ஜோதிடம் என்பது விஞ்ஞானம், இதை எப்படிப்பட்ட முறையில் அணுகுகிறோம் என்பதே ஜோதிடருடைய மேதமை. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் தனித்து பங்கமின்றி இருக்கும் பொழுது ஜோதிடத்தை கணித முறையில் அல்லது விஞ்ஞான முறையில் அணுகுவார். இந்த பங்கமின்றி என்ற வார்த்தையை கூட சிலரால் புரிந்து கொள்வது கடினமே, புதன் பங்கமின்றி என்றால் புதனுடைய தனித்தன்மை கெடாமல் இருப்பதுதான் இங்கே பொருள். அதாவது புதன் ஒரு பகுத்தறிவாளர், விஞ்ஞானி, எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய தனித்துவமான அணுகுமுறையால் வேறுபடுத்தி பார்க்கும் தன்மை உடையவர். இப்படிப்பட்ட புதன் சனியுடன் சேர்வது அல்லது சனியால் பார்க்கப்படுவது செவ்வாயுடன் சேர்வது அல்லது செவ்வாயால் பார்க்கப்படுவது சூரியன் உடன் இருப்பதோ பங்கப்பட்ட புதன் என்ற அர்த்தம் கிடையாது..
அதாவது சனியுடன் சேர்ந்த புதன் பிடிவாதத்துடன் கூடிய அல்லது சந்தேகத்துடன் கூடிய பகுத்தறிவு உள்ளவர், செவ்வாயுடன் சேர்ந்த புதன் கோபத்துடன் கூடிய அல்லது அவசரத்துடன் கூடிய பகுத்தறிவு உள்ளவர், சூரியனுடன் சேர்ந்த புதன் தன்னம்பிக்கையுடன் கூடிய பகுத்தறிவு உடையவர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆக புதன் உண்மையில் பங்கப்பட வேண்டும் என்றால் அவரின் தன்மைக்கு எதிர்த்தன்மையுள்ள குருவுடன் சேர்ந்தால் மட்டுமே பங்கப்படுவதாக அர்த்தம். அதாவது, “புதன் விஞ்ஞானி என்றால் குரு மெய்ஞானி, ஆன்மீகவாதி அல்லது தெய்வீகவாதி”. புதன் குரு நேருக்கு நேர் தொடர்பு கொண்டு அல்லது இணைந்திருந்தோ இருக்கும் ஜாதகங்கள் விஞ்ஞான முறையில் அணுகவதை விட மெய்ஞான முறையில் அணுகுவார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு ஜோதிட ஆர்வலர்க்கு குரு புதன் பார்வை சேர்க்கை இருக்குமானால் அவர் வாக்குப்பணிதம் உண்டா அதாவது நாம் சொல்லும் பலன் பலிக்குமா என்ற கேள்வியுடனே இருப்பார்!!
மேலே குறிப்பிட்ட புதன் குருவை புரிந்து கொண்ட பிறகு அடுத்த சேர்க்கையான புதன் குருவுடன் சனி/ராகு/கேது மூவரும் தொடர்பு கொள்ளும் பொழுது பெருவாரியாக மூடநம்பிக்கையும் சற்று உள்ளே வரும்..
சரி இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். பண்டைய காலத்தில், ஒவ்வொரு வீட்டின் வாச நிலப் படியிலும் நான்கு மிளகாய் ஒரு எலுமிச்சம் பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது வழக்கம். இந்த பழக்கவழக்கத்தை பங்கமற்ற புதன் பார்ப்பதற்கும், குருவுடன் சேர்ந்த புதன் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கீழே கொடுக்கிறேன்.
பங்கமற்ற புதன்:
அந்த காலத்தில் மின்சாரம் இல்லாமல் இருந்தது, அப்பொழுது மாலை நேரத்தில் வீட்டிற்கு வெளியே மற்றும் உள்ளே வெறும் அரிக்கண் விளக்கை வைத்துக்கொண்டு இருந்த காலம். வணிகத்திற்காகவோ அல்லது மற்ற விஷயங்களுக்காகவோ ஒருவர் காலை நேரத்தில் புறப்பட்டு சூரியன் மறைந்த பிறகு வீடு திரும்பும் நிலை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் தெருவில் நடக்கும் பொழுது ஏதேனும் பூச்சியோ பாம்போ கடித்துவிட்டால், உடனே அவர் எங்கு இருக்கிறாரோ அந்த வீட்டின் வாயிலில் இருக்கும் பச்சை மிளகாயையும் எலுமிச்சம் பழத்தையும் எடுத்து, அதில் மிளகாய் கடித்தவுடன் மிளகாயின் காரம் தெரிந்தால் கடித்தது விஷப்பாம்பு இல்லை என்றும் அப்படி காரம் தெரியவில்லை என்றால் கடித்தது விஷப்பாம்பு என்பதை புரிந்துகொண்டு மேலே நடந்து செல்ல எனர்ஜியை கொடுக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை வாயில் பிழிந்து கொண்டு அந்த ஊரில் இருக்கும் மருத்துவரை அணுகுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது..
பங்கப்பட்ட புதன்:
பொதுவாகவே எலுமிச்சம் பழம் நெகட்டிவ் எனர்ஜி என்று சொல்லப்படும் மனிதனுக்கு தேவையில்லாத அத்தனையையும் உரியும் தன்மை உடையது, அதனால் வீட்டிற்கு வெளியே எலுமிச்சம் பழத்தை தொங்க விட்டால் அந்த எலுமிச்சம் பழம் எல்லா நெகட்டிவ் எனர்ஜிகளையும் தன்னூல் இழுத்துக் கொண்டு காய்ந்து போய்விடும், அதனால் நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி மட்டுமே இருக்கும். மிளகாய் காரத்திற்கு பூச்சிகள் வராது. பொதுவாகவே எலுமிச்சம் பழத்தையும் மற்றும் காய்ந்த மிளகாயை திருஷ்டி எடுப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள், அதனால்தான் வீட்டிற்கு வெளியே அல்லது வாகனத்திலோ இதை தொங்க விட்டால் திருஷ்டி வராது என்பதே!!
சரி என் பச்சை மிளகாயை வைத்தார்கள் என்று கேட்டால் சரியான பதில் கூறத் இயலாது!! முன்னோர்கள் நமக்கு வகுத்த விதிகளை ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள், அல்லது காரணத்தை வேறு ஒருவரிடம் தெரிந்து கொண்டு நம்மிடம் வந்து கூறுவார்கள்..
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
#bhavishyamaarg

Leave a Reply