விதி கெட்டால் மதியைப் பார், மதிகெட்டால் கதியை பார் என்பது ஜோதிடத்தை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இங்கு விதி என்பது லக்னமாகவும் மதி என்பதை சந்திரன் ஆகவும் அதாவது ராசியாகவும், கதி என்பது சூரியனாகவும் சொல்லப்படுகிறது.
எப்பொழுது விதிகெட்டால் மதியை பார்க்க வேண்டும்? எப்பொழுது மதி கேட்டால் கதியை பார்க்க வேண்டும்? என்பது ஜோதிடத்தில் ஒரு புரியாத புதிர். ஜோதிடர்கள் அவர்களுடைய புதனின் வலுவுக்கு ஏற்ப மற்றும் அனுபவத்திற்கேற்ப ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்வார்கள்.
ஒரு பாவகம் முற்றிலும் கிட வேண்டும் எனில் பாவகம், பாவகாதிபதி மற்றும் காரகன் மூன்றும் சேர்ந்து கெட வேண்டும். அப்பொழுதுதான் அந்த பாவகம் வழியே ஜாதகருக்கு எதுவுமே கிடைக்காது.
உதாரணத்திற்கு 5ம் பாவகம் கெட்டு, 5ம் பாவகாதிபதியும் கெட்டு, காரகனாகிய குருவும் கெட்டுவிட்டால் ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்பது பொருள்.(இது ஒரு உதாரணமே, புத்திர பாக்கியத்திற்கு சேரும் ஜாதகத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)
அதுபோல்,
லக்ன பாவகத்திற்கு: லக்னம், லக்னாதிபதி மற்றும் காரகன் சூரியன்!
லக்னம் மற்றும் லக்னாதிபதி ஒருசேர பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு அல்லது அமாவாசையை நெருங்கும் சந்திரன் இருப்பு, தொடர்பை பெற்றிருக்கும் பொழுது,
லக்னத்தை பாவ கிரகங்கள் தொடர்பு கொண்டு, லக்னாதிபதி லக்னத்திற்கு மறைந்திருக்கும் அமைப்பு,
லக்னத்தில் சனி அமர்ந்து லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்திருக்க,
லக்னத்தில் ராகு அமர்ந்து லக்னாதிபதி லக்னத்திற்கு மறைந்து சனி செவ்வாய் தொடர்பு பெற்றிருக்கும் பொழுது,
லக்னத்தில் சனியமர்ந்து லக்னாதிபதி லக்ன அவயோக கிரகத்துடன் (அதுவும் பாவ கிரகங்கள் மட்டுமே) சேர்ந்திருப்பது.
( ஜோதிடத்தில் விதி விதிவிலக்கு என்று சொல்லிக் கொண்டே போகலாம், உதாரணத்திற்கு மகர லக்னத்திற்கு 8ம் அதிபதியாகிய சூரியன் கடும் அவயோகர் என்றாலும் லக்ன காரகன் அவர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)
இன்னும் பல காம்பினேஷன்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(விதிவிலக்கு, குரு சுக்கிர அல்லது ஒளிபொருந்திய சந்திரனின் தொடர்பு லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு)
இதுபோல் அமைப்பில் லக்னம் வலுவிழந்ததாக அர்த்தம் இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால் லக்னம் இருள் அடைந்து விட்டது என்று பொருள். இது போன்ற ஜாதகத்தை மதி என்று சொல்லப்படும் சந்திரன் வழி நடத்தும் என்பது ஜோதிட சாஸ்திரம்.
இதே அமைப்புதான் சந்திரனுக்கும்..
அதாவது விதி என்று சொல்லப்படும் லக்னம் கெட்டால் மதி என்று சொல்லப்படும் சந்திரன் ஆவது நன்றாக இருக்க வேண்டும், மதியும் கெட்டால், காரகனாகிய சூரியன் ஆவது நன்றாக இருக்க வேண்டும்.
பூமிக்கு மற்றும் நம் பிரபஞ்சத்திற்கு அல்லது அத்தனை கிரகங்களும் இயல்பாக செயல்பட மூல காரணமாய் இருக்கும் சூரியனுக்கு பெரும் பங்கு உள்ளது, லக்ன காரகனும் சூரியன் தான், தொழிலுக்கு காரகனும் சூரியன் தான், முயற்சி மற்றும் தன்னம்பிக்கைக்கு காரகனும் சூரியன் தான்..
அதனால் எது கேட்டாலும் சூரியன் கெடாமல் இருப்பது அவசியம். சூரியன் கெடாமல் இருக்கும் பொழுது தனக்கும் தன் குடும்பத்திற்கு மட்டும் தேவைப்படும் தனத்தை ஜாதகர் தனது முயற்சியால், தன்னம்பிக்கையால், சூரியன் லக்னக்காரகன் என்ற உடையை அணிந்து கொண்டு கொடுப்பார்.
இதுதான் விதி கேட்டால் மதியைப் பார் மதிகட்டால் கதியை பார் என்பார்..
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
#bhavishyamaarg

Leave a Reply