My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

விழிப்புணர்வு Post- May-June Month 2023

ஏப்ரல் மாதம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டு இருந்தேன் (https://youtu.be/xuoZ853dGEU), ஏப்ரல் மற்றும் மே மாதம் எவ்வாறு இருந்தது என்று நீங்களே உணர முடியும், அதைப்போலவே வருகின்ற ஜூன் மாதமும்..
பயமுறுத்த வில்லை ஆனால் எச்சரிக்கை அவசியம்..

கோச்சார நிலைமை அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு மிக மோசமாக உள்ளது, அதாவது புதன் குரு ராகுவால் சம பாகையில் பிடிக்க இருக்கிறார் இதை சனியும் பார்க்க, இது குருவுக்கும் புதனுக்கும் கோச்சார அடிப்படையில் பாவத்துவம்.
குரு அல்லது புதன் லக்னமாக கொண்டிருக்கும் ஜாதகர்களும்,

குரு அல்லது புதன், 6, 8ம் அதிபதியாக கொண்டிருக்கும் ஜாதகர்களும்,
குரு/புதன் தசை, அல்லது குரு/புதன் புத்தி நடந்து கொண்டிருக்கும் ஜாதகர்களும்,
மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது, எந்த ஒரு மருத்துவ தேவைகளையும் உதாசீன படுத்த வேண்டாம், மிக அவசியம் இல்லாவிடில் கடன் வாங்க வேண்டாம்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அமைப்புகள் பொதுவாக எதிர்பார்க்கப்படலாம் அதனால் எச்சரிக்கை தேவை..
பொதுவாக பண பற்றாக்குறை,
தங்கம் நகை தொலைதல்,
பணத்தை இழத்தல்,
தெளிவற்ற சிந்தனைகள்,
ஷேர் மார்க்கெட்டில் பணம் இழத்தல்,
ஆன்லைன் ரம்மியில் பணம் இழத்தல்,
தலையில் அடிபடுதல்,
இது போல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அதனால் மிக கவனமாக இருத்தல் அவசியம். இது ஒரு எச்சரிக்கை பதிவு மட்டுமே. சுய ஜாதகத்தில் கிரகங்கள் வலுவாக இருக்கும் பட்சத்தில் இந்த பலன் குறையும்..

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

#bhavishyamaarg

Leave a Reply