காமத் திரிகோணம் என்பது 3,7,11 ஆகிய பாவகங்கள், இதை காமத் திரிகோணம் என்று சொல்வதன் உண்மை அர்த்தம் இந்த பாவகங்கள் மூலமாக வரும் பெண்/ஆண் மூலம் ஜாதகர் காமத்தை அனுபவிக்கவே, அதாவது 7ம் பாவகம் 1 தாரம், 11ம் பாவகம் 2ம் தாரம், 3ம் பாவகம் 3ம் தாரம்..
ஆனால், பெருவாரியாக ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு காம உணர்வுகளை தூண்டுவது 3,7,12ம் பாவகம் ஆகும். 3ம் பாவகம் வீரியஸ்தானம், 7ம் பாவகம் உடலுறவு ஸ்தானம் மற்றும் 12 ஆம் பாவகம் வீரியத்தையும் உடலுறவையும் அனுபவிக்கும் படுக்கை, இடம், காலம் போன்றவை. இந்த மூன்று பாவகங்களும் சுபத்துவமாக இருக்கும் பொழுது ஜாதகர் குறையற்ற காமத்தை அனுபவிக்க முடியும் (நீடித்த தாம்பத்தியம் என்பதே திருமணம் ஆகும்). எந்த பாவகம் பாவத்துவமாக இருக்கிறதோ அந்த பாவகம் சம்பந்தமான பிரச்சனைகள் அல்லது உபாதைகள் நிச்சயம் அந்த ஜாதகருக்கு இருக்கும். 3,7 சுபத்துவமாகி 12ஆம் பாவகம் நசிந்து போயிருந்தால் காமம் இருந்தும் அதற்குண்டான தகுதி இருந்தும் அனுபவிக்க இடம் பொருள் இயலாமல் அல்லது அமைப்புகள் உருவாகாமல் போகும்.
ஆனால் 7ம் பாவம் மிக முக்கியமான பாவகம் ஆகும், 7ம் பாவகம் களத்திர பாவகம் என்று குறிப்பிடுவார்கள் அதாவது கள உதிரம்!!. இதில் ஏழாம் பாவகம் பாவத்துவமாகும் பொழுது எத்தகைய அமைப்புகள் ஜாதகருக்கு இருக்கும் என்பதை 3, 12ம் பாவகங்கள் சுட்டி காமிக்கும்.
ஏழாம் பாவகம் பாவத்துவம் என்பது ஏகப்பட்ட வழிகளில் உண்டாகும் உதாரணத்திற்கு சனி செவ்வாயின் பார்வை பாவகத்திற்கு இருப்பது, தனியே ராகு அல்லது சனி அல்லது, செவ்வாய் அமர்வது, சனி செவ்வாய் இருவரும் சேர்ந்து அமர்வது, சனி செவ்வாய் ராகு மூவரும் சேர்ந்து அமர்வது, ராகு அமர்ந்திருக்க சனி செவ்வாயின் பார்வை ராகு கிடைப்பது. இதுபோல் இன்னும் ஏகப்பட்ட காம்பினேஷன்ஸ் இருக்கிறது. ஒவ்வொரு அமைப்புகளுக்கும் ஒவ்வொரு பலன்.
7ம் பாவகம் முற்றிலும் பாவத்துவம் ஆகும் பொழுது, ஜாதகத்தில் உள்ள காம்பினேஷன்களை பொறுத்து, சுக்கிரனின் நிலைமையை பொருத்து, அதீத்த லவ்கீகமும் உண்டாகும் அல்லது அதித்த ஆன்மீகமும் உண்டாகும்.. இதில் லவ்கீகமா ஆன்மீகமா என்பதை கண்டறிவதே ஜோதிடம் ஆகும்.
மிக நுணுக்கமான ஒரு உதாரணம் 3,12ம் பாவகம் சுபத்துவமாகி, சுக்கிரனும் 7ம் பாவகாதிபதியும் பலவீனமாக இல்லாமல் இருந்து, 7ம் பாவகத்தோடு சனி செவ்வாய் தொடர்பு கொள்ளும் பொழுது, உடலுறவில் அதிக நாட்டமும் இருக்கும் ஈடுபாடும் இருக்கும் ஆனால் தினசரி கிடைக்காது அல்லது தேவையும் இருக்காது அதாவது தேவைப்பட்டு கிடைக்கும் பொழுது அதில் நாட்டமும் ஈடுபாடும் அதிகம் இருக்கும்!!
அதேபோல், 3,12ம் பாவகம் சுபத்துவமாகி, சுக்கிரன் பலவீனமாக இருந்து, 7ம் பாவகாதிபதியும் தன் வீட்டுக்கு மறைந்திருந்து, 7ம் பாவகத்தோடு சனி செவ்வாய் தொடர்பு கொள்ளும் பொழுது, தாம்பத்தியம் அல்லது உடலுறவில் ஆர்வம் இருந்தும் மறுக்கப்படும்..
இதில் சனி செவ்வாயின் இணைவு, அல்லது பார்வை எத்தகைய டிகிரியில் உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்..
மற்றொரு உதாரணம் பெருவாரியாக 7ம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருக்க களத்திர தோஷம் என்று கூறுவார்கள் ஆனால் செவ்வாய் மட்டும் அமர்ந்து சுபத்துவமாகி, 3,12ம் பாவகங்கள் சுபத்துவமாக இருக்கும் பொழுது, சுக்கிரன் நீச்சம் ஆனாலும் திருமணத்திற்கு பிறகு துணை மூலம் தேவைக்கு காமம் கிடைத்தே தீரும், இங்கு எவ்வளவு தேவை என்பதின் அளவுகோல், இணையும் ஜாதகத்தை பொறுத்தே இருக்கும்!!
இதே போல் தான் 3ம் பாவகம் செயலிழந்து 7, 12 ஆம் பாவகங்கள் சுபத்துவமாக இருக்கும் பொழுது அதன் அமைப்புகள் அல்லது பலன் வேறு விதமாக இருக்கும்.
ஜோதிட நுணுக்கமே எந்த கிரகம்? எந்த செயலை செய்யும்? எங்கு இருந்தால்? மற்றும் எப்படி இருந்தால்? என்பதே.., அதைப் புரிந்து கொண்டு துணை பாவகங்களை இணைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் பலன் எடுக்க முடியும்…
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
#bhavishyamaarg

Leave a Reply