ஜோதிடமே முரண்களுக்குள் ஒளிந்திருக்கும் சமன்பாடுகள். அதாவது சுப கிரகங்களுக்குள் ஒளிந்திருக்கும் தீய செயல்பாடுகள் மற்றும் பாவர்களுக்குள் ஒளிந்திருக்கும் நல்ல செயல்பாடுகள்.
இது ஒரு வரியில் ஜோதிடத்தை புரிந்து கொள்ளும் எண்ணம் உள்ளவர்களுக்கு புலப்படாது அல்லது புரிந்து கொள்ள முடியாது. நான் பதிவிடும் காணொளிகளில் கூறும் மறைமுக ஒற்றைக் கருத்து என்னவென்றால் 1 அல்லது 2 கிரகங்களை வைத்து பலன் அறிய முடியாது!!
“ஒரு ஜாதகத்திற்கு 1 பலன் கூற வேண்டும் என்றால் 12 பாவகமும் அதன் அதிபதிகளையும் மற்றும் அமர்ந்திருக்கும் கிரகத்தின் செயல்பாடுகளையும் புரிந்து கொண்ட பிறகு தான் 1 கிரகத்தின் பலனை கூற இயலும்”
இந்த நிலையில்,
குரு பகவான் எனும் மகா சுபர், குரு பார்த்தால் கோடி நன்மை,குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி,குரு அமர்ந்த இடம் அற்புதம்.
என்பதெல்லாம் ஒரு சில லக்னங்களுக்கு மட்டுமே கிடைக்கும் பொக்கிஷங்கள் அல்லது அதிர்ஷ்டங்கள். ஏனென்றால் இரு ஆதிபத்தியம் கொண்ட குரு ஒரு ஆதிபத்தியம் எல்லா லக்னங்களுக்கும் சற்று சாதகமற்ற பலனை கொடுக்கும் நிலையிலேயே இருக்கும்.
உதாரணத்திற்கு, குருவின் நட்பு கிரகமான சூரியன் மற்றும் சந்திரன் லக்னங்களாகிய சிம்மத்திற்கும் கடகத்திற்கும் ஒருவருக்கு 8ம் அதிபதியாகவும் மற்றொருவருக்கு 6ம் அதிபதியாகவும் வருவார், ஆனால் இதே குருதான் இந்த லக்னங்களுக்கு அனைத்து அதிர்ஷ்டங்களை தரும் சிறு கோணாதிபதியாகவும் மற்றும் அனைத்து பாக்கியங்களைத் தரும் பெருங்கோனாதிபதியாகவும் வருவார்.
குரு தசையில்,
குரு அமர்ந்திருக்கும் இடம் என்ன?குரு யாருடன் இணைந்து இருக்கிறார்?
யாரால் பார்க்கப்படுகிறார்?
குரு பார்வை யார் மீது விழுகிறது?
என்பதை பொறுத்து தான் அவர் 6,8 அதிபதியை போல் செயல்படுவாரா அல்லது கோனாதிபதியைப் போல் செயல்படுவாரா என்பது. ஒருவேளை அவர் 5 மற்றும் 9ம் இடத்தோடு தொடர்பில் இருந்தாலும் அல்லது அந்த இடங்களில் அமர்ந்திருந்தாலும். 6 அல்லது 8ம் வீட்டு பலனை அவரை தவிர வேறு யாராலும் தர முடியாது என்பதையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும். (6,8 வீடு யார் தொடர்பிலும் அல்லது வேறு எந்த கிரகங்களும் அமராத பொழுது).
உதாரணத்திற்கு சிம்ம லக்னத்திற்கு குரு 8க்கு 6ல் மறைந்து லக்னத்தில் அமர்ந்தால் யோகம் என்றாலும் அந்த குருவை கும்பம் எனும் மூலத்திரிகோல் வீட்டிலிருந்து சனி வலுவாக பார்க்கும் பொழுது குருதசை தசையில் பெரும்பாலும் குரு 8ம் அதிபதியாக பலன் தர கடமைப்பட்டவர், ஏனென்றால் 6ம் அதிபதியின் தொடர்பை பெற்ற 8ம் அதிபதி என்ற விதியின்படிi, இந்த நிலையில் குரு ராகுவால் பீடிக்கப்பட்டிருந்தால் கடுமையின் தாக்கம் அதிகமாகும் உடலில் கட்டி போன்ற அமைப்புகளை குரு தர தயங்கவே மாட்டார்..
சிம்ம லக்னத்திற்கு உச்சம் பெற்று 8ம் இடத்தோடு தொடர்பு கொண்டு கேள யோகத்தில் இருக்கும் குரு ஒரு நல்ல பலனையும் தராத ஜாதகங்களையும் பார்த்திருக்கிறேன்!! அதே சிம்ம லக்கத்திற்கு 9ல் அமர்ந்து, சனி செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து 5ம் வீட்டோடு தொடர்பு கொண்டு, குரு தசையில் கடும் உடல் மற்றும் உயிர் பிரச்சினைகளை கொடுத்த ஜாதகங்களையும் பார்த்திருக்கிறேன்!!
ஆக நட்பு கிரகங்களின் லக்னங்களுக்கே இவ்வாறு என்றால் தனக்கு முற்றிலும் எதிர் தன்மை உடைய சுக்கிரன் மற்றும் சுக்கிரனின் நண்பர்களின் லக்னங்களுக்கு கடும் தீய பலனை தர தயங்கவே மாட்டார் என்பதையும் நாம் உணர வேண்டும். உதாரணத்திற்கு, ரிஷப லக்னத்திற்கு குரு, ராஜ யோகாதிபதியான சனியுடன் சேர்ந்து ராகுவால் பீடித்திருக்கும் பொழுது,
குரு தசையில் கடும் தீய பலன்களை தருவார், கூடுதலாக சுக்கிரனின் தொடர்பையும் பெற்றுவிட்டால்.. ராகு தசை பேயாட்டம் ஆடும்!! குரு தசையில் ரோட்டுக்கும் அழைத்து வர குரு தயங்க மாட்டார்.. மற்ற பாவகங்களில் அமைப்பை பொருத்து!!
இவை ஒரு சிறிய உதாரணங்கள் தான். நீங்கள் ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்களுக்கு புரியும்….
மேஷம் மற்றும் விருச்சிக லக்னத்திற்கு குரு பகவான் என்பவர் ஒரு காப்பான் போல் செயல்படுவதை உணர்ந்திருக்கிறேன் அதுவும் குரு யார் தொடர்புமின்றி இருக்கும்பொழுது,
ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு குரு நல்லவர்களை தரும்பொழுது அதில் ஒரு மறைமுக நஷ்டத்தையும் அல்லது கஷ்டத்தையும் சேர்த்து தருகிறார் என்பதையும்,
மிதுனம் மற்றும் கன்னியா லக்னங்களுக்கு குரு கேந்திர பாதக மாரகாதிபதியாக இருந்தாலும் சில சமயங்களில் நல்லதை தருவதையும்,
மீனம் மற்றும் தனுசு லக்னங்களுக்கு லக்னாதிபதியாகவே இருந்தாலும் ஏதோ சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மட்டும் தருவதையும்,
கும்பம் மற்றும் மகர லக்னங்களுக்கு லக்னம் லக்னாதிபதி நன்றாக இருக்கும் பொழுது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தருவதையும்,உணர்ந்திருக்கிறேன்…
ஆகையால், குரு எப்பொழுது மகா சுபர்?
எப்பொழுது குரு பார்க்க கோடி நன்மை என்பது எல்லாம் குருவுடன் இணைந்த குருவை பார்த்த குரு இருக்கும் இடத்தை பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு பலன்கள்!!!
குரு பார்வையை பற்றி எனது திருக் பல சூட்சுமங்கள் என்னும் காணொளியில் மேலோட்டமாக சொல்லி இருக்கிறேன்!!
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
#bhavishyaMaarg

Leave a Reply