இந்த உலகில் நாம் ஜீவிக்க காரணம் நம் தாய் தந்தை, பின்னர் நமக்கு எல்லா இடங்களிலும் வழிகாட்டி கற்றுக் கொடுப்பவர் குரு, இந்த மூவருக்கு அடுத்து நாம் பிடித்துக் கொள்ள வேண்டியது தெய்வம் (அதாவது பஞ்சபூதங்கள்).
ஜோதிடப்படி தாய் சந்திரன், தந்தை சூரியன், தெய்வம் பஞ்ச பூதங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சனி. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஜோதிடப்படி மற்ற 7 கிரகங்களை விட வலிமை வாய்ந்தது ( இதைப்பற்றி என் குருநாதர் திரு. ஆதித்ய குருஜி அவர்கள் அவருடைய சாயா கிரகங்களின் சூட்சும வலு என்னும் கட்டுரையில் விவரித்துள்ளார்) ஆக இந்த கிரகங்களை மூன்று பிரிவினையாக பிரிக்கலாம் ஒளி கிரகங்கள், பஞ்சபூதக் கிரகங்கள் மற்றும் நிழல் கிரகங்கள், ஒளிக் கிரகங்கள் என்றுமே மறையக் கூடாது அல்லது கெடக் கூடாது
ஒருவருடைய ஜாதகத்தில் தாய் தந்தை அதாவது ஒளிக் கிரகங்களான சந்திரன் மற்றும் சூரியன் கெட்டுப்போக கூடாது, ஒருவேளை கெட்டிருந்தால் குரு ஜாதகரை வழி நடத்துவது அத்தியாவசியம், ஒருவேளை குருவும் மறைந்து விட்டாள் மற்ற பஞ்சபூதக் கிரகங்களான சுக்கிரன் செவ்வாய் புதன் மற்றும் சனி வழி நடத்தியே ஆகவேண்டும் ( ஜாதகத்தில் நல்ல இடங்களில் இருக்க வேண்டும்).
மனித ஆயுள் சுமார் 60 ஆண்டுகள் என்று எடுத்துக்கொண்டால் நாம் இந்த உலகத்தை புரிந்து கொள்ள, தாய் தந்தையின் ஆதரவு குறைந்த பக்ஷம் 20 வயது வரை தேவை (அதாவது நாம் படித்து முடித்து வேலைக்குச் சேரும்வரை) அதன்பின் பஞ்ச பூதங்களின் அனுக்கிரகம் மீதமுள்ள 40 ஆண்டுகள் தேவை…இதுவே மாதா, பிதா மற்றும் குருவை தெய்வத்திற்கு முன்னிலையில் வைப்பதற்கான ஜோதிடப்படி என்னுடைய புரிதல்.
இதுவே மனித உறவுகளுக்கும் கிரகங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம்.

Leave a Reply