4-ஆம் பாவகம்.
லக்னத்திலிருந்து கணக்கிடும்போது நான்காம் இடமாக வருவது 4-ஆம் பாவகம் இந்த 4-ஆம் பாவகம் அல்லது ஆதிபத்தியம். பொதுவாக இந்த நான்காம் வீடு சிறு கேந்திரம் என்று சொல்லப்படுகிறது, ஜோதிடத்தில் விதியை விட விதிவிலக்கு முக்கியம். எனவே கேந்திரத்தில் பாவ கிரகங்கள் இருப்பதும் கோணத்தில் சுபகிரகங்கள் இருப்பதும் உத்தமம். கீழே காணப்படும் காரகத்துவங்கள் அனைத்தும் நான்காம் வீட்டின் காரகத்துவங்கள்

-
- உயிர் காரகத்துவம் உயிர்களும் தாய்
- கல்வி, வீடு, சொகுசு வாழ்க்கை
- வாகனம், உறவினர்கள்
- நம்பிக்கை
- மகிழ்ச்சியான வாழ்க்கை
- நிலம், தோட்டம், கௌரவம்
- வாசனை திரவியங்கள்
- நற்பெயர்
- தாய்வழி உறவு
- உயர்கல்வி
- திடமான எண்ணம் மற்றும் அறிவு
- சுகஸ்தானம் மற்றும் தன் சுகம், அதற்காக செய்யும் செலவுகள்
- எத்தகைய ஒழுக்கத்துடன் இருப்பீர்கள்
மேலே சொன்ன அத்தனை காரகத்துவங்களை நான்காம் பாவகத்தின் உள்ளே உள் அடக்கம் இது வெவ்வேறு கிரக காரகத்துவங்கள் அடங்கி இருக்கின்றன, உதாரணத்திற்கு 4-ஆம் பாவக உயிர் காரகத்துவ கிரகம் சந்திரன் ஏனென்றால் அவர் தாயை குறிக்கக்கூடியவர் அதுபோல், ஜட காரகத்துவம் சுக்கிரன் என்றால் ஏனென்றால் அவர் சொகுசு வாழ்க்கையை குறிக்கக்கூடியவர், கல்வி படிப்பிற்கான கிரகம் புதன். ஆக ஒரு பாவகத்தின் காரகத்துவங்களை குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு கிரகங்கள் கொடுக்கின்றனர். மற்றும் நான்காம் அதிபதி பாவத் பாவக விதிப்படி நான்காம் வீட்டிற்கு 6 8 12ல் மறையாமல் இருக்க வேண்டும்.
குரு: ஜோதிடத்தில் குரு முதன்மை சுபகிரகம் குரு. குரு இருக்கும் வீட்டையும் சுபத்துவ படுத்துவார் தன்னுடைய 5 7 9-ஆம் பார்வையால் பார்க்கும் வீட்டையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவ படுத்துவார்.குரு நான்காம் வீட்டில் இருக்கும் பொழுது எத்தகைய சுபத்துவம் பெற்று இருக்கிறார் என்பதை கணக்கிடுவது மிகவும் முக்கியம் ஏனென்றால் இவர் கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பார் அதாவது கன்னி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் தனித்திருக்கும் குரு கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுப்பார் தனுசு லக்னத்திற்கு நான்காம் வீட்டில் அதாவது மீனத்தில் இருக்கும் குரு கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுப்பார். இது உன்னுடைய கெட்ட காரகத்துவங்கள் அனைத்தையும் எடுப்பார், இதற்கு விதிவிலக்கு குரு செவ்வாயுடன் சேர்ந்து இருப்பது அல்லது கேது உடன் சேர்ந்து இருப்பது அல்லது கடை நிலையாக சனி செவ்வாய் பார்க்கப்பட்டு இருப்பது. மற்றபடி அவர் இந்த இரு லக்னங்களுக்கு இல்லாமல் இருக்கும் பொழுது தன்னுடைய விசேஷப் பார்வை மூலம் 8 12-ஆம் இடத்தைப் பார்ப்பார் அதன் மூலம் வெளிநாடு பிரதேசவாதம் என்ற தன்மை அமைந்து வெளிநாட்டில் பிறக்கும் தன்மை அமையும்.
சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன், வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் 4-ஆம் இடத்தில் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் 4-ஆம் இடத்தில் நின்றால் மற்றொரு பலன். பொதுவாக நான்காம் இடத்தில் சந்திரன் திக் பலம் அடைவார் மற்றும் சந்திரன் நான்காம் இடத்தில் இருப்பது காரகோ பாவ நாஸ்தி என்ற அமைப்பு உருவாகும் அது உயிர் காரகத்துவம் ஆன தாயை கெடுக்கும்..
-
- வளர்பிறை சந்திரன்: வளர்பிறைச் சந்திரன் 4ஆம் வீட்டில் இருப்பது ஒரு விதத்தில் நல்லது மற்றொரு விதத்தில் நல்லது அல்ல, முழு சந்திரனாக இருக்கும்பொழுது ஒரு விதமாகவும் தேய்பிறையில் மற்றொரு விதமாகவும் இருப்பார்
- தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் 4ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்றால் அம்மாவாசை சந்திரன் இன்னொரு சனிக்கு நிகரானவர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது தசமி திதி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் ஏறக்குறைய சனியைப் போல 70% இருப்பார் ஆக 4ஆம் இடத்தின் உயிர் காரகத்துவம் தாயை கெடுத்து தான் அவர் காரகத்துவங்களை செய்வார் அதாவது காரகோ பாவ நாஸ்தி என்ற அமைப்பு இங்கே உருவாகும். காரகோ பாவ நாஸ்தி சந்திரனுக்கு முழு பாவதுவம் இருக்கும்பொழுது செயல்படும் அதாவது சந்திரனுடன் ராகு அல்லது சனியும் அல்லது அம்மாவாசை சந்திரனாக இருக்கும் பொழுது இவர்கள் தொடர்பு பெற்றாலோ நடைபெறும்
சூரியன்: சூரியனுக்கு நான்காமிடம் ஒரு நல்ல இடம் ஏனென்றால் சூரியன் ஒரு அரை பாவகிரகம், ஒரு பாவ கிரகம் கேந்திர அதிபதி ஆகலாம் என்ற விதிக்கு இது அடங்கும். நான்காம் இடத்தில் சூரியன் இருக்கும்போது அவருடைய ஏழாம் பார்வை மூலம் பத்தாம் வீட்டை தொடர்பு கொள்வார் இது ஜாதகருக்கு நல்ல தலைமை தாங்கும் பண்பு மற்றும் குணத்தை கொடுக்கும். சூரியன் நான்காமிடத்தில் திக் பலத்தை இழப்பார். நான்காம் வீட்டிற்கு சொந்தமான கல்வி, நம்பிக்கை, சொகுசு வாழ்க்கை அனைத்தையும் அந்தந்த காரக கிரகம் வலுவாக இருக்கும் பொழுது சூரியன் நான்காம் இடத்தில் இருக்க பெற்ற ஜாதகர் பெறுவார்.
புதன்: தனித்திருக்கும் புதன் ஜோதிடத்தில் ஒரு சுப கிரகம், அத்தகைய புதன் 4ஆம் இடத்தில் இருக்கும் பொழுது உங்களுக்கு கல்வியில் மேன்மை, நற்பெயர் திடமான எண்ணம் மற்றும் அறிவுக்கூர்மை அனைத்தையும் தனித்த புதன் தருவார் ஆனால் இவரே ஆட்சியோ உச்சமோ அடைந்திருந்தால் மற்றும் அதிக சுபத்துவம் எனப்படும் சந்திரனின் பார்வை அல்லது குருவின் பார்வை பெற்றிருந்தாலோ இங்கே கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுப்பார். அதாவது அவருடைய முக்கிய காரகத்துவம் ஆன கல்வி மற்றும் படிப்பு இதை முற்றிலும் கெடுப்பார். இந்த கேந்திராதிபத்திய தோஷம் புதன் 4ஆம் இடத்தில் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் உபய லக்னமாக மீன மற்றும் மிதுன லக்னத்திற்கு இது பெரும்பாலும் அமையும். இதற்கு விதிவிலக்கு புதன் முழு சுபத்துவம் பெற்று இருக்கக் கூடாது மாறாக சூரியனுடன் இருப்பது நல்லதை தரும்.
சுக்கிரன்: ஜோதிடத்தில் குருவுக்கு அடுத்த சுப கிரகம் சுக்கிரன், அத்தகைய சுக்கிரன் 4ஆம் இடத்தில் திக் பலம் பெறுவார், ஒரு சுபகிரகம் இயந்திரத்திற்கு அதிபதியாகக் கூடாது என்ற விதிப்படி இது அத்தகைய நல்ல இடம் இல்லை மற்றபடி தன்னுடைய ஏழாம் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்த்து சுபத்துவ படுத்துவார், மற்றும் நான் சுப விஷயங்கள் சொகுசு வீடு வண்டி வாகனம் அனைத்து கொடுக்க கொடுக்கக்கூடிய இருப்பார். சுக்கிரன் கும்பம் மற்றும் கடக லக்னத்திற்கு நான்காமிடத்தில் இருக்கும் பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுக்கும் தகுதியைப் பெறுகிறார் ஆகையால் கும்பம் மற்றும் கடக லக்னத்திற்கு சுக்கிரன் நான்காம் இடத்தில் இருப்பது அதுவும் அதிக சுபத்துவம் பெற்று இருப்பது நல்லது அல்ல. சுக்கிரன் மூலம் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றவர் வீடு வாகனம் சுகம் என்று எதுவும் இல்லாத நிலைமை உண்டாகும்.
செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கால் பாவ கிரகம், இருக்கும் வீட்டை கெடுத்து தான் தன்னுடைய காரகத்துவங்களை மற்றும் பலன்களை செய்வார். செவ்வாய் நான்காம் இடத்தில் இருப்பது சிறப்பு தான் என்றால் ஒரு பாபர் கேந்திரத்தில் அதிபதி ஆகலாம் என்ற விதியின் கீழ், நட்பு நிலைமையில் இருக்கும் பொழுது நல்ல அமைப்பைக் கொடுப்பார் மேலும் செவ்வாய் குருவால் அல்லது சுக்கிரனால் பார்க்கப்படும் பொழுது சொகுசு வாழ்க்கை சொந்த வீடு போன்ற அமைப்பு உண்டாகும். செவ்வாய் இவ்விடத்தில் ராகுவுடன் சேர்வது நல்லது அல்ல ஏனென்றால் அவர் எதையும் தரக்கூடிய நிலையில் இருக்க மாட்டார். செவ்வாய் நான்காம் இடத்தில் திக் பலத்தை இழப்பார் ஆனால் தன்னுடைய பார்வை மூலம் பத்தாம் இடத்தை பார்த்து தொழில் மூலம் லாபங்களை கொடுப்பார். தன்னுடைய நான்காம் பார்வை மூலம் ஏழாம் இடத்தைப் பார்ப்பார் இது தாமத திருமணம் மற்றும் 7ஆம் வீடு பாவத்துக்கும் அடைந்து காதல் திருமணத்திற்கு வழிவகுக்கும் சுக்கிரனின் நிலையை பொருத்து.
சனி: ஜோதிடத்தில் ஒரு கிரகம் முழுக்க பாவகிரகம் என்றால் அந்த கிரகம் சனிதான், சனி பகவான் எந்த வீட்டில் இருந்தாலும் இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவங்களை கெடுத்தான் பலனை தருவார் ஆகையால் சனி பகவான் 4-ஆம் வீட்டில் இருக்கும்பொழுது இருக்கும் வீட்டை எடுத்துதான் பலன் செய்வார், ஒரு பாவ கிரகம் கேந்திரத்தில் அதிபதி ஆகலாம் என்ற விதியின் கீழ் நட்பு நிலைமைகளில் இருக்கும்பொழுது மற்றும் குரு சுக்கிரன் தொடர்பு பெற்று இருக்கும் பொழுதும் நல்லதே செய்வார். சனி பகவானின் விசேஷ மூன்றாம் பார்வை மூலம் ஆறாம் வீட்டை பார்ப்பார் மற்றும் 10ஆம் பார்வை மூலம் லக்னத்தை பார்ப்பார் இவை இரண்டும் நல்லதல்ல, ஏனென்றால் இந்தப் பார்வை ஒரே நேரத்தில் லக்னத்தைப் பார்த்து பாவத்துக்கும் படுத்தி ஆறாம் வீட்டையும் பார்ப்பதால் கடன் நோய் போன்ற விஷயங்கள் வரும். ஒருவர் ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் சனி இருக்கும் பொழுது அவருக்கு வீடு வண்டி வாகனம் போன்றவை செகண்ட் ஹேண்ட் (யாவது ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தியது பொருள்) என்ற வகையில் தான் கிடைக்கும்.
ராகு:மேஷம், ரிஷபம் கடகம் கன்னி, மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் ராகு நற்பலனை செய்வார். நான் நான்காமிடத்தின் அதிபர் யார் என்பதை வைத்துதான் ராகுவின் குணாதிசயங்களை கணக்கிட முடியும் ஒருவேளை நான்காம் அதிபதி சுக்கிரனாக இருக்கும் பட்சத்தில் ராகு சுக்கிரனை போலவே பலன் தருவார், இங்கே சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சமாக இருந்தால் வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் என்ற நிலைக்கு வந்து அமோகமான பலனைச் செய்வார் ராகுவோ அல்லது கேதுவோ கேந்திராதிபத்திய தோஷம் கிடையவே கிடையாது.. மேஷம், ரிஷபம் கடகம் கன்னி, மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் ராகு நற்பலனை செய்வார். மற்றும் கேந்திர கோணத்தில் இருக்கும் ராகு இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவத்தை எடுத்துதான் பலனை தருவார்.4ஆம் வீட்டில் ராகு உயிர் காரகத்துவம் ஆன தாயைக் கெடுத்து ஜட காரகத்துவம் தத்துவங்களான வண்டி, வீடு, வாகன, சொகுசு போன்றவற்றை கொடுப்பார்.
கேது: பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர், கேதுவும் நிழல் கிரகம் தான் ஆனால் ராகுவைப் போல் ஆழ்ந்த இருள் கிரகம் இல்லை ஆகையால் கேது எத்தகைய சுபத்துவமாக 4-ஆம் வீட்டில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து ஒழுக்கம் ஆன்மிகம் போன்றவை அமையும், வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் போன்றவை ஆனால் அமோகமான பலனைச் செய்வார் மற்றும் கேதுவிற்கு குரு சுக்கிர பார்வை கிடைக்கும் பொழுது மிகப்பெரிய சொகுசு வாழ்க்கையை கொடுப்பார்
இது 4-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a Reply