களை பிடித்து 6 அல்லது 8ம் இடங்களில் இருப்பார். (இந்த மாரியான ஜாதக அமைப்பில் இருப்பவர்கள் சுய மரண முயற்ச்சிக்கு தூண்டப்படுவார்கள் ராகுவால் ஆனால் எல்லோரும் இறப்பதில்லை), சில ஜாதகர்களுக்கு லக்னம் லக்னாதிபதி போன்றவர்கள் வலுத்தே இருப்பார்கள், இந்த சமயங்களில் தான் கோச்சாரம் பெருமளவில் செயல்படுகிறது. சுருக்கமாக சொன்னால் கோச்சாரம் இடம் கொடுக்காவிட்டால் அந்த சம்பவம் நடந்திருக்காது என்பதே இதில் புதைந்திருக்கும் உண்மை.
எனது நீண்ட ஆராய்ச்சியில் கோச்சாரத்தின் முக்கியத்துவத்தை எல்லா சமயங்களிலும் உணர்ந்து இருக்கிறேன், ஒரு பலன் நடப்பதற்கு கோச்சாரம் மிக முக்கியம், சுய மனித ஜாதகத்தை மட்டுமே வைத்து பார்த்தால் பலனின் துல்லியம் குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கு மற்றொரு உதாரணம் திருமண காலம் கூடி வருவதற்கு கோச்சார குருவின் அமைப்பும் தேவைப்படுகிறது என்பதே!!!!

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

#bhavishyamaarg

Leave a Reply