My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

குருபகவான் கெடுவது யாரால்?

 

ஜோதிடத்தில் குரு பகவானை ஒரு மாபெரும் சுபர் என்பார்கள் குரு பார்க்க கோடி நன்மை என்று ஒரு வசனமும் உள்ளது ஆனால் இந்த குரு பகவான் சில கிரகங்களின் கலப்பினால், பார்வையினால் கெடு பலனை அடைவார். எவ்வாறு அடைவார் என்பதை நாம் கீழே பார்க்கலாம் பொதுவாக குருபகவான் சுபர் என்றாலும் எந்த லக்னத்திற்கு எந்த ஆதி பத்தியத்திற்கு அவர் சுபர் என்பதை அறிவதில்தான் குரு பகவானின் பலன் உள்ளது, உதாரணத்திற்கு குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு அதாவது மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், மீனம் மற்றும் தனுசு இந்த ஆறு லக்னங்களுக்கு குருபகவான் நன்மையே செய்வார். மற்ற லக்னங்களுக்கு அவருக்கு கெடுபலனை செய்வாரா என்று கேட்டால் பொதுவாக இல்லை என்றுதான் அர்த்தம். குருபகவான் எத்தகைய நிலையில் உள்ளார் என்பதை கருத்தில் எடுத்து தான் பலனை கணக்கிட வேண்டும்.

 

உதாரணத்திற்கு ரிஷப லக்னத்திற்கு குரு 8-க்குடையவர் ஆகிறார் மற்றும் துலாம் லக்னத்திற்கு குரு 6-க்குடையவர் ஆகிறார் இந்த இரு லக்னங்களுக்கும் குரு பகவான் பெரிதும் நன்மையை செய்வது இல்லை ஏனென்றால் இவர் இந்த லக்னத்திற்கு அவயோகி ஆகிறார்

 

காட்டப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் துலாம் லக்னம் குருபகவான் 6ம் வீட்டிலேயே அதாவது மீனராசியில் செவ்வாயுடன் 1’ டிகிரி இணைவில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். லக்ன யோகாதிபதி சனி மகரத்தில் இருந்து 6-ஆம் இடத்தைப் தன்னுடைய 3-ஆம் பார்வையால் பார்க்கிறார் மற்றும் லக்னாதிபதி சுக்கிரன் 7ம்இடத்தில் இந்த நிலையில் குரு செவ்வாயை சுபத்துவ படுத்தி தான் அங்கே கெட்டுப் போகிறார், இங்கே குரு பகவான் தன்னுடைய காரகத்துவத்தை இழந்துவிட்டார் என்று எடுத்துக் கொண்டால் பலன் சரியாக வராது இந்த இணைவில் படி ஆறாமிடம் பாவம் அடைகிறது யோகாதிபதி சனியின் பார்வை இருந்தாலும் சனியின் சுபத்துவம் கணக்கில் கொள்ள வேண்டும். சனி லக்னாதிபதி ஆகவே இருந்தாலும் சனியின் பார்வை சர்வ நாசம் என்ற விதியின்படி சனி மூன்றாம் பார்வை மூலம் லக்னத்தின் 6-ஆம் வீட்டைக் கெடுக்கிறார், குரு மற்றும் செவ்வாய் இருவரும் சனியின் பார்வை பெறுகிறார்கள். இந்நிலையில் சுப கிரகங்கள் இருக்கும் வீட்டை வளர்க்கும் என்பதின் விதிப்படி மற்றும் குரு 6-ஆம் அதிபதி ஆகி 6-ஆம் வீட்டிலேயே பாவத்துவம் அடைந்துவிட்டார் என்பதால் குரு ஆறாம் வீட்டின் தீய ஆதிபத்தியங்கள் ஆன கடன் நோய் எதிரி போன்றவையே தன்னுடைய காரகத்துவங்கள் வழியாக தருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

 

இணைவும் பார்வையும்

 

  1. குருவுடன் 8’ டிகிரிக்குள் இணைந்து செவ்வாய் சுபத்துவம் அடைவார் ஆனால் குரு அங்கே பங்கம் அடைவார் குருவும் செவ்வாயும் லக்னத்திற்கு யார் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. செவ்வாய் தனித்திருந்து, செவ்வாயின் 4ம் பார்வை மற்றும் ஏழாம் பார்வை குருவை பங்கப் படுத்தும்,  இதில் 4ம் பார்வை மற்றும் 8-ஆம் பார்வை செவ்வாய் சுபத்துவம் அடையாமல் (குருவின் பார்வை பெறாமல்) குருவை பங்க படுத்தும்,  7ம் பார்வை குருவைக்  கெடுத்து தான் சுபத்துவம் அடைவார் 
  3. குருவுடன் 8’ டிகிரிக்குள்  இணையும் சனி சுபத்துவம் அடைவார், இங்கே குரு பங்கம் அடைவார்
  4. சனி தனித்திருந்து,  சனியன் 3ம் பார்வை மற்றும் 10ம் பார்வை குருவை பங்க படுத்தும் (குருவின் பார்வை பெறாமல்)  தான் சுபத்துவம் அடையாமல். சனியின் 7ம் பார்வை குருவை கெடுத்து தான் சுபத்துவம் அடைவார்.
  5. ராகுவுடன் 8’ டிகிரிக்குள் இணையும் குரு தனது சுய தன்மையை இழப்பார் அவர் எந்த ஆதிபத்தியத்திற்கு அதிபதியோ  அந்த ஆதிபத்தியத்தை அவர் தரும் தகுதியை இழப்பார். ராகுவே குருவின் காரகத்துவம்களையும் ஆதிபத்திரத்தையும் தரும் தகுதி பெறுவார்.  ராகுவுடன் 8’ டிகிரிக்குள் இணையும் குருவிற்கு பார்வை திறன் குறைவு 
  6. சூரியனால் அஸ்தமனம் ஆன குரு தனது காரகத்துவங்களை தரும் சக்தியை இழப்பார் அந்த குருவிற்கு பார்வையும் அங்கே இருக்காது, இங்கு சூரியனே குருவின் காரகத்துவங்களை ஆதிபத்திய த்தையும் எடுத்து செய்யும் தகுதியை பெறுகிறார்

 

 

 
 
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2433481302961543 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

One response to “குருபகவான் கெடுவது யாரால்?”

  1. Senthil Avatar
    Senthil

    குரு நீச்சம் அடைந்த ஜாதகர்கள் மற்றும் குரு வக்ரம் பெற்ற ஜாதகர்கள் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் sir! How

    Like

Leave a reply to Senthil Cancel reply