My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம்: 1 ஆம் பாவகம்

முன்னுரை

ஜோதிடத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒரு முக்கியமான விதி என்னவென்றால்  பாவகம்/ ஆதிபத்தியம் எப்போது செயல்படும் காரகத்துவம் எப்போது செயல்படும்?

பாவகம்/ஆதிபத்தியம்  என்பது ஒரு கிரகம் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டின் சுப மற்றும் அசுப தன்மைகள் இது கிரகத்தின் தசா காலத்திலோ அல்லது புக்தி காலத்திலோ செயல்படுவது 

கிரக காரகத்துவம் என்பது அந்தக் கிரகத்தின் தன்மைகள் அதாவது சுப மற்றும் அசுப தன்மைகள்/குணங்கள், இது அந்த ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும்  பிரதிபலிக்க கூடியதாகும்.

constellation, aries, star sign-3596308.jpg

1 ஆம் பாவகம் அல்லது லக்னம்

இந்த ஒன்றாம் பாவகம் அல்லது லக்னம் எனப்படுவது ஜாதகரை அதாவது உங்களை குறிக்கக் கூடியது. ஒன்றாம் பாவகத்தின் எல்லா சுப மற்றும் அசுப குணங்கள்/தன்மைகள் நீங்கள் பிரதிபலிக்கிறார்கள். ஒருவர் எந்தெந்த லக்னத்தில் பிறந்திருந்தால் என்ன குணங்கள் இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.கீழே கொடுக்கப்பட்டுள்ளது பொதுவான தன்மைகள் ஏனென்றால் ஒருவர் குணத்தை  கணக்கிடுவது லக்னத்தை மட்டும் வைத்து அல்ல அந்த லக்னத்தோடு எந்தெந்த கிரகங்கள் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை வைத்தும் தான்.

ஒன்றாம் பாவகத்தின் பொது ஆதிபத்திய  தன்மைகள், இது உங்களை குறிக்கும் பாவகம் அதாவது உங்கள்,

    • உடல்,  உடல் உறுப்புகள்,  உங்கள் சந்தோஷம்,  வருத்தம், ஆயுள்
    • தோற்றம்,  தலைமுடி , கனவுகள்
    • நீங்கள் நம்பத்தக்கவர் இல்லையா
    • நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள்,  உங்களின் திறமை எப்படி இருக்கும்
    • நீங்கள் எவ்வாறு  மற்றவர்களிடம் நடந்து கொள்வீர்கள்
    • உங்களின் எண்ணம் எப்படி இருக்கும்
    • எத்தகைய முடிவு எடுப்பீர்கள்
    • மற்றவர்கள் உங்களை எப்படி அணுகுவார் என்பதையும் உங்கள்  குணமே முடிவு செய்யும்

12 லக்னங்களின் பொது தன்மைகளை பார்க்கலாம்

மேஷம்:   சர ராசி/செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் வேகத்துடன் கூடிய வீரமும் அதிகம் காணப்படும், எத்தகைய காரியமானாலும் அதை சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுடன் பிறந்தது. செவ்வாயின் நிலையைப் பொருத்து உங்களது வேகம் கூட குறைய இருக்கும், செவ்வாய் சமத்துவமாக இருந்தால்  வேகத்துடன் கூடிய விவேகமும் இருக்கும்,   விவேகத்துடன் கூடிய வீரமும் இருக்கும்.  பெரும்பாலும் தேக ஆரோக்கியம் கொண்டவர்கள்.

ரிஷபம்:  ஸ்திர ராசி/ சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் பெரும்பாலும் அழகாக இருப்பீர்கள்,  உங்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்கள் கூடவே பிறந்தது. ஆடை அணிகலன் போன்றவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பெண்களை மதிப்பவர்கள்,  அம்மாவை எந்த காலகட்டத்தில் விட்டுக் கொடுக்காதவர்கள்.  வாழ்க்கை வாழ்வதற்கே அதை சுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.  எந்த விஷயமாக இருந்தாலும் அதை நீங்கள் பொறுமையாக தான் செய்வீர்கள்.

மிதுனம்:  உபய ராசி/ புதனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் இயற்கையிலேயே ஒரு ஞானம் மிகுந்தவர்கள்,  பெரும்பாலானோர் உங்களின் உள் உணர்வை வைத்து நீங்கள் எந்த முடிவையும் எடுப்பீர்கள். கணிதம் உங்களுக்கு கைவந்த கலை,  பெரும்பாலானோர் ஆடிட்டராக தான் இருப்பீர்கள்,  உங்களுக்கு ஜோதிடம்  இயற்கையிலேயே வரும்  அல்லது ஆர்வம் இருக்கும். தைரியம் சற்று குறைந்தே காணப்படும்.  சத்ரியன் ஆக இருப்பதைவிட  சாணக்கியன் ஆக  இரு என்று சொல்பவர்கள் பெரும்பாலும் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள்

கடகம்: சர ராசி/ சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் ஒரு பொறுமைசாலி.  எத்தகைய நிலையிலும் பொறுமை காபீர்கள், தாய்மைக்கு இலக்கணம், சிந்தித்து ஒரு விஷயம் செய்ய எண்ணி விட்டால்  அதை விரைவாக செய்வீர்கள்.

சிம்மம்:  ஸ்திர ராசி/ சூரியனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் எப்பொழுதுமே ஆளுமைத் திறன் கொண்டவர்கள்,  எந்த ஒரு காரியத்தையும்  இன்னொருத்தரை வைத்து செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்கும். தன்னம்பிக்கை உங்கள் கூடப்பிறந்த சொத்து.

கன்னி:  உபய ராசி/ புதனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் இயற்கையிலேயே ஒரு புத்திசாலி,  பெரும்பாலானோர் ஐடி துறையில் இருப்பீர்கள். கத்தியை தீட்டாதே உன் புத்தியை தீட்டு என்ற இலக்கணம் கொண்டவர்கள்.  உங்களுக்கு ஜோதிடம்  இயற்கையிலேயே வரும்  அல்லது ஆர்வம் இருக்கும். வீரமிக்க பேச்சு இருந்தால் உள்ளே பயம் இருக்கும்.

துலாம்:  சர ராசி/ சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள், காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்,  சென்டிமெண்ட் பார்க்காதவர்கள். வியாபாரம் செய்பவர்களாக இருப்பீர்கள்,  கணக்கு வழக்கு கரெக்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இதிலும் துலாபாரம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

விருச்சிகம்: ஸ்திர ராசி/செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் எந்த ஒரு விஷயமானாலும்  மனதில் தேக்கி வைக்கும் திறமை உங்களுக்கு உண்டு,  உங்களது வீரத்தில் விவேகம் எப்பொழுதுமே  இருக்கும்.  பெரும்பாலானோர் போலீஸ் அல்லது பாதுகாப்புப் பணியில் இருப்பீர்கள். கடின மனம் கொண்டவர்கள்,  உங்களின் கண்களில் கண்ணீர் அவ்வளவு சீக்கிரம் வராது. தேக ஆரோக்கியம் சீராக கொண்டவர்கள். உங்கள் எண்ணங்களை மனதிலேயே பூட்டி வைப்பவர் ஆக இருப்பீர்கள்.

தனுசு:  உபய ராசி/ குருவின் ஆதிக்கம் பெற்ற நீங்கள்  இயற்கையிலேயே கருணை மற்றும் பொதுநலம் கொண்டவர்கள்,  ஆன்மீகம் உங்கள்  கூடப் பிறந்தது. எதிலும் நம்பி ஏமாறுபவர்கள்,  எவரையும் வெகு சீக்கிரம் நம்பி விடுவீர்கள். உங்களுக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு கொடுத்து அதில் ஆனந்தம் காண்பீர்கள்.

மகரம்: சர ராசி/ சனியின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் உழைப்பில் தான் முன்னேற்றம் என்ற கொள்கையை கொண்டவர்கள். குள்ளமாக இருப்பீர்கள்,  எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்ய மாட்டீர்கள், தனக்குப் பின் தான் தான தர்மம் என்று இருப்பீர்கள். பூர்வ புண்ணியம் தெய்வ பக்தி என்று பேசுபவர்கள் நீங்கள் தான்.

கும்பம்: ஸ்திர ராசி/சனியின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்துடன் தான் செயல்படுவீர்கள்,  உங்கள் உழைப்பு உங்கள் உயர்வு,  எதிலும் அலட்சியம் இருக்கும், மற்றவர்களுக்கு இருக்கு ஆனால் எனக்கு இல்லையே என்று நினைப்பவர்கள் ஆக இருப்பீர்கள்,  எதிலும்/எதையும் மெதுவாக செய்பவர்களாக இருப்பீர்கள். குள்ளமாக இருப்பீர்கள். உழைப்பின் மூலம் உயரம் தொட்டவர்கள் பெரும்பாலும் நீங்கள்தான். பொதுநலத்தில் சுயநலம் இருக்கும். 

மீனம்:  உபய ராசி/ குருவின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் ஈகை குணம் கொண்டவர், தெய்வ வழிபாடு ஆன்மீகம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள், எதிலும் விட்டுக்கொடுத்து சென்றீர்கள், உங்களிடம் இருப்பதை பிரித்துக் கொடுத்து சந்தோஷம் காண்பீர்கள். 

இது பொது தன்மைகள் மட்டுமே ஒன்றாம் பாவகத்தை வைத்து..

Leave a Reply