My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

வாரிசு தடையும், குழந்தை பாக்கியமும்

குழந்தை இன்மை என்பது வேறு, வாரிசு தடை என்பது வேறு. வாரிசு என்றாலே அது ஆண் குழந்தையை தான் குறிக்கிறது. அதாவது நம் சந்ததியை அல்லது குடும்பத்தில் தந்தை பின்பற்றும் தெய்வம், பழக்க வழக்கம், கலாச்சாரம் இதை தந்தை காலத்திற்கு பின்னர் தந்தையின் இறுதி கடமைகளை செய்த அவரின் பையன் அதை கடைபிடித்து தன்னுடைய சந்ததிக்கு கொண்டு செல்லும் சங்கிலியே வாரிசு. பெண் குழந்தைகளுக்கு இந்த சங்கிலி திருமணமானதும் உடைகிறது, அதாவது பழக்கவழக்கம் கலாச்சாரம் போன்றவை ஒன்றாக இருந்தாலும் பல சமயங்களில் தெய்வம் வேறுபடும். இன்னும் பல காரணங்களும் உண்டு.

குழந்தை அமைப்பு உள்ளதா என்பதை ஒரு ஜாதகத்தை மட்டும் வைத்து உறுதி செய்வது தவறு, அதிலும் குறிப்பாக ஆண் குழந்தை உள்ளதா என்பதை உறுதி செய்வது. கணவன் மனைவி இணைந்தால் தான் குழந்தை அதுபோல் இரு ஜாதகங்கள் இணையும் பொழுது தான் ஒரு புது ஜாதகம் உருவாகும். அதற்கேற்ப ஒரு குழந்தை பாக்கியம் உள்ளதா என்று பார்ப்பதற்கு கணவன் மற்றும் மனைவியின் ஜாதகங்களை இணைத்து பார்ப்பது மிக அவசியம் மற்றும் அதுதான் சரியான முறை. எல்லா விதிகளையும் விதிவிலக்குகளையும் அமைப்புகளையும் ஒரே கட்டுரையில் சொல்ல இயலாது என்பதை புரிந்து கொண்டு, ஒரு முக்கியமான அமைப்பை சொல்கிறேன். எனது நீண்ட ஆய்வின்படி குரு வக்கிரமானால் தனது காரகமான வாரிசு தடையை பெரும்பாலும் கொடுக்கிறார், அதாவது ஆண் குழந்தைக்கு பதிலாக பெண் குழந்தையை தருவார்.இன்னும் பல அமைப்புகள் வாரிசு தடைக்கு அடங்கியிருக்கிறது. அது பொதுவான அமைப்புகளும் மற்றும் உங்களின் ஆய்வு படியும் பொருத்திக் கொள்ளுங்கள். மேலே சொன்னது போல் இதை 2 ஜாதகம் வைத்து கணிக்க வேண்டும்.

குழந்தை பாக்கியத்திற்கு பொதுவாக 5ம் இடத்தை பார் என்பது பொது விதி,
திருமணம் ஒரு ஜாதகருக்கு முதல் திருமணமா? 2வது திருமணமா? என்ற கேள்வி எழுவது அவரின் நீடித்த தாம்பத்தியத்தை பொறுத்து இருக்கிறது என்றால்.. குழந்தைக்கும் அதே கேள்வி எழ வேண்டும். அதாவது முதல் குழந்தையா அல்லது இரண்டாவது குழந்தையா. ஆக முதல் குழந்தை 5ம் பாவகம் என்றால் இரண்டாம் குழந்தை 5 க்கு ஐந்தாகிய 9ம் பாவகம் ஆகும். ஒரு தம்பதியினருக்கு முதலில் ஒரு அபார்ஷன் அதாவது ஒரு சிசு தம்பதியினருக்கு உருவாகி அது கர்மா காரணத்தினால் கலைந்து விடுகிறது என்றாலும் சிசு சிசு தான், ஒரு உயிர் உயிர் தான், அதன் அடிப்படையில் முதல் குழந்தை ஜெனித்ததாகவும், போனதாகவும் அர்த்தம். அதனால் அடுத்த குழந்தைக்கு 9 ஆம் பாவகத்தை பார்ப்பது அவசியம். இது பலன் அறிவதற்கு மிகவும் தேவைப்படுகின்ற ஒன்றாகும் ஏனென்றால் இரண்டாவது குழந்தை ஜாதகத்தில் எந்த அதிபதியால் கொடுக்கப்படுகிறது, மற்றும் குழந்தை ஆணா? பெண்ணா? அதற்கேற்ற தசா புக்திகள் எப்பொழுது வருகிறது என்பதை கணிப்பதற்கு உதவக்கூடிய விஷயம், பெரும்பாலும் பலன்கள் தவறுவது இங்கேதான்!

தாமத திருமணமே மறைமுகமாக தாமத குழந்தை பாக்கியம் அல்லது குழந்தை தடையை தான் குறிக்கிறது, லக்னம் ராசிக்கு 3, 5ம் இடம் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது அதாவது இந்த இடங்களில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு/கேது, லக்ன அவயோக கிரகம் பாவத்தன்மையுடன் அமர்ந்திருப்பது, கால புருஷனின் ஏழாம் வீடு பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு இருப்பது, இவையினால் மேல் சொன்ன அமைப்புகள் உருவாகும்.
ஒரு ஜாதகம் போல் மற்றொரு ஜாதகம் இல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு, ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அமைப்புகள் ஒவ்வொரு மாதிரியாக மாறும் என்பதை புரிந்து கொள்வது மிக அவசியம், உதாரணத்திற்கு சுக்கிரன் மற்றும் குரு சுப கிரகங்கள் தான் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் இவர்கள் ஒருவருக்கொருவர் லக்ன அவயோக கிரகங்களாக வருவார்கள் இவர்கள் 3,5ஆம் இடத்தில் இருப்பது பெரும்பாலும் நன்மையை செய்யும் என்பதையும் புரிந்து கொண்டு ஜாதகங்களை கணிக்க வேண்டும்.

கோச்சாரத்தையும் குழந்தை பிறப்பையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், குழந்தை பிறப்புக்கு பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் அல்லது கணிக்க தேவையில்லை என்று நினைக்கும் ஒரு அமைப்பு கோச்சாரம்..

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

#bhavishyamaarg

Leave a Reply