7-ஆம் பாவகம்.
லக்னத்திலிருந்து கணக்கிடும்போது 7-ஆம் இடமாக வருவது 7-ஆம் பாவகம் அல்லது ஆதிபத்தியம், ஒரு ஜாதகத்தில் 7-ஆம் பாவகம் அதிக முக்கியத்துவம் வாழ்ந்தது ஏனென்றால் இந்த 7-ஆம் வீட்டின் சுபத்துவம் வைத்துதான் கணவன்/ மனைவி/ நண்பர்கள்/ பங்குதாரர்கள் போன்றவற்றை பெறுகிறோம். 7-ஆம் பாவகத்தின் இன்னொரு விசேஷ தன்மை என்னவென்றால் 7-ஆம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் 7-ஆம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பார்கள், அந்தப்பார்வை குணத்தை வைத்து தான் ஜாதகருடைய குணாதிசயங்களும் அமையும். எந்த ஒரு ஜாதகத்திலும் 7-ஆம் பாவகம் எக்காரணத்தைக் கொண்டும் கெட்டுப் போகக் கூடாது அதாவது சனி, செவ்வாய், ராகு போன்ற முக்கூட்டு கிரகங்களின் தாக்குதல் இருக்கக்கூடாது, இது ஏனென்றால் ஒருவர் என்ன பிரச்சனை இருந்தாலும் கடைசியில் தன் வீட்டில் மனைவியிடமோ அல்லது கணவனிடமோ அதை ஆலோசனை செய்கிறோம் அப்படிப்பட்ட 7-ஆம் பாவகம் கெட்டுவிட்டால் ஒரு மனிதனுக்கு வீட்டில் நிம்மதி இருக்காது. 3,7,12-ஆம் பாவம் வைத்துதான் ஒருவர் உறவின்போது எத்தகைய நாட்டம் இருக்கும் என்பதையும் அறிகிறோம், இந்த 7-ஆம் பாவம் ஜாதகர் உறவில் எத்தகைய சிந்தனை மற்றும் நாட்டம் உடையவர் என்பதையும் குறிக்கிறது.

7-ஆம் பாவகத்தில் காரகத்துவங்களை கீழே பார்ப்போம்
-
- கணவன/ மனைவி/ பங்குதாரர்கள்/ நண்பர்கள்
- திருமணம், உறவு, கட்டுப்பாடற்ற உறவு
- காதல், காதலில் வெற்றி, சுவையான உணவு
- விந்து, கணவன்/மனைவியின் கற்புநிலை
- முதல் மனைவி
- வாக்குவாதம்
- தாம்பூலம் தரித்தல்
- ஞாபக சக்தி
குரு: ஜோதிடத்தில் குரு முதன்மை சுபகிரகம் குரு. குரு இருக்கும் வீட்டையும் சுபத்துவ படுத்துவார் தன்னுடைய 5 7 9-ஆம் பார்வையால் பார்க்கும் வீட்டையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவ படுத்துவார். குரு 7-ஆம் இடத்தில் இருப்பது ஜாதகருக்கு ஒரு அற்புதமான இடம் ஏனென்றால் குருவின் ஏழாம் பார்வை லக்னத்தில் விழும் என்பதால் ஜாதக ஒரு நல்ல எண்ணம் பெற்றவராக இருப்பார், தெய்வீக சிந்தனை, நல்லவர், எதிலும் நிதானம் போன்ற அனைத்து காரகத்துவங்கள் வறுத்து பெற்றவராக இருப்பார், குரு ஏழாம் இடத்தில் இருக்கப் பெற்றவர் நல்ல தெய்வீக சிந்தனை உடைய கணவன் அல்லது மனைவி அமைக்கப் பெறுவார். தொழிலில் பார்ட்னர் எனும் பங்குதாரர் நல்லவராக இருப்பார், நல்ல நண்பர்கள் பெறுவார்கள் காதலில் வெற்றி கட்டாயம் இருக்கும். குருவின் ஐந்தாம் பார்வை 11-ஆம் இடத்தில் விழுவதால் லாபம் அதிகரிக்கும் மற்றும் 9-ஆம் பார்வை 3-ஆம் இடத்தில் விழுவதால் தைரியம் வீரியம் கீர்த்தி போன்ற அனைத்து மூன்றாம் அதிபதியும் வளர்க்கப்படும். உபய லக்னத்திற்கு குறிப்பாக மிதுனம் அல்லது கன்னி லக்னத்திற்கு ஏழாமிடத்தில் அதிக சுபத்துவம் ஆக குரு இருக்கும் பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுப்பார், இந்த நிலை ஜாதகருக்கு திருமணமே ஆகாத நிலை உண்டாகும் ஆனால் இது லட்சத்தில் ஒரு ஜாதகருக்கு தான் அமையும்.
சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன், வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் 7-ஆம் இடத்தில் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் 7-ஆம் இடத்தில் நின்றால் மற்றொரு பலன்.
-
- வளர்பிறை சந்திரன்: தசமி தாண்டிய வளர்பிறை சந்திரன் 7-ஆம் இருக்கும் பொழுது குருவிற்கு சொன்னதுபோல் 7-ஆம் இடத்து சுப விஷயங்கள் மட்டுமே நடக்கும் ஜாதகருக்கு பொறுமை குணம் அதிகமாக இருக்கும் எதிலும் கருணை மற்றும் எதிலும் விட்டுக் கொடுத்து செல்லும் குணம் அமையும், நல்ல மனைவி அல்லது கணவன் அமையும், கணவன்-மனைவி இடையே வாக்குவாதங்கள் மிக மிக குறைவாக இருக்கும்
- தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் 5ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்றால் அம்மாவாசை சந்திரன் இன்னொரு சனிக்கு நிகரானவர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது தசமி திதி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் ஏறக்குறைய சனியைப் போல 70% இருப்பார் ஆக 7ஆம் இடத்தின் அசுப காரகத்துவங்கள் ஆன கணவன்/மனைவியிடையே சந்தேக குணம், பங்குதாரரை ஏமாற்றும் எண்ணம், நண்பர்களால் பிரச்சனைகள் தொந்தரவுகள், முறையற்ற காமம் அல்லது மறுக்கப்பட்ட காமம் போன்றவை
சூரியன்: ஜோதிடத்தில் சூரியன் ஒரு அரை பாவகிரகம் என்பதால் சூரியன் 7-ஆம் இடத்தில் இருப்பது நல்லது அல்ல, அவர் இருக்கும் வீட்டை கிடைத்ததால் பலன் செய்கிறார் ஆனால் ஜாதகருக்கு சூரியனின் காரகத்துவங்கள் தலைமை தாங்கும் பண்பு மற்றும் தன்னம்பிக்கை உயர்வாக இருக்கும், ஜாதகர் ஆணாக இருந்தால் மனைவியின் கை அல்லது பெண்ணாக இருந்தால் கணவனின் கை குடும்பத்தில் ஓங்கியிருக்கும்.
புதன்: தனித்திருக்கும் புதன் ஜோதிடத்தில் ஒரு சுப கிரகம், அத்தகைய புதன் 7ஆம் இடத்தில் இருக்கும் பொழுது பெரும்பாலும் சொந்தத்தில் திருமணம் நடக்கும் அதாவது கணவன் அல்லது மனைவி ஜாதகருக்கு மிகவும் பரிச்சயமானவர் ஆக இருப்பார்கள், புதன் தனது ஏழாம் பார்வையால் லக்னத்தை பார்ப்பார் என்பதால் ஜாதகருக்கு புத்தி கூர்மை அறிவு மற்றும் டைமிங் சென்ஸ் அதிகமாக இருக்கும், பேசுபவரின் மனமறிந்து பதில் சொல்பவராக ஜாதகர் இருப்பார். பொதுவாக உபய லக்னத்திற்கு குறிப்பாக மீனம் அல்லது தனுசு லக்னத்திற்கு ஏழாமிடத்தில் அதிக சுபத்துவம் ஆக புதன் இருக்கும் பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுப்பார், இந்த நிலை ஜாதகருக்கு திருமணமே ஆகாத நிலை உண்டாகும் ஆனால் இது லட்சத்தில் ஒரு ஜாதகருக்கு தான் அமையும்..
சுக்கிரன்: ஜோதிடத்தில் குருவுக்கு அடுத்த சுப கிரகம் சுக்கிரன், சுக்கிரன் ஏழாம் இடத்தில் இருந்தால் பொதுவாக காரகோ பாவ நாஸ்தி என்ற அமைப்பு அமையும், இது என்னவென்றால் ஏழாமிடத்தில் உயிர் காரகத்துவத்தை சுக்கிரன் கெடுப்பார் அதாவது கணவன் அல்லது மனைவியை கெடுப்பார் ஆனால் இதற்கு சுக்கிரன் மற்றும் ஏழாம் பாவகம் முழுவதும் கெட்டு இருந்தால் மட்டுமே இது நடக்கும். மற்றபடி ஏழாம் பாவத்தில் சுக்கிரன் இருக்க பெற்ற ஜாதகம் அழகான கணவன் அல்லது அழகான மனைவி அமைக்கப் பெறுவார். சுக்கிரனின் 7ம் பார்வை லக்னத்தில் விழும் என்பதால் ஜாதகர் பெண்களை மதிக்கும் தன்மை கொண்டவராக இருப்பார் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் திண்ணமாக இருக்கும்.
செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கால் பாவ கிரகம், இருக்கும் வீட்டை கெடுத்துதான் தன்னுடைய காரகத்துவங்களை மற்றும் பலன்களை செய்வார். பெரும்பாலும் செவ்வாய் மற்றும் சனி தனித்தோ அல்லது சேர்ந்தோம் ஏழாம் இடத்தில் இருப்பது நல்லது அல்ல, ஏனென்றால் இது ஏழாம் இடத்தையும் பாதிக்கும் லக்னத்தையும் பாதிக்கும். ஏழாமிடத்தில் தனித்திருக்கும் செவ்வாய் தாமத திருமணம், அந்நிய மனைவி, ஜாதகருக்கு எதிலும் ஒரு அவசரம் மற்றும் கோபம் இருக்கும், ஏழாமிடத்தில் சுபத்துவம் ஆக இருக்கும் செவ்வாய் தாமதம் ஆகியும் நல்ல மனைவி/ கணவன் மற்றும் எதிலும் சிந்தித்து செயல்படும் திறன் கொண்டவராக இருப்பார். இங்கு செவ்வாயுடன் ராகு சேரும்போது அந்த பாவத்தை கெடுப்பார், இனிய மத கணவன்/ மனைவி அமைக்கப் பெறுவார். கட்டுப்பாடற்ற உறவு அல்லது மாறுபட்ட காமம் போன்றவை இருக்கும்.
சனி: ஜோதிடத்தில் ஒரு கிரகம் முழுக்க பாவகிரகம் என்றால் அந்த கிரகம் சனிதான், சனி பகவான் எந்த வீட்டில் இருந்தாலும் இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவங்களை கெடுத்தான் பலனை தருவார் ஆகையால் சனி பகவான் 7-ஆம் வீட்டில் இருக்கும்பொழுது மேலே செவ்வாய்க்கு சொன்ன அனைத்தும் சனிக்கு பொருந்தும் கூடுதலாக சனி ஜாதகருக்கு தாழ்வு மனப்பான்மை, பொறாமை, குள்ளநரித்தனம் போன்ற அனைத்து மனிதனுக்கு தேவையற்ற குணாதிசயங்களையும் தருவார். ஆனால் ஏழாம் இடத்தில் சனி திக்பலம் எனும் சூட்சமவலு பெறுவார் இது ஒரு விதத்தில் நல்லது என்றாலும் சுபத்துவம் பெற்று சனி இருக்கும் பொழுதுதான் முழு நற்பலனை செய்வார். சனி ராகு செவ்வாய் போன்ற முக்கூட்டு கிரக தாக்குதல் ஏழாம் பாவத்தில் இருக்கும்பொழுது ஒருவருக்கு தாம்பத்திய சுகம் மறைக்கப்படும் அல்லது மாறுபட்ட காமம் இருக்கும், திருமணம் தாமதமாகும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் ஆகும்.
ராகு: மேஷம், ரிஷபம் கடகம் கன்னி, மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் ராகு நற்பலனை செய்வார், ஏழாமிடத்தில் ராகு இருக்கும்பொழுது லக்னத்தில் கேது இருப்பார் இந்த நிலை வேறு மத கணவன் அல்லது மனைவி திருமணம், தாமத திருமணம் போன்ற அமைப்பு உண்டாகும். மற்றபடி ராகுவின் சுபத்துவ நிலை பொருத்தே பலன்கள் வேறுபடும், எந்த நிலையிலும் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவிற்கு சனி செவ்வாய் தொடர்புகள் இருக்கக் கூடாது. சனி செவ்வாய் தொடர்புகள் இல்லாமல் சுபத்துவம் மேலோங்கி இருக்கும் ஏழாம் இடத்து ராகு அபாரமான நன்மைகளை செய்வார் மற்றும் ஏழாம் வீட்டின் அதிபதி உச்சமோ அல்லது ஆட்சியோ ஆனால் ராகு அபரிமிதமான நன்மைகளை செய்வார்.
கேது: பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர், கேது ஏழில் இருக்கும் பொழுது ராகு லக்னத்தில் இருப்பார் இந்த நிலை அன்னிய மத திருமணம் மற்றும் அன்னிய கணவன் அல்லது மனைவி பெரும் நிலையாகும். தாமத திருமணம் போன்ற அமைப்பு உண்டாகும். மற்றபடி கேதுவின் சுபத்துவ நிலை பொருத்தே பலன்கள் வேறுபடும், எந்த நிலையிலும் ஏழாம் இடத்தில் இருக்கும் கேதுவிற்கு சனி செவ்வாய் தொடர்புகள் இருக்கக் கூடாது. சனி செவ்வாய் தொடர்புகள் இல்லாமல் சுபத்துவம் மேலோங்கி இருக்கும் ஏழாம் இடத்து கேது அபாரமான நன்மைகளை செய்வார் மற்றும் ஏழாம் வீட்டின் அதிபதி உச்சமோ அல்லது ஆட்சியோ ஆனால் கேது அபரிமிதமான நன்மைகளை செய்வார்.
இது 7-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a reply to Kalki Cancel reply