My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

லக்ன சந்தியும் அதை திருத்தும் முறையும்

தொழில் முறை ஜோதிடர்களுக்கு சவாலாக வருவது தான் இந்த லக்னசந்தி ஜாதகங்கள். ஒரு ஜாதகர் ஜோதிடரிடம் ஜாதக பலன் கேட்க வரும் பொழுது லக்னம் சந்தியில் அமைந்துவிட்டால் மிகப்பெரிய குழப்பத்திலும் நெருக்கடியிலும் அந்த ஜோதிடர் இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை ஏனென்றால், ஒரு லக்னத்திற்கு பலன் சொல்வதா? இரண்டு லக்னத்திற்கு சேர்த்து பலன் சொல்வதா அல்லது லக்னத்தை திருத்துவதா என்ற குழப்பத்தில் ஜோதிடர் இருப்பார். எப்படி இருந்தாலும் அந்த ஜாதக கடைசியில் திருப்தி இல்லாமல் போகும் நிலைமை உருவாகலாம்.

பெரும்பாலும் செல்போன் அல்லது மொபைல் போன் கண்டுபிடிக்கும் முன்னர் பிறந்த ஜாதகர்களுக்கு அதாவது தோராயமாக 1983 க்கு முன்னால் தொலைக்காட்சி பெட்டியில் வரும் தூர்தர்ஷன் செய்தி நேரத்தை நமது வீட்டில் மற்றும் ஹாஸ்பிடல் உள்ள கடிகாரத்துடன் இணைத்து நேரத்தை சரி செய்வது வழக்கமாக இருந்தது. மற்றும் இன்னும் பல வழிகள் இருந்தது. இந்த நேரங்கள் அனைத்துமே துல்லியமானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் கடிகாரத்தின் வேகம் கூடுதல் குறைதல் பொருத்து அமையும்..

அதனால் லக்ன சந்தியை நான் எப்படி திருத்திக் கொண்டிருந்தேன் ( தற்சமயம் நேரமின்மை காரணமாக திருத்துவது இல்லை) என்பதற்கான ஒரு சில அமைப்புகளை கீழே குறிப்பிடுகிறேன்.
ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் லக்ன சந்தியில் அமைந்திருந்தால்..

  1. முதலில் குணாதிசயங்களில் சொல்ல ஆரம்பிங்கள் – குணாதிசயங்கள் வேறுபட்டாலே லக்னசந்தி ஓரளவுக்கு பிடிபடும்
  2. 4,9 தாய் தந்தையரையும், 3,11 சகோதரர்களையும் குறிக்கும் பாவகங்கள் ஆகும், இதை வைத்துக் கொண்டும் லக்னசந்தியை திருத்தலாம்.
  3. 5ம் இடத்தை மற்றும் குழந்தை நிலையை வைத்துக் கூட லக்ன சண்டையை திருத்தலாம்.
  4. 8,12ம் இடம் சுபத்துவம் இதைப் பிடித்துக் கொண்டு பெரும்பாலான ஜோதிட ஆர்வலர்கள் இருப்பதை உணர முடிகிறது, ஆனால் அதிலும் ஒரு சூட்சமம் என்னவென்றால் சமுதாயத்தின் அடிப்படையில் இதை சேர்த்து பார்க்க வேண்டும் உதாரணத்திற்கு, திருமணம் ஆகும் முன் ஒரு பெண் தாய் தந்தையருடன் இருப்பார் ஆனதற்கு பிற்பாடு கணவனுடன் வேறு இடத்திற்கு செல்லும் அமைப்புகள் உருவாகும்.. சுருக்கமாக சொன்னால் 8 12ஆம் இடம் சுபத்துவமாக இருந்து உள்ளூரில் இருக்கும் ஜாதகங்கள் நிறைய உண்டு அதேசமயம் 8 12ஆம் இடம் சுபத்துவமாக இல்லாமல் வெளியூரில் வெளிநாட்டில் வெளி மாநிலத்தில் இருக்கும் ஜாதகங்களும் உண்டு, இதை அனுபவம் கூட உணருவீர்கள்.. அதனால் இதை மட்டுமே வைத்துக் கொண்டு லக்னத்தை திருத்த வேண்டாம் ஆனால் இதையும் ஒரு காரணியாக உபயோகப்படுத்துங்கள்.
  5. ஜாதகரின் திருமண நிலையை பொருத்தும் அதாவது லக்னத்திற்கு 1,2,5,7,8 பாவகங்களையும் அதில் அமர்ந்த கிரகங்களையும் வைத்து திருமண அமைப்பையும் சேர்த்து லக்ன செய்தியை திருத்தலாம்.
    6.
  6. கடைசியாக, ஜாதகர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான இரு சம்பவங்களை கேட்டு அந்த சம்பவங்களுக்கு ஏற்ப தசா புக்திகளை திருத்தி அமைத்த பிறகு, புதிதாக இரு சம்பவங்கள் ஜோதிடர் ஜாதகருக்கு கூறி அது ஒத்துவரவேண்டும். இல்லையென்றால் மறுபடியும் தசா புக்தியை திருத்தும் அமைப்பிற்கு செல்ல வேண்டும். இதை வைத்துக்கொண்டு திருத்திய பிறகு நிகழ்கால சம்பவங்களை துல்லியமாக சொல்லி அதுவும் சரியாக வர வேண்டும். இதுவே லக்ன சந்தியை திருத்தும் கடைசி முறையாக இருக்கும்.. இதற்கு மிகுந்த அனுபவம் வேண்டும்!!
    இறுதியாக லக்ன சந்தியில் அமைந்திருந்து ஜாதக பலன் கேட்க வருபவர்களுக்கு, லக்ன சந்தியை திருத்துவது அதாவது உங்களின் துல்லியமான நேரத்தை கண்டறிவது அவ்வளவு எளிது அல்ல, மேலே குறிப்பிட்ட இவை அனைத்தையும் சேர்த்து லக்ன சந்தியை திருத்தும் அளவிற்கு ஜோதிடருக்கு நேரமும் அனுபவமும் இருக்க வேண்டும்.. மற்றும் ஜோதிடரிடம் அணுகும் பொழுதே எனது ஜாதகம் லக்னந்தி என்று குறிப்பிடுவது நல்லது!!

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

#bhavishyamaarg

Leave a Reply