ராகு இருக்கும் பாவகத்தை கெடுத்து பலன் செய்யும் ஒரு அற்புதமான கிரகம், குரு சுக்கிரன் தொடர்பை ராகு பெரும்பொழுது எந்த பாவகத்தில் இருந்தாலும் ராகு தசை அல்லது புத்தி வருமாயின் நல்ல பலனையே ராகு செய்யும். ஆனால் சனி தொடர்பையோ அல்லது செவ்வாய் தொடர்பு பெரும் ராகு அத்தகைய நற்பலனை செய்வது இல்லை. அதாவது சனி செவ்வாய் தொடர்பு பெற்ற ராகு, உச்ச குரு தொடர்பை பெற்றாலும் சில சமயங்களில் ராகு தன் கடமையைச் செய்யும்.
சில நாட்களுக்கு முன்பு என்னிடம் வந்த ஜாதகங்களில் ராகு தலைவிரித்து ஆடிய அமைப்புகள்..
மேஷ லக்னத்திற்கு 10ம் இடத்தில் மகர வீட்டில் சனி புதன் 5 டிகிரிக்குள் ராகு உடன் இணைந்து, உச்ச வக்கிரம் பெற்ற குருவின் பார்வை இருக்கும் ஒரு ஜாதகம், செவ்வாய் பார்வை ராகுவிற்கு இல்லை, மேம்போக்காக பார்க்க போனால் இங்கே சனி புதன் ராகு மூவரையும் உச்ச குரு தொடர்பு பெற இங்கே ராகுவின் இருள் தன்மை குருவின் பார்வையால் நீங்கி சுபத்துவம் என்று எடுப்பது சரியாக வராது. மற்ற பாவகங்களையும் கிரக தொடர்புகளையும் மற்றும் அமைப்புகளையும் கணித்த பிறகு ராகுவின் பலனை இங்கே கணிக்க வேண்டும். இங்கே 8 12 ஆம் இடங்கள் சுபத்துவமாக இருக்க, நான் முன்வைத்த கேள்வி.. எவ்வளவு பணம் பங்குச்சந்தையில் விட்டீர்கள்? என்பதே.. ஏனென்றால் ராகு 10ம் இடத்தில் இருந்து லக்ன அவையோக கிரகமான 6ம் வீட்டு அதிபதியான புதனுடனும், 10ம் இடத்து அதிபதியான சனி உடனும் தனக்காரனாகிய குருவின் பார்வையிலும் இருப்பதால் இந்த ராகு இவரை பங்குச்சந்தைக்கு இழுத்துச் செல்லும் என்பதே. வந்த பதில் 50 லட்சத்திற்கு மேல் விட்டேன்..
மற்றொரு ஜாதகத்தில், விருச்சிக லக்னம் 10ம் இடத்தில் பௌர்ணமியை விட்டு வெளிவந்த சந்திரன் மற்றும் ராகு சனி, சனி 18 டிகிரி, ராகு 25 டிகிரி, சந்திரன் 7 டிகிரி. லக்ன அவயோக கிரகமான புதன் 7ம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார், லக்னாதிபதி செவ்வாய் உச்சமாகி சூரியனிடம் அஸ்தமனம் ஆகி 8ம் பார்வையாக ராகுவை பார்க்கிறார், இங்கே உச்ச வக்கிரம் பெற்ற குரு, சூரியன் செவ்வாயை பார்க்கிறார். சூரியன் செவ்வாய் சுபத்துவம், சிவராஜ யோகம், சந்தர அதியோகத்தில் லக்ன அவையோக கிரகமான புதன், சூரியன் மற்றும் லக்னாதிபதி செவ்வாய் என்பது இங்கே பொதுவிதி. சந்திர தசை ராகு புக்தியில் Stroke, பின்பு குணமாகி, புத்தி மற்றும் மனம் பாதிக்கப்பட்டது இதற்கு மூல காரணம் ராகு தனக்கு முற்றிலும் ஆகாத 4 கிரகங்களுடன் தொடர்பில் இருப்பது, மற்றும் லக்ன அவையோக கிரகமான புதனின் பலனையும் எடுத்து செய்தது, அதாவது ஒளி கிரகமான சந்திரனும், பரிவர்த்தனைக்கு முன் சனியும், பின் சூரியனும் மற்றும் செவ்வாயின் 8ம் பார்வை.. லக்னம் லக்னாதிபதி 5ம் இடத்தை உச்ச குரு பார்க்க மற்றும் பாக்கியஸ்தானத்தில் குரு அமர.. ராகு தன் கடமையை செய்தது..
ஆக ராகுவை கணிக்கும் பொழுது சுபத்துவ பாவத்துவ விதிகளையும் பொருத்தி மற்ற கிரகங்களின் அமைப்பையும் சேர்த்து வைத்துக்கொண்டு, ராகுவை யார் பார்ப்பதால் எந்த ஆதிபத்திய காரகத்துவங்களை கொடுக்கப் போகிறார் மற்றும் யார் இணைவினாள் எதை செய்யப் போகிறார் என்பதை கணிக்க வேண்டும்..
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
#bhavishyamaarg

Leave a Reply